Home /News /lifestyle /

உங்களுக்கு டீன் ஏஜ் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா?... இதை கட்டாயம் படியுங்கள்!

உங்களுக்கு டீன் ஏஜ் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா?... இதை கட்டாயம் படியுங்கள்!

டீன் ஏஜ் பருவத்தினர்

டீன் ஏஜ் பருவத்தினர்

பள்ளியில் தனது சக நண்பர்களால் உருவ கேலிக்கு ஆளாவது, படிப்பில் கவனச்சிதறல், மனசோர்வு, தன்னம்பிக்கை இன்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

நம்மை நாமே அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதன் முதல் படி. ஓவர் உயரம் அல்லது குள்ளம், உடல் எடை குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருப்பது, குட்டையான தலைமுடி, பல் வரிசை நேராக இல்லாதது என பல பிரச்சனைகளுக்காக ஒருவர் கேலி, கிண்டலுக்கு உள்ளாவது சகஜமானதாக மாறி வருகிறது. குறிப்பிட்ட வயதை கடந்தவர்களுக்கு இது பழகிப்போன அல்லது பெரிதாக எண்ணத் தேவையில்லாத பிரச்சனைகளாக இருக்கலாம். ஆனால் பதின் வயதை அடைந்த இளம் வயது ஆண், பெண் பிள்ளைகள் இடையே தங்களது உடல் அமைப்பு குறித்த எதிர்மறை எண்ணங்கள் அதிகரிப்பது ஆபத்தில் முடியலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆம், பள்ளியில் தனது சக நண்பர்களால் உருவ கேலிக்கு ஆளாவது, படிப்பில் கவனச்சிதறல், மனசோர்வு, தன்னம்பிக்கை இன்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. ‘என் மூக்கு இன்னம் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்’, எனக்கு மட்டும் ஏன் இப்படி வெயிட் போடுது, , ‘என் பிரண்ட் மாதிரி நான் ஏன் கலரா இல்ல’ போன்ற எண்ணங்கள் உங்களது பிள்ளைகளுக்கு தோன்றுகிறது என்றால், அவர்களுக்கு முதலில் தேவை ஒரு நல்ல மனநல ஆலோசகர் கிடையாது, பெற்றோரான நீங்கள் தான்.

டீன் ஏஜ் பருவத்தினர் மனதில் எழும் இப்படியான கொடூர எண்ணங்களில் இருந்து வெளியேற உதவுவதில் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். பிள்ளைகளின் உடல் அமைப்பு பற்றி நெகட்டிவ் எண்ணங்களை அடித்து நொறுக்கும் விதமாக, அவர்களது அழகான அம்சங்களை எடுத்துக்கூறி நம்பிக்கையூட்டுவது அவசியம். உங்கள் குழந்தை உடல் உருவம் பற்றிய எதிர்மறையான எண்ணங்களுடன் போராடினால், நீங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து சில விஷயங்கள் இதோ...ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம்:

உங்களுடைய பிள்ளைகளிடம் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பற்றி பேசுவது நல்ல பலனளிக்கும். இதன் மூலம் ஊட்டமளிக்க கூடிய நல்ல வாழ்க்கை முறையை நோக்கி அவர் அழைத்து செல்ல முடியும். இது ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் பயிற்சிகள் மூலமாக அவரது மனதில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை விதைக்க உதவுகிறது. வழக்கமான விஷயங்களை எளிதாக மாற்றி அமைத்து, ஆரோக்கியமான பழக்கங்களை வளர விடுங்கள்.

குழந்தைகள் vs டீனேஜர்கள் - பெற்றோர்களுக்கு எதில் சவால் அதிகம் ? ஆய்வில் வெளியான உண்மை

பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுங்கள்:

டீனேஜர்கள் சில சமயங்களில் தங்களது பெற்றோர் தங்களை முழுமையாக புரிந்து கொள்வதில்லை என நினைக்கிறார்கள். எப்போதும் அட்வைஸ் செய்து கொடுத்துக்கொண்டே இருப்பது, டீன் ஏஜ் பிள்ளைகள், பெற்றோர்கள் இடையே விரிசலை உருவாக்குறது. பெற்றோர்கள் தங்களது பதின் வயது பிள்ளைகளின் கருத்துகளுக்கு காது கொடுப்பவராகவும், அதற்கு நல்ல தீர்வினை வழங்குபவராகவும் இருப்பது அவசியம்.

உங்கள் குழந்தைகளுடன் பேசுவது, அவர்கள் உங்களை மேலும் நம்புவதற்கும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து உங்களிடம் சுதந்திரமாக விவாதிக்கவும் இடமளிக்கிறது. பிள்ளைகளுடன் கூடுதலாக நேரம் ஒதுக்கி, மனம் விட்டு பேசுவது அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் தூண்டுகோலாக அமையும்.சுய அன்பை ஊக்குவியுங்கள்:

டீன் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு நம்மை நாமே நேசிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘இது என்னுடைய உடல், இதை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்ற எண்ணத்தை பிள்ளைகளிடம் வளர்க்க வேண்டும். உடல் மற்றும் தோற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள டீன் ஏஜ் வயதினரை பெற்றோர் ஊக்குவிக்க வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தமது உருவம் குறித்த எதிர்மறையான எண்ணம் கொண்ட டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பெற்றோரின் நிபந்தனை அற்ற அன்பும், ஆதரவும் அவசியமாகிறது. எனவே அவர்களது தோற்றத்தை வைத்து உலகம் எவ்வாறு மதிப்பிட்டாலும், பெற்றோரான நீங்கள் அவர்களை அரவனைத்து, அன்பான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips, Teenage parenting

அடுத்த செய்தி