பிள்ளைகள் வளரும் பருவங்களில் டீன் ஏஜ் பருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் கடினமான பருவமாகும். குழந்தையாகவும் அல்லாமல் முதிர்ச்சியடைந்தவராகவும் அல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலையில், பதின்பருவ காலத்தில் ஒவ்வொரு பிள்ளையும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள், அவர்களை அதிக சென்சிட்டிவ்வாக மாற்றிவிடுகிறது. உதாரணமாக, நீங்கள் சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட, அதை எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்காது. சின்ன சின்ன விஷயங்கள் கூட சங்கடப்படுத்துவது போல அமையும். எனவே உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தகூடாது அல்லது எதுவெல்லாம் சங்கடப்படுத்தும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
PDA– Public display of affection
பப்ளிக் டிஸ்ப்ளே ஆஃப் அஃபெக்ஷன் என்று பொது இடங்களில் பிள்ளைகளின் மீது உங்கள் அக்கறை மற்றும் அன்பை தெரிவிப்பதாகவும். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்வது, அணைப்பது உள்ளிட்டவையாகும். உங்கள் பிள்ளைகள் உங்களை நேசிக்கிறார்கள். அதேபோல நீங்களும் உங்கள் பிள்ளை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் வளரும் பிள்ளைகள் பலருக்கும் பொது இடங்களில் PDA என்பது சங்கடமாகவே இருக்கிறது.
பலருக்கு முன்னிலையில் பாடம் நடத்துவது
மற்றவர்கள் முன் உங்கள் குழந்தையை திட்டுவது அல்லது அவர்கள் செய்தது தவறு மிக நீண்ட பாடம் எடுப்பது ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தாலும் அல்லது நீங்கள் விரும்பாத எதைச் இருந்தாலும் அவர்களுக்கு அதைப் புரிய வைக்க, தனியே எடுத்துச் சொல்ல வேண்டும். எப்போதுமே மற்றவர்களு முன் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவது, திட்டுவது போன்றவை அவர்களை அவமானப்படுத்துவது போல ஆகும்.
பிள்ளைகளுக்கான தனிமைஅவசியம்
குடும்பம், படிப்பு, என்று மாணவர்கள் நேரம் செலுத்துவது முக்கியமாக இருந்தாலும் குழந்தைகள் தனக்கெனறு,தான் விரும்பும் செயலை செய்வதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும், வெளியே செல்வதற்கு அனுமதிக்கவேண்டும். எப்பொழுதுமே பெற்றோராகிய நீங்கள் அவர்களை கவனித்துக் கொண்டே, கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.
மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ்..
உங்களுக்கும் உங்கள் டீஜென் பிள்ளைகளுக்கும் எவ்வளவு புரிதல் இருந்தாலும் எவ்வளவு இருந்தாலும் நீங்கள் அவர்களுடைய உலகத்தில் எப்போதுமே இருப்பது, அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்
பெற்றோர்-பிள்ளை நட்புக்கு எல்லை தேவை
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக பழக வேண்டும் என்பது அவசியம்தான். அது அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படையாக பகிரவும் உதவும். ஆனால், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையே உள்ள நட்பு உங்களுடைய தனிப்பட்ட உறவாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்கள் அல்லது சக மாணவர்களுடன் இருக்கும்பது நீங்கள் அதிகப்படியான நட்புணர்வோடு இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டாம். அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்
டீனேஜ் பிள்ளைகளின் விருப்பங்களை மதிக்க வேண்டும்
உங்கள் பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் தேவை என்ற நீங்கள் பார்த்து பார்த்து வளர்க்கலாம். அவர்களுக்கு, எது பிடிக்கும் எது பிடிக்காது என்று ஒவ்வொன்றாக கவனமாகச் செய்தாலும், அவர்கள் அதை நினைத்து குற்ற உணர்ச்சியோடு இருக்கும் அளவுக்கு நீங்கள் எதையும் செய்யக்கூடாது என்பது சொல்லக்கூடாது. உங்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் திணிக்கக் கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting Tips, Teenage parenting