Home /News /lifestyle /

பச்சிளம் குழந்தைகளுக்கு எவ்வளவு பாலூட்ட வேண்டும்? தாய்மார்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்..

பச்சிளம் குழந்தைகளுக்கு எவ்வளவு பாலூட்ட வேண்டும்? தாய்மார்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Parenting Tips : பிறந்த பச்சிளம் குழந்தையின் வயிறு மிகவும் சிறியதாக இருக்கும்.

    குழந்தையின் வயது மற்றும் தேவையை பொருத்து, அதற்கு பாலூட்டும் அளவையும், நேரத்தையும் தாய்மார்கள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். பிறந்த பச்சிளம் குழந்தையின் வயிறு மிகவும் சிறியதாக இருக்கும். ஆகவே, அந்த சமயத்தில் 1 முதல் 1.5 டீ ஸ்பூன் அளவு பால் கூட அதற்கு போதுமானது. குழந்தை வளரும் போது, அதன் குடலும் வளர்ச்சி அடைந்து விரிவடைய தொடங்கும்.

    அதேசமயம், குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், அதன் தேவை என்ன என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஒருவேளை குழந்தைக்கு நீங்கள் புட்டிப்பால் கொடுத்து வந்தீர்கள் என்றால், அளவை கணக்கிடுவது கொஞ்சம் எளிமையாக இருக்கும். அதுவே, தாய்மார்கள் நேரடியாக பாலூட்டும் சமயத்தில் அதை கணக்கீடு செய்ய இயலாது.

    குழந்தைக்கு எத்தனை முறை, எப்போதெல்லாம் பாலூட்ட வேண்டும்:

    குழந்தை பிறந்த முதல் ஒரு வாரத்தில் 8 முதல் 12 முறை பாலூட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 4 மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு பாலூட்டாமல் இருந்து விடாதீர்கள். குழந்தை வளர, வளர அது பால் குடிக்கும் வேகம் அதிகரிக்கும். ஆகவே, குறைவான நேரத்தில் அதிகமான பாலை குழந்தை குடிக்கத் தொடங்கும். இதைப் பொருத்து ஒரு அட்டவணையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

    also read : ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா… சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைந்து குணமாக இதை செய்யுங்கள்!

    ஒவ்வொரு குழந்தைக்கும் பாலூட்டும் அட்டவணை என்பது மாறுபடுகிறது. பெரும்பாலும், 1 முதல் 3 மாத குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 முறை பாலூட்ட வேண்டும். 3 முதல் 6 மாத குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை பாலூட்டலாம். குழந்தைக்கு 6 மாதம் ஆகிவிட்டால், அது தினசரி 6 முறை பால் குடிக்கும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது பாலூட்டும் எண்ணிக்கையை 4ஆக குறைத்துக் கொள்ளலாம். இந்த சமயத்தில், குழந்தைக்கான ஊட்டச்சத்து தேவை கருதி, அரைக்கப்பட்ட அல்லது மசித்து பிசையப்பட்ட உணவு வகைகளை கொடுக்க தொடங்கலாம்.



    குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் முறை: 

    தினசரி 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை புட்டிப்பால் கொடுக்கலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த இடைவெளியை 3 முதல் 4 மணி நேரமாக அதிகரிக்கலாம். 4 முதல் 6 மாத குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மணி நேர இடைவெளியிலும், 6 மாதங்களுக்கு பிறகு 4 முதல் 5 மணி நேர இடைவெளியிலும் பாலூட்டலாம்.

    குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதவை:

    ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் தவிர்த்து வேறெதும் கொடுக்கக் கூடாது. தண்ணீர், ஜூஸ் அல்லது பசும்பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு 6 மாதங்கள் ஆன பிறகு தண்ணீர் கொடுக்க தொடங்கலாம்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Parenting

    அடுத்த செய்தி