Home /News /lifestyle /

அம்மா குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா.? 

அம்மா குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா.? 

Parenting

Parenting

Parenting Tips | குழந்தையின் நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டிய தாயே, தேவையில்லாத ஒப்பீடுகளை செய்தும், திட்டியும், தோற்றத்தை குறைவாக மதிப்பிட்டும் பேசுவது குழந்தையின் மனதில் கடுமையான காயங்களை உருவாக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கருவில் குழந்தையை சுமந்து பெறுவதை விட, தாய்க்கு மிகவும் முக்கியமான கடமை அதனை நல்ல ஆரோக்கியம் மற்றும் பொறுப்புடன் வளர்ப்பது. குறிப்பாக குழந்தைகளிடம் தாய் நடந்து கொள்ளும் முறையே அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில், தன்னம்பிக்கை, சுய மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்கிறது.

குழந்தையின் நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டிய தாயே, தேவையில்லாத ஒப்பீடுகளை செய்தும், திட்டியும், தோற்றத்தை குறைவாக மதிப்பிட்டும் பேசுவது குழந்தையின் மனதில் கடுமையான காயங்களை உருவாக்கிறது. அப்படி சின்ன வயதில் இருந்தே தாயால் குறைந்த அளவிலான அன்பு காட்டப்பட்டும், கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வளர்க்கப்படும் குழந்தைகள் கீழ் காணும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

-தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுதல்

-பாடி ஷேமிங் (அம்மா தன் உடலைப் பற்றி பேசிய விதம்)

- பிறருடன் தன்னை ஒப்பிட்டு பார்ப்பது

-மற்ற பெண்களை நம்பவோ அல்லது நெருக்கமாக உணரவோ இயலாமை

-காதல் உறவில் நம்பிக்கையின்மை

- அமைதியானவராக இருந்தால் மட்டுமே தகுதியானவர் என எண்ணுவது

-தன்னம்பிக்கை இழப்பு, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க தயங்குவது, நம்பிக்கையின்மை என பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக தாயின் செய்கைகளால் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகள், அவர்கள் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதால் அதிகம் பரவுகிறது.

Also Read : உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

பிரச்சனையை கண்டறியும் அறிகுறிகள்:

குழந்தைப் பருவத்தில் தாய் ஏற்படுத்திய அவநம்பிக்கை, குழந்தையின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால உறவுகளையும் பாதிக்கிறது. மறுபுறம், தாயால் காயப்பட்ட ஒரு பெண், தான் பெற்ற சொந்த அனுபவங்கள் மூலமாக தனது சொந்த குழந்தையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறவு நிலையையே பின்பற்றுவார்கள்.

- குறைந்த சுயமரியாதை

- கோபம், பாசம், காதல் என எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருப்பது

- அமைதியாக இல்லாமல் எப்போதும் சத்தம் போட்டு கொண்டிருப்பது

- நமக்கு அன்பான பாதுகாப்பான எந்த உறவும் இல்லை என்ற உணர்வை உருவாக்குவதுநீங்கள் செய்யும் தவறுக்கு எல்லாம் என் அம்மா என்னை சரியாக வளர்க்கவில்லை, மோசமாக நடந்து கொண்டார் என பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்து கொள்வது எளிதானது. ஆனால் உங்கள் தாய்க்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதோடு, அப்படியொரு மோசமான அனுபவத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்காமல் தடுப்பது என்பது சவாலானது.

Also Read : உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க சூப்பரான 5 டிப்ஸ்கள் இதோ...

தாய் அடைந்த காயங்களை குணப்படுத்துவது எப்படி.?

- அம்மாவுடன் ஆலோசிப்பது, அனுமதி கேட்பது போன்ற விஷயங்களை அடிக்கடி செய்யுங்கள்.

- எல்லோருக்கும் கனவில் நினைப்பது போன்ற ‘சூப்பர் மாம்’ கிடைப்பதில்லை, எனவே உங்கள் அம்மா எப்படி இருந்தாலும் அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

- அம்மாவை விட்டு அதிக தூரம் விலகி நிற்காமல் ஆரோக்கியமான இடைவெளியை பராமரியுங்கள்.- நிறைய பெண்கள் தங்களது தேவைக்காக பிறரை நாடியிருப்பதால் சுய மாரியாதை இல்லாமல் போகிறது. எனவே சுய தேவைகளே தாங்களே எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என அம்மாவுக்கு கற்றுக்கொடுங்கள்.

Also Read : குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்லும் போது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.!

- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தாய்க்கு நீங்கள் பிள்ளை என்பதை மறக்காதீர்கள். என் அம்மா என்னை பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என நீங்கள் எதையெல்லாம் நினைக்கிறீர்களோ.? அதை ஒரு கடிதமாக எழுதி தாயிடம் கொடுக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Parenting Tips

அடுத்த செய்தி