Home /News /lifestyle /

குழந்தைகளிடம் மாயாஜால கதைகளை சொல்வது சரியானதா? அதன் பலன் கிடைக்குமா?

குழந்தைகளிடம் மாயாஜால கதைகளை சொல்வது சரியானதா? அதன் பலன் கிடைக்குமா?

Parenting Tips

Parenting Tips

Parenting Tips | சமீப காலங்களில் டிஜிட்டல் உலகில் கதை கேட்ட குழந்தைகள் பல ‘சிண்ட்ரெல்லா’ மற்றும் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போன்ற கதைகளை கேட்டிருக்க கூடும். இவை குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்திராத குழந்தைகளே இருக்க முடியாது. குறிப்பாக, “ஒரு ஊருல ஒரு ராஜா, ராணி இருந்தாங்கலாம்’’, “ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்’’ என்ற கற்பனை கதைகள், பாட்டி சுட்ட வடையை காக்கா திருடி, அதனிடம் இருந்து நரி பறித்த நீதிபோதனை கதைகள் என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைய நவீன உலகில், தாத்தா, பாட்டியுடன் இணைந்து வளரும் வாய்ப்பு கிடைக்காத குழந்தைகளும் கூட, டிவி, செல்ஃபோன் மூலமாக கார்டூன் கதைகளை கேட்டே வளர்கின்றன. இளம்பிஞ்சு மனதில் எந்தவொரு விஷயமும் ஆழமாக பதியும். ஆகவே, குழந்தைகளுக்கு நாம் என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்து சொல்லிக் கொடுக்கிறோம் என்பது முக்கியமாது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மாயாஜால கதைகளை சொல்லிக் கொடுப்பது, நாம் எல்லோரும் கடைப்பிடித்து வரும் பழக்கம் தான். அந்த மாயாஜால கதைகள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைகின்றதா அல்லது தவறாக வழிநடத்துகின்றனவா என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

மாயாஜால கதைகள் சரியா, தவறா

சமீப காலங்களில் டிஜிட்டல் உலகில் கதை கேட்ட குழந்தைகள் பல ‘சிண்ட்ரெல்லா’ மற்றும் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போன்ற கதைகளை கேட்டிருக்க கூடும். இவை குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் டிஸ்னீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்நோ ஒயிட்’’ என்ற மாயாஜால கதைத் தொடர் மிகவும் பிரபலம். அந்தக் கதைகள் மூலமாக கற்பிக்கப்படும் நீதி போதனைகளை காட்டிலும், தவறான கருத்துக்கள் குழந்தைகளை சென்றடைகின்றன என்றும், இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும் அமெரிக்க நடிகை கிரிஸ்டன் பெல் கூறியிருந்தார்.



இதேபோன்ற நிகழ்வை, நம்மூர் சக்திமான் தொடர்களிலும் நாம் பார்த்திருக்க முடியும். சக்திமான் கதாபாத்திரத்தில் வரும் நபர், நீதி, நேர்மையை காப்பதற்காக போராடுபவர் என்ற கருத்து நல்லதுதான் என்ற போதிலும், திடீர், திடீரென பறந்து சென்று, பல மாய வித்தைகளை செய்து காட்டுபவராக அவர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். இதைப் பார்த்த பல குழந்தைகள், தாங்கள் ஆபத்தில் சிக்கினால் சக்திமான் காப்பாற்ற வருவார் என நினைத்துக் கொண்டிருந்த காலங்கள் உண்டு.

Also Read : குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகள்!

குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்

பொதுவாக மாயாஜால கதைகள் என்பதே ஒருவரின் மனதில் கற்பனையாக தோன்றியவைதான். அதில், இயல்புக்கு மீறிய வீரம், போட்டி, பொறாமை, வெற்றி, சோகம் என அனைத்துமே நிறைந்திருக்கும். அந்தக் கற்பனைக் கதைகளுக்கும், நம் அன்றாட வாழ்வுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாட்டை பிரித்து உணரும் பக்குவம் வளர்ந்த குழந்தைகளிடம் உண்டு. ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகள், மாயாஜால கதைகளில் வருவதை அப்படியே உண்மை என நம்பி விடுவார்கள்.

Also Read : குட் டச், பேட் டச் பற்றி தெளிவாக சொல்லி கொடுப்பது எப்படி?

சில நன்மைகளும் உண்டு

மாயாஜால கதைகளால் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் சில உண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளின் மன உறுதியையும், நம்பிக்கையையும் வளர்த்தெடுக்கும். கனவையும், இலட்சியங்களையும் நிர்ணயித்துக் கொள்ள குழந்தைகளை இந்தக் கதைகள் ஊக்குவிக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Kids Care, Parenting Tips

அடுத்த செய்தி