ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம் - எய்ம்ஸ் மருத்துவரின் ஷாக் ட்வீட்..!

குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம் - எய்ம்ஸ் மருத்துவரின் ஷாக் ட்வீட்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ப்ரோனோபோல் என்பது, எடை இழப்பு, புற்றுநோய், ஏன் மரணத்தை கூட உண்டாக்கும் என கூறியுள்ளார். இந்த வாய் வழி மருந்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மற்ற மெத்தில் பராபென் & நா பென்சோயேட் ஆகியவையும் அபாயகரமான மூலக்கூறுகளாகும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குழந்தைக்கு வயிற்று வலி என்றாலே கிரைப் வாட்டரைதான் அம்மாக்களுக்கு நினைவு வரும். இது வயிற்றில் பூச்சி இருந்தால் அதை நீக்கிவிடும் என்பது அவர்களின் கருத்து. பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைக்கு வரை கிரைப் வாட்டர் வீட்டு வைத்தியம். இப்படி அம்மாக்களின் உடனடி வைத்தியமாக இருந்த கிரைப் வாட்டர் பற்றி எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அதாவது சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசு பதிவிட்ட ட்வீட்டில் “ 2022 ஆண்டிலும் இந்த கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் மாறவில்லை. இது உடலளவில் எந்த பலனையும் அளிக்காது. செயல்படாதது என்றாலும் உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது.

  தொடர்ச்சியாக இதை கொடுப்பதால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக இதில் கலக்கப்படும் ப்ரோனோபோல் (Bronopol) என்பது அதிக நச்சுத்தன்மை நிறைந்த மூலக்கூறு. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் கிரைப் வாட்டர் கொடுப்பது குழந்தைக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் கூறியுள்ள அவர் “ ப்ரோனோபோல் என்பது, எடை இழப்பு, புற்றுநோய், ஏன் மரணத்தை கூட உண்டாக்கும் என கூறியுள்ளார். இந்த வாய் வழி மருந்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மற்ற மெத்தில் பராபென் & நா பென்சோயேட் ஆகியவையும் அபாயகரமான மூலக்கூறுகளாகும்.

  Also Read : பெண்களுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருக்குமா..? எப்படி கண்டறிவது..? மருத்துவரின் விளக்கம்

  "இந்தியாவில் உள்ள தலைமுறைகளின் தாய்மார்களால் நம்பப்படுகிறது" மற்றும் "என் பாட்டி என் அம்மாவுக்கு கொடுத்தார், என் அம்மா எனக்குக் கொடுத்தார்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பர பிரச்சார சொற்றொடர்களால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். ' தாய்ப்பால் கொடுப்பதற்கு கிரைப் வாட்டரும் குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. GRIPE WATER ஐத் தவிர்க்கவும்” என கூறியுள்ளார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Baby Care