நமது கைகளில் உள்ள விரல்கள் கூட ஒன்று போல இருப்பதில்லை. அது போலத் தான் மனிதர்களின் உடல் அமைப்பும் வெவ்வேறாக இருக்கும். தோற்றத்தில் வேறுபட்டிருக்கும் நம் கை விரல்களில் நாம் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை. ஆனால், மனிதர்களின் தோற்றத்தை வைத்து ஏற்றத் தாழ்வு பார்க்க தொடங்கி விடுகிறோம் அல்லது நமது சொந்த உடல் குறித்துகூட அந்த ஏற்றத் தாழ்வு சிந்தனையை கொண்டிருக்கிறோம்.
உலகிலேயே மிக அதிகமான கேலி உள்ளாக்கப்படும் தோற்றம் என்பது உடலின் நிறம் தான். கருப்பாக இருப்பது பெரும் குற்றமாக முன்னொரு காலத்தில் கருதப்பட்ட நிலையில், தற்போதைய நாகரீக வளர்ச்சியின் காரணமாக அந்த எண்ணம் மெல்ல, மெல்ல மறைந்து வருகிறது. இதேபோன்று உயரம், உடல் எடை, முக தோற்றம் போன்ற பல்வேறு காரணங்களை மையமாக வைத்து சக மனிதர்களை கேலி செய்யும் வழக்கம் சமூகத்தில் இருக்கிறது.
குழந்தைகளை பாதிக்கும் எதிர்மறை சிந்தனைகள்
இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் திரையில் வரும் நடிகர், நடிகைகளைப் பார்த்து நாமும் அவர்களை போல அழகாக இல்லையே என்று ஏக்கம் அடைகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதாவது ஒரு நடிகர் சிக்ஸ் பேக்-குடன் இருக்கிறார் என்றால், அவர் தினசரி ஜிம் சென்று அதற்கான பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொள்பவராக இருப்பார். தொழில் ரீதியாக இந்தத் தோற்றம் அவருக்கு அவசியமானது.
அதேபோல நடிகைகளும், தங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதற்கான ஏராளமான காஸ்மெடிக்ஸ் மற்றும் மேக் அப் பொருட்களை உபயோகம் செய்வார்கள், பார்ப்பதற்கு சிலிம்-மாக இருக்க வேண்டும் என்று பெரிதும் மெனக்கெட்டு டயட் கடைப்பிடிப்பார்கள். ஆனால், இதுபோன்ற நடிகர், நடிகைகளின் வாழ்க்கை முறையானது நம்மை போன்ற வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒத்து வராது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆங்கிலம் கற்று தருவதால் கற்றல் திறன் மேம்படும்- ஆய்வில் தகவல்!
பெற்றோர் எப்படி உதவலாம்
வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளை, சக நண்பர்கள் அல்லது தோழிகள் உடல்கேலி செய்யக் கூடும். குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இது நடக்கும். குழந்தைகள் ஒன்றாக இணைந்து விளையாடும்போது இதுபோன்ற பேச்சுகள் சகஜமாக வந்து விடும். ஆனால், அதுபோன்ற சமயங்களில் பெற்றொர் தான் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனை என்பது குழந்தையின் உடல் நலனையும், மன நலனையும் பாதித்து விடும். ஆகவே, உடல் தோற்றம் அடிப்படையிலான தாழ்வு மனப்பான்மை என்பது வெறும் கற்பனையே என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
நேர்மறையான விவாதங்களை ஊக்குவியுங்கள்
வளரும் குழந்தைகள், பெற்றோர் தங்களை கண்காணித்து கொண்டிருப்பதாகவும், அவ்வபோது அறிவுரை என்ற பெயரில் பாடம் எடுப்பதாகவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த எண்ணத்தை போக்கும் வகையில், குழந்தைகளிடம் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுங்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்பளிக்க வேண்டும். அது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Body Shaming, Teenage parenting