• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கிறது..?

பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கிறது..?

பெற்றோர்கள் செய்யும் தவறுகள்

பெற்றோர்கள் செய்யும் தவறுகள்

தங்களை அறியாமல் பல பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் குழந்தைகளின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. 

  • Share this:
குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இருப்பது மிகவும் தூய்மையான உறவுகளில் ஒன்றாகும். குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. தன் குழந்தைக்கு வாழ்வில் மிகச் சிறந்தவை மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து பெற்றோர்களின் ஆசை. இதனை நிறைவேற்ற, பலரும் பலவிதமாக முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால், தங்களை அறியாமல் பல பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் குழந்தைகளின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது.பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தை மீது அளவில்லா அன்பு உள்ளது ஆனால் அதை நீங்கள் எப்போதுமே வெளிக்காட்ட மறுக்கிறீர்கள்

எல்லா அப்பா அம்மாக்களுமே தங்கள் குழந்தைகள் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பார்கள். குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு குழந்தை தான் முக்கியம் என்பது பல பெற்றோர்களின் இருப்பார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் வெளிப்படையாக சொன்னால் மட்டுமே தெரியும்.

அதே போல, எல்லாருமே பாராட்டுக்கள் எதிர்பார்ப்பது போல, குழந்தையும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் சின்னச்சின்ன முயற்சிகளுக்கும் பெற்றோரிடமிருந்து பாராட்டை எதிர்பார்ப்பார்கள். பெற்றோராக நீங்கள் அதை செய்யத் தவறினால் குழந்தையின் எதிர்காலம் பலவிதங்களில் இதனால் பாதிக்கப்படும்.

உங்கள் குழந்தையின் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது

குழந்தைகள் ஓரளவு வளர்ந்து, தாங்களாகவே சில விஷயங்களில் முடிவு எடுக்கும் வரை பெற்றோர்கள் உதவியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் தான். அதே நேரத்தில், பல விஷயங்களில் குழந்தைகளை முக்கியமான முடிவு எடுப்பதற்கு பெற்றோர்களும் அனுமதிக்க வேண்டும். எல்லா விஷயத்திலும், என் குழந்தையை நான் தான் பாதுகாப்பேன், எனக்குத்தான் என் குழந்தையின் வாழ்க்கையைப் பற்றி சரியான முடிவெடுக்க முடியும் என்று நீங்களே அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால், குழந்தைகளுக்கு தங்கள் மீது, தங்கள் திறமையின் மீது சந்தேகம் ஏற்பட்டு விடும். அவர்கள் வளரும் போது முடிவு எடுக்கும் திறன் இல்லாமல் போகும் சாத்தியமும் உள்ளது.

இளம் வயதிலேயே முடிவெடுக்கும் திறன் அவர்களுக்கு இருப்பதை பாராட்டி ஊக்குவிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை வளர்க்கும்.



நீங்கள் குழந்தை எதிரிலேயே சண்டை போடுகிறீர்கள்

பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று குழந்தைகள் எதிரிலேயே கணவனும் மனைவியும் சண்டை போடுவது தான். கருத்து வேறுபாடுகள் ஏற்படாத குடும்பங்கள் கிடையாது. ஆனால், உங்கள் கருத்து வேறுபாடுகளை உங்கள் குழந்தையின் முன் சண்டையாக வளர்க்கக்கூடாது. குழந்தைகள் தான் பார்ப்பதை வைத்துத்தான் பல்வேறு விஷயங்கலாவ்யும் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக நம்பிக்கை, அன்பு, நேர்மையாக இருப்பது, விட்டுக்கொடுப்பது ஆகிய அனைத்துமே செயல்கள் வழியாக குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும். எனவே குழந்தைகள் முன் எப்பொழுதுமே நீங்கள் சண்டை போடக்கூடாது.

Hypothyroidism : குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைப்போ தைராய்டு பாதிப்புக்கான அறிகுறிகள்..

குழந்தைகள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள்

இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்களும் தன் குழந்தைகள் பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை கொண்டுள்ளனர். இது சாத்தியமே இல்லாத எதிர்பார்ப்பு என்று பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தாலும் போட்டி மனப்பான்மை காரணமாக குழந்தைகள் மீது இந்த அழுத்தம் திணிக்கப்படுகிறது. சரியாக படிக்கவில்லை என்றால், அல்லது விளையாட்டில் அல்லது வேறு ஏதேனும் செயல்பாடுகளில் குழந்தைகளை சரியாக செயல்பட முடியவில்லை என்றாலோ நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

மாறாக குழந்தைகளால் செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் மீது உங்கள் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் திணித்தால் அவர்களுக்கு குழந்தை பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: