• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வருமா..? கண்டறிய இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..!

குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வருமா..? கண்டறிய இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..!

மனம் விட்டு பேசுங்கள் : புரிந்துகொள்ளக் கூடிய பிள்ளைகளாக இருந்தால் அவர்களிடம் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் மன ஓட்டத்தைக் கண்டறியுங்கள்.

மனம் விட்டு பேசுங்கள் : புரிந்துகொள்ளக் கூடிய பிள்ளைகளாக இருந்தால் அவர்களிடம் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் மன ஓட்டத்தைக் கண்டறியுங்கள்.

அவர்களின் மன அழுத்தத்தை இதுவரை நீங்கள் கண்டறியாமல் இருக்கலாம்.

  • Share this:
    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வரும். ஆனால் அவர்களின் மன அழுத்த அறிகுறிகள் என்பது பெரியவர்களைக் காட்டிலும் வித்தியாசமானது. அதனால் கூட அவர்களின் மன அழுத்தத்தை இதுவரை நீங்கள் கண்டறியாமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற பிரச்னைகளை அவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.

    எரிச்சல் , கோபம் : எதற்கு எடுத்தாலும் கோபப்படுகிறார்கள், எரிச்சலாக நடந்துகொள்கிறார்கள் எனில் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம்.

    சோகம் , தனிமை : வழக்கத்தை காட்டிலும் ஆக்டிவாக இல்லாமல் சோகமாகவும், சோர்வு நிறைந்த முகத்தோடு இருப்பார்கள். எதிலும் ஈடுபாடு இல்லாமல் தனிமையாக இருத்தலும் மன அழுத்த அறிகுறி.

    தூக்கத்தில் மாற்றம் : தூக்கமின்மையால் விழித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது வழக்கத்திற்கு மாறாக ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள்.



     கவனமின்மை : எந்த வேலை கொடுத்தாலும் கவனமின்மையாக இருப்பார்கள். படிப்பிலும் கவனம் சிதறலாம். எனவே கவனம் காட்டுதல் அவசியம்.

    நாட்டமின்மை : பள்ளி , வீடு என எப்போதும் துருதுருவென இருப்போர் திடீரென எதிலும் நாட்டமில்லாமல் இருப்பார்கள். ஹாபி, தனக்கு பிடித்த விஷயங்களில் கூட ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

    நோய் பிரச்னை : உடல் நலம் நன்றாக இருந்தாலும் கவனம் ஈர்க்க வயிற்று வலி, தலை வலி என சொல்லி கவனம் ஈர்க்கச் செய்வார்கள்.



    தாழ்வு மனப்பான்மை : அவர்கள் உங்களுடன் உரையாடும்போது இதை என்னால் செய்ய முடியாது, எனக்கு வராது, எனக்குத் தகுதியில்லை என தன்னைத் தாழ்வாக கருதி பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசும்போது அதை கண்டுகொள்ளாமல் விடாதீர்கள். அப்படியே பேச்சுக்கொடுத்து பிரச்னை என்ன என்பதை கண்டறியுங்கள்.

    தற்கொலை : குழந்தைகள் ஒருபடி மேலே சென்று தற்கொலை குறித்து பேசுவார்கள். தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனால் இது அரிதான அறிகுறி.

    படிக்க :

    வெந்நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..?

    குளித்தவுடன் துடைக்கும் டவலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்..? அதிலும் கிருமிகள் வாழும் என்பது தெரியுமா.?




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: