என் 7 வயது மகன் சானிடரி நாப்கின்களின் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அப்படி என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனவே நான் பெண்களுக்கு சிறுநீர் வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்த முடியாது எனவேதான் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினேன். அன்றையிலிருந்து அவன் சானிடரி நாப்கின் என்று சொல்வதற்கு பதிலாக அம்மாவின் டயப்பர் என்று கூறுகிறான். அதை கேட்கும்போது நான் அவனிடம் தவறான விளக்கத்தைக் கொடுத்துவிட்டேனோ என சங்கடமாக உள்ளது.
என்னைப் பொருத்தவரை பிள்ளைகள் கேள்வி கேட்கும்போது மறைக்காமல் அதைப் பற்றி நேரடியாகவும் , நேர்மையாகவும் பதிலளிப்பதே சிறந்தது. இந்த பயம் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதேசமயம் அவர்களுக்கு சரியான முறையில் கற்பிப்பதும் நம் கடமை. பரவாயில்லை..இது ஒன்றும் தாமதமில்லை. உங்கள் பிள்ளையிடம் சென்று உங்கள் தவறை ஒப்புக்கொள்ளுங்கள்.
அதேபோல் பெற்றோர்களும் மனிதர்கள்தானே..எனவே தவறு செய்வது இயல்பு. தவறு செய்யாத மனிதர்களே இல்லை என்று கூறுங்கள். அதேசமயம் தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்த தவறுகளை சரி செய்து திருத்திக்கொள்வது அவசியம் என்பதையும் மறவாமல் கற்றுக்கொடுங்கள். எனவே இதன் மூலம் உங்கள் மகனுக்கு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுக்க சிறந்த வாய்ப்பு.
தற்போது உங்கள் மகனின் கேள்விக்கு வருவோம்...ஒரு பையனுக்கு மாதவிடாய் பற்றி எப்படி விளக்குவது..? சிம்பிள்..நேர்மையாக விளக்கினாலே போதும். உங்கள் மகனுக்கு 7 வயது என்கிறீர்கள். எனவே அவன் மாதவிடாய் பற்றிய அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். ஆனால் உங்கள் மகன் இனப்பெருக்க உடற்கூறியல் குறித்த விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதாவது வெஜினா, கருப்பை போன்ற விஷயங்கள்..ஏனெனில் அப்போதுதான் இதைப்பற்றி விளக்கினால் அவனால் புரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் எவ்வாறு அவனிடம் சொல்ல வேண்டும் என்றால்.. பெண்கள் பெரியவர்களாக வளரும்போது அதாவது 12-13 வயதை அடையும்போது அவர்களுடைய உடலில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களுக்கு உடலின் சுரக்கும் ஹார்மோன்களே காரணம். எனவே அவ்வாறு மாற்றம் நிகழும்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க தயாராகிறாள்.
இது அம்மா எப்படி ஒரு விருந்தினர் வீட்டிற்கு வருவதற்கு முன் வீட்டை சுத்தம் செய்து தயார் செய்கிறேனோ அப்படித்தான் இதுவும்..அப்படி குழந்தை வயிற்றுக்குள் இல்லை எனில் வயிற்றுக்குள் உருவாகியிருக்கும் அந்த காலி இடத்தில் பஞ்சு மெத்தைகள் இயற்கையாகவே வெளியேறிவிடும். அப்போது சில இரத்தக் கசிவுகளும் உண்டாகும். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாகவோ, பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்றோ அர்த்தமில்லை. உடல் குழந்தைக்காக தன்னை தயார் படுத்துகொண்டிருந்த அனைத்தையும் வெளியேற்றிவிடும் “ இவ்வாறு கூறுங்கள்.
உங்கள் மனைவிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஒருவித பயம் உள்ளதா..? தாம்பத்தியத்தை தவிர்க்கிறாரா? என்ன காரணம்?
இந்த விஷயத்தில் உங்கள் மகன் தெளிவடைந்துவிட்டால் அதன் பிறகு சானிடரி நாப்கின்கள் பற்றி விளக்குங்கள். அதாவது பெண்கள் வெளியேறும் அந்த இரத்தத்தை உறிஞ்சி, சுத்தம் செய்யவே இதை பயன்படுத்துகின்றனர். கூடுதலாக நீங்கள் சாம்பிலுக்கு ஒரு நாப்கினை எடுத்து தண்ணீரை பயன்படுத்தி எப்படி இது பயன்படுத்தப்படுகிறது என்பதை கைகளில் செய்து காட்டுங்கள். இப்படி செய்வதால் அவர்கள் மாதவிடாய் பற்றியும், மாதவிடாய் பொருட்கள் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.