• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2- Explainer

பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2- Explainer

பச்சிளங் குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன குழந்தைகள் மட்டுமின்றி, பிறக்கப்போகும் குழந்தைகளில் எது high risk pregnancy என்பதையும் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
பச்சிளங் குழந்தைகள் சம்மந்தமான விழிப்புணர்வை பச்சிளங் குழந்தைகள் வாரமாக நவம்பர் 15 முதல் 21 வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இது தொடர்பான விழிப்புணர்வை கையில் எடுத்து Social Awareness and Action Taken to Neutralize Pneumonia Successfully (SAANS) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, சேலம், திருச்சி ஆகிய மையங்களில் பயிற்சிகள் இந்த மாதம் நடக்க உள்ளன.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் எங்கெங்கல்லாம் NICU (Newborn Intensive Care Unit) இருக்கிறதோ, அங்கெல்லாம் முதன்மை அதிகாரிகள் சென்று அதன் தரத்தினை ஆய்வு செய்து, குறைகள் இருப்பின் அதனை சரிசெய்ய டூல்கிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சீனிவாசன். இதில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், என்என்எஃப் (National Neonatology Forum) உறுப்பினர்கள் போன்றோர் உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, அப்போதுதான் நமக்கு பக்கச்சார்பற்ற அணுகல் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.

Must Read | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

மேலும், நவம்பர் 16, 17 அன்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்று டூல்கிட்டை பயன்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு கேட்டுள்ளது. இது NICU-வின் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். பின், நவம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கிராமங்களில் இருக்கும் பச்சிளங் குழந்தைகள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன பச்சிளங் குழந்தைகளை கண்காணிக்க அங்கன்வாடி போன்ற மையங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளோம். அக்குழந்தைகளை ஹோம் விசிட் (home visit) செய்து அவர்களை பரிசோதித்து, கண்காணித்து அறிக்கை அளிக்கவும் சொல்லி இருக்கிறோம். டூல்கிட் மூலம் குழந்தைகளை கண்காணிக்க வழிமுறைகள் வகுக்கப்படுவது இதுவே முதல்முறை.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்றாக நாம் பார்ப்பது, பச்சிளங் குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன குழந்தைகள் மட்டுமின்றி, பிறக்கப்போகும் குழந்தைகளில் எது high risk pregnancy என்பதையும் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 அல்லது 5 மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தமிழகம், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன என்று மருத்துவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Must Read | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

இந்த ஆண்டின் கரு என்ன?

பச்சிளங் குழந்தைகள் வாரத்தில் இந்தாண்டின் கருவாக பாதுகாப்பு, தரம், பிறந்த குழந்தையை முறையாக பராமரிப்பது, பச்சிளங் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் தரம் நம் மாநிலத்தில் சிறப்பாக உயர்ந்துள்ளன. பின், நம்மிடம் இருக்கும் உபகரணங்கள், ஆட்களின் தரம் மற்றும் மனித வளம் ஆகியவை நன்றாக உள்ளனவா என நம்மை நாமே சோதித்துக்கொள்ளும் வகையில் இந்த வருடத்தின் தீம் அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: