Home /News /lifestyle /

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..?

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..?

கருத்தரித்தல்

கருத்தரித்தல்

பொதுவாக பெண்களுக்கு 15 வயது முதல் 30 வயது வரை கருத்தரிக்க மிகவும் வளமான காலம் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் போன்ற பல காரணங்களால் திருமணமான தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிபோடுகின்றனர். பொதுவாக பெண்களுக்கு 15 வயது முதல் 30 வயது வரை கருத்தரிக்க மிகவும் வளமான காலம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த வயதில் ஒரு குழந்தை பெற்றெடுக்கும் பொறுப்பை ஏற்க அனைவரும் தயாராக இல்லை.

ஒரு தொழில் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 35 முதல் 45 வரை குழந்தை பிறப்பதற்கு மிகச் சிறந்த வயது என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு பெண்ணின் கருவுறுதலில் சற்று சரிவு காணும் காலகட்டம். எனவே, 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தாயாக மாற இன்னும் தாமதமாகிறது. அப்படியானால், குழந்தை பெற்றெடுப்பதை ஒரு பெண் எவ்வளவு காலம் தள்ளிப்போடலாம், ஆனால் அதில் உள்ள பாதகங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அட்வான்ஸ்டு மெட்டர்னல் ஏஜ் மற்றும் கருவுறுதல்:

35 வயதிற்குப் பிறகு கருத்தரித்தல் 'மேம்பட்ட தாய்வழி வயது' (advanced maternal age) என்பதன் கீழ் வருகிறது. இது AMA என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் ஒருவர் இந்த வார்த்தையைப் கேட்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உதவி இனப்பெருக்கத்தின் உதவியோடு அல்லது அதன் உதவி இல்லாமல் இயற்கையாகவே ஒரு பெண் 35 வயதிற்குப் பிறகும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமாகும். ஆனால் இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் நீண்ட காலம் காத்திருப்பது பொதுவாக நல்லதல்ல.பிற்பகுதியில் தாய்மையடையும் போது சில பெண்களுக்கு அது கடினமான நேரமாக இருக்கலாம் என்றாலும், சிலர் மிக எளிதாக குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். இதில் உங்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பது உட்பட பல காரணிகளை உள்ளடக்கியிருக்கின்றன.
35 வயதிற்கு மேல் கருத்தரிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இது உங்களுக்கும் குழந்தைக்கும் என்ன ஆபத்துகள் மற்றும் நீங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் என்ன கேட்க வேண்டும் ஆகிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

உதவி கருத்தாக்கம் (assisted conception) என்றால் என்ன?

உதவி இனப்பெருக்கம் (assisted reproduction) செய்வதற்கான அட்வான்ஸ்டு மெட்டர்னல் ஏஜ் (AMA) விருப்பங்களை பெரும் பெண்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தாமதமாக கர்ப்பத்தைத் தேர்வுசெய்யும் பெண்கள் கருவுறும் போது வயது தொடர்பான சிக்கல்கள் இருப்பதை அறிந்து கொள்வது அவசியம். இதில் ஓசைட் தரம் மற்றும் இருப்பு குறைந்து ஓசைட் குரோமோசோமால் மாறுபாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கும் சிக்கல்களும் அடங்கியுள்ளன.

அட்வான்ஸ்டு மெட்டர்னல் ஏஜ் விருப்பத்துடன் ஒப்பிடும்போது உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) சுழற்சிகளின் வெற்றி விகிதங்கள் குறைகின்றன. ஏனெனில் கருமுட்டை பாதுகாப்பு, IVF சிகிச்சை, மரபணுத் திரையிடல் மற்றும் ஓசைட் அல்லது கரு தானம் உள்ளிட்ட வெவ்வேறு கருவுறுதல் விருப்பங்கள் AMA பெண்களுக்கு உள்ளன. கூடவே இதில் உள்ள அபாயங்கள் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட வேண்டும். AMA இன் பெண்கள் எந்தவொரு அடிப்படை மருத்துவ நிலைக்கும் பரிசோதிக்கப்பட வேண்டும். இது தாய் மற்றும் குழந்தை பிறந்த நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.பெண் இனப்பெருக்க திறனில் ஏற்படும் இயற்கையான சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவை,

1. கருப்பையில் உள்ள ஓசைட்டுகளின் எண்ணிக்கையின் முற்போக்கான குறைவு
2. ஓசைட் தரத்தில் வயது தொடர்பான குறைவு, ஆகியவை ஆகும்.

அட்வான்ஸ்டு மெட்டர்னல் ஏஜ் (AMA) கட்டத்தில் பெண்களுக்கான இனப்பெருக்க தேர்வுகள்:

1. சோசியல் எக் ஃபிரீசிங் (Social egg freezing)
2. கரு உறைதல் (Embryo freezing)
3. ஐவிஎஃப் (IVF)

மேம்பட்ட வயதில் கர்ப்பத்தின் தாய்வழி சுகாதார அபாயங்கள்:

கர்ப்பமாக இருக்கும் வயதான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம், கர்ப்பகால நீரிழிவு நோய், பிரீக்ளாம்ப்சியா மற்றும் குறைவான பிறப்பு எடை கொண்ட குழந்தைக்கு முன்கூட்டியே பிரசவம் செய்வது போன்ற அதிக ஆபத்துகள் நிறைந்துள்ளன. இந்த அபாயங்கள் பரவலாக வேறுபடுகின்றன. இது பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்து மற்றும் பிரசவத்தில் தாயின் வயதை பொறுத்து சில சுகாதார அபாயங்கள் ஏற்படலாம்.நீங்கள் வயதாக இருந்தால் கருத்தரிக்க பிற வழிகள்:

நன்கொடை முட்டைகளுடன் ஐவிஎஃப் (IVF with donor eggs): இந்த செயல்பாட்டில், பின்னர் ஃபெர்டிலைஸ் செய்வதற்கும், அதனை மாற்றுவதற்கும் ஒரு பாரம்பரிய முட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக, உங்கள் பங்குதாரரின் விந்து அல்லது நன்கொடை விந்தணுக்கள் மூலம் கருவுற்றிருக்கும் நன்கொடை முட்டைகளுடன் உருவாக்கப்பட்ட கருக்களைப் பயன்படுத்தி கரு பரிமாற்றத்தை நீங்கள் செய்யலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை கையாள்வது எப்படி..?

முட்டை உறைவு (Egg freezing) : நீங்கள் 35 வயதிற்கு பிறகு குழந்தை பெற்றெடுக்க போகிறீர்கள் என்று உங்களுக்கு முன்பே தெரிந்தால், உடனே உங்கள் முட்டைகளை பிரீசிங் செய்வது குறித்து கருத்தில் கொள்ளலாம். உங்கள் முட்டைகளை 30 களின் முற்பகுதியில் பிரீசிங் செய்து, அவற்றை உங்கள் 40 களில் பயன்படுத்த திட்டமிடலாம். அதிலும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது. ஏனெனில், நீங்கள் 35 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் போது ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவதில் உள்ள முரண்பாடுகள் உங்கள் முட்டைகளை உறைய வைக்கும் போது இருக்கும் உங்கள் வயதோடு தொடர்புடையதாக இருக்கும். உங்கள் தற்போதைய உயிரியல் வயது ஒரு காரணமாக இருக்காது.

கரு தத்தெடுப்பு (Embryo adoption): ஒன்று நீங்கள் ஐவிஎஃப் செய்ய தேர்வு செய்யலாம் அல்லது வாடகை கரு தத்தெடுப்பைப் பயன்படுத்துவது மற்றொரு சாதகமான விருப்பமாக இருக்கும். கருக்கள் பொதுவாக உறைய வைத்து, தங்கள் சொந்த ART நடைமுறைகளில் பயன்படுத்த முடியாத ஜோடிகளால் நன்கொடை கருக்கள் அளிக்கப்படுகின்றன.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby, Marriage, Pregnancy

அடுத்த செய்தி