ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தை உணவில் உலோகங்கள்: உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது இதையெல்லாம் கவனித்து இருக்கிறீர்களா? 

குழந்தை உணவில் உலோகங்கள்: உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது இதையெல்லாம் கவனித்து இருக்கிறீர்களா? 

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையின்படி, ‘குழந்தை உணவுகளில் காணப்படும்  உலோகங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது குழந்தைகளின் வளரும் மூளைக்கு பாதிப்புகளை விளைவிக்கின்றன.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையின்படி, ‘குழந்தை உணவுகளில் காணப்படும்  உலோகங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது குழந்தைகளின் வளரும் மூளைக்கு பாதிப்புகளை விளைவிக்கின்றன.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையின்படி, ‘குழந்தை உணவுகளில் காணப்படும்  உலோகங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது குழந்தைகளின் வளரும் மூளைக்கு பாதிப்புகளை விளைவிக்கின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

குழந்தைகளுக்கு என்று எது செய்தாலும் எல்லா பெற்றோர்களும் பார்த்து பார்த்து கூடுதல் கவனத்துடன் செய்கின்றனர். குழந்தைக்கு அளிக்கக்கூடிய உணவையும் அப்படித்தான் தருவதாக பெரும்பாலும் அனைவரும் நினைக்கிறோம். சத்தான உணவுகளை வழங்கும் நாம், அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன,அவைகளில் குழந்தையின் உடலுக்கு ஏற்றது எது தீங்கானது எது என்று பார்ப்பதில்லை.

ஆர்சனிக், ஈயம், காட்மியம் மற்றும் பாதரசம் போன்ற கன உலோகங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் வீட்டிலேயே குழந்தைக்கு ஊட்டும் உணவில் இருந்து கடைகளில் வாங்கப்படும் உணவுகள் வரை பல உலோகங்கள் உள்ளன:

குழந்தை உணவில் உலோகங்கள்:

குழந்தை உணவுகளில் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளிலும் சில கன உலோகங்கள் உள்ளன. வைட்டமின், நல்ல கொழுப்பு, சில உலோகங்கள் இயற்கையாக நீர், மண் மற்றும் காற்றில் உள்ளன. உதாரணமாக, சுண்ணாம்பு, ஈயம் போன்றவை. பூச்சிக்கொல்லிகள் மற்றும் மாசுக்கள் மூலமாகவும் இவை நம் உணவில் நுழைகின்றன.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் இந்த உலோகங்களை அடிப்படையாக வைத்தே குழந்தைகளுக்கான உணவு பொருட்களை தயாரிக்கின்றனர் என்பது அதிர்ச்சிகரமான செய்தி ஆகும்.

2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 168 குழந்தை உணவுகளை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, அதில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நச்சு உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தீங்கான இந்த உணவு வகைகளை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால் 15 சதவீதம் உடல் நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்த உலோகங்களை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்குகிறது. இது குழந்தைகளின் வளரும் மூளையை சேதப்படுத்துகிறது.

இதனைத் தவிர்ப்பது எப்படி?

குழந்தையின் உணவு மற்றும் சிற்றுண்டிகளில் மறைந்திருக்கும் தீங்கான உலோகங்களை முற்றிலும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதன் அளவை குறைக்க இயலும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு வகையான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாடம் சாப்பிட வைக்கலாம்.

மாதிரிப்படம்

அரிசிமாவில் செய்யப்படும் இனிப்புகளை தவிர்க்க வேண்டும். அரிசியானது மற்ற தானியங்களை விட 10 மடங்கு அளவுக்கு ஆர்சனிக் சக்தியை உறிஞ்சுகிறது. இது உடலுக்கு தீங்கானது. இதற்கு பதிலாக பார்லி மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் நிறைந்த உணவை வழங்கலாம். வெண்ணெய், வாழைப்பழங்கள், காய்கறிகளுடன் கூடிய பார்லி மற்றும் சீஸ், திராட்சை, பீன்ஸ், வேகவைத்த முட்டை, ஸ்ட்ராபெர்ரி, தயிர் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பது மிகவும் சிறந்தது.

குழந்தைக்கு நாம் கொடுக்கும் தண்ணீரை சோதித்து பார்க்க வேண்டும். தண்ணீர் குழாயில் ஏதாவது பழுது இருக்கிறதா? தண்ணீர் சுத்தமாக தான் இருக்கிறதா? போன்றவற்றை சோதித்து வழங்க வேண்டும்.குழந்தைகளுக்கு பழச்சாறு தருவதை தவிர்க்க வேண்டும் என்று ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ பரிந்துரைக்கிறது.

மாதிரிப்படம்

உணவின் தரம் :

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கையின்படி, ‘குழந்தை உணவுகளில் காணப்படும் உலோகங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இது குழந்தைகளின் வளரும் மூளைக்கு பாதிப்புகளை விளைவிக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் மரபியல் போன்ற பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படுத்தலாம் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் உணவுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், இல்லையென்றால் உணவில் கலப்படம் பெருகிவிடும்’ என்று எச்சரிக்கிறது.

என்ன செய்வது?:

நாம் வாங்கும் உணவு பொருட்களில் உலோகங்கள் உள்ளன. இதனை தவிர்க்க நாம் உணவினை ஒவ்வொருநாளும் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைக்கு அளிப்பது, மிகச்சிறந்த வழியாகும். குழந்தையின் உடல் நலமும் கெடாமல் இருக்கும்.

First published:

Tags: Baby, Baby food, Food, Fruits, Nutrition food, Vegetable