ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்னென்ன?

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்னென்ன?

காட்சி படம்

காட்சி படம்

ஜங்க்ஃபுட், பாஸ்ட் ஃபுட், காய்கறிகள் மற்றும் கீரைகளை தவிர்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பழக்க வழக்கங்களால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட காரணமாக அமைகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே மட்டுமல்ல குழந்தைகளிடம் தற்போது மலச்சிக்கல் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 5 வயது குழந்தை ஒன்று வயிற்று வலியால் துடிதுடிப்பதைக் கண்டு, அதன் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் குழந்தைக்கு கடுமையான மலச்சிக்கல் ஏற்பட்டு, அது தற்போது தீவிரமான வயிற்று வலியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தை சரியாக சாப்பிட்டதா?, தூக்குகிறதா?, ஆக்டீவாக ஓடி ஆடி விளையாடுகிறதா? என்பதை கவனிக்கும் பெற்றோர், அவர்கள் சரியாக மலம் கழிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஜங்க்ஃபுட், பாஸ்ட் ஃபுட், காய்கறிகள் மற்றும் கீரைகளை தவிர்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பழக்க வழக்கங்களால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே குழந்தைகளை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து காப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்..

மலச்சிக்கல் அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து வயிற்று வலி, மலத்தை வெளியேற்றுவதில் சிக்கல், மலம் கழிக்கும் போது வலி ஏற்படுவது போன்றவை மட்டுமே பெற்றோர்களால் மலச்சிக்கலுக்கான அறிகுறியாக அறியப்பட்டுள்ளது. ஆனால்,

 • மலம் கழிப்பதில் சிரமம்
 • இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருப்பது,
 • உலர்ந்த மலம்
 • கழிவின் அளவு குறைவது
 • உள்ளாடையிலே மலம் கழிப்பது
 • மலத்துடன் ரத்தம் வெளியேறுவது
 • பசியின்மை
 • மலம் வெளியேறும் இடத்தில் வெட்டுக்கள் போன்ற காயங்கள் தென்படுவது போன்றவையும் நாள்பட்ட மலச்சிக்கலுக்கான அறிகுறிகள் ஆகும்.

also read : குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்படாமல் தடுப்பது எப்படி..?

குழந்தைகளை மலச்சிக்கலில் இருந்து காப்பது எப்படி?

குழந்தைகளுக்கு அதிக பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுக்கும் போது, அவர்கள் பிற சத்துள்ள உணவுகளை குறைவான அளவில் தான் எடுத்துக்கொள்ளக்கூடும். பிஸ்கட் போன்ற மைதா பொருட்களும் மலச்சிக்கலுக்கு பெரும் காரணம் என்பதால், அதனை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு சாதாரண வெள்ளை அரிசியை விட எளிதில் ஜீரணமாகக்கூடிய சிறுதானியம் போன்ற சத்தான அரிசி வகைகளை பயன்படுத்தலாம். நார்ச்சத்து மிக்க காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை குழந்தைகள் ஒதுக்கினாலும், அவர்களுக்கு பிடித்த வகையில் தயாரித்துக்கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.

மலச்சிக்கலைத் தடுக்க உதவும் உணவுகள்:

குழந்தைகள் நாள்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகள் உதவியாக இருக்கும்,

 • வேர்க்கடலை, கோதுமை, பருப்பு வகைகள், அரிசி, பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தவராமல் கொடுக்க வேண்டும்.
 • வாழைப்பழம், கொடிமுந்திரி மற்றும் அத்தி போன்ற சில பழங்களை உணவில் சேர்க்கவும்
 • வீடியோ கேமை விட்டுவிட்டு, குழந்தைகளை ஓடியாடி விளையாடவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும் ஊக்கப்படுத்துங்கள்.
 • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றிய பிறகும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மேலும் எக்காரணம் கொண்டு மருந்துவரிடம் ஆலோசிக்காமல் கடைகளில் கிடைக்கூடிய மலமிளக்கி மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Child, Constipation