HOME»NEWS»LIFESTYLE»parenting how to explain baby born process to 5 year old child answeres by pallavi barnwal esr swpb

குழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்..? அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..?

பொதுவாக பிள்ளைகளுக்கு இதுபோன்ற கேள்விகள் வருவது இயல்பான விஷயம்தான். எனவே மிகவும் விளக்கமாக அல்லாமல் மிகவும் அடிப்படை தகவலை மட்டும் புரியும்படி கூறினால் போதும்.

குழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்..? அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..?
மாதிரி படம்
  • Share this:

கேள்வி : தற்போது இரண்டாவது கர்பமாக இருக்கிறேன். முதல் குழந்தைக்கு 5 வயது ஆகிறது. ஒரு நாள் குழந்தை எப்படி வயிற்றுக்குள் செல்கிறது..? எப்படி வெளியே வருகிறது..? என்று கேட்டான். அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. என்ன செய்வது..? எனக்கு உதவுங்கள்..!

பல்லவியின் பதில் : இதற்கான பதில் உங்கள் குழந்தையின் வயதைப் பொருத்துதான் கூற முடியும். அதற்காக பயப்படவும் தேவையில்லை. பொதுவாக பிள்ளைகளுக்கு இதுபோன்ற கேள்விகள் வருவது இயல்பான விஷயம்தான். எனவே மிகவும் விளக்கமாக அல்லாமல் மிகவும் அடிப்படை தகவலை மட்டும் புரியும்படி கூறினால் போதும்.

அதாவது அப்பாவும் நானும் ஒவ்வொரு விதைகளை வைத்திருப்போம். அதில் அம்மாவின் விதை ஏற்கெனவே வயிற்றுக்குள் இருக்கும். அப்பாவின் விதையை என்னிடம் கொடுப்பார். அதை நான் வயிற்றுக்குள் செலுத்தினால் இரு விதைகளும் இணைந்து குழந்தை உருவாகும் என கூறுங்கள். இதே 6-7 வயது குழந்தையாக இருப்பின் ஆண்குறி வழியாக அப்பா எனக்கு விதையை அனுப்ப என் வயிற்றில் குழந்தை உருவாகும் என்று கூறுங்கள்.





 

பிறகு அந்த விதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கை, கால்கள் உருவாகி முழுமையான குழந்தையாக வளர்ந்த பின் வெளியே வர முயற்சிக்கும். கிட்டத்தட்ட செடிக்கு விதை போட்டு மரமாக வளர்வது போன்று...பிறகு டாக்டரும் அம்மாவும் இணைந்து குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுப்போம் என்று கூறுங்கள்.

உங்கள் மனைவிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஒருவித பயம் உள்ளதா..? தாம்பத்தியத்தை தவிர்க்கிறாரா? என்ன காரணம்?

ஒருவேளை உங்கள் குழந்தை பருவ நிலையை அடையும்போது இன்னும் கூடுதல் தகவல்களாக கருமுட்டை, விந்து , குழந்தைப் பிறப்பும் இனப்பெருக்கம் பற்றி கூறுங்கள். ஆண்குறியில் இருக்கும் விந்து உடலுறவின் மூலம் பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டு குழந்தை உருவாகிறது என்று நேரடியாகவே விளக்கலாம்.

இதைப் பற்றி கலந்துரையாடும்போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்...செக்ஸ் என்பது வெறும் திருமணமான தம்பதிகளுக்கு மட்டும் நிகழ்வதில்லை. அதேசமயம் இனப்பெருக்கத்திற்காக செய்யக் கூடியதும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.



அதேபோல் குழந்தை பிறக்கும் நிகழ்வு குறித்தும் எப்படி கர்பம் தரித்தல் நிகழ்கிறது என்பதையும் கூறுவது அவசியம். அதேபோல் செக்ஸ் என்பது வர்புறுத்தி செய்வது அல்ல..கட்டாயப்படுத்தக் கூடாது, இருவரின் விருப்பத்துடன் நிகழக்கூடியது என்பதையும் கூறுங்கள். பிள்ளைகளிடம் இது குறித்து வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசுவது உங்களுக்கும் , உங்கள் பிள்ளைக்கும் சௌகரியமாக இருக்கும்.

இதனால் குழந்தைக்கும் உங்கள் பதில் திருப்தியாக இருக்கும். இதற்கெல்லாம் பதிலளிக்கக் கூடாது என அசிங்கமாக நினைத்தால் அந்த எண்ணம் குழந்தைகள் மனதிலும் விதைக்கப்படும். இதனால் பிள்ளைகள் செக்ஸ் பேசக்கூடாத விஷயம் என நினைப்பார்கள். இதனால் ஆரோக்கியமான பாலியல் கல்வி இல்லாமல் போகும். எனவே எளிமையான முறையில் வெளிப்படையாக ஆரோக்கியமான பாலியல் கல்வி அவசியம்.

 

 
Published by:Sivaranjani E
First published: