• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த உணவுகள அறவே தவிர்த்திருங்க!

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த உணவுகள அறவே தவிர்த்திருங்க!

காபி போலவே சாக்லேட்டையும் மிகக் குறைந்த அளவிலேயே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டும்.

  • Share this:
கர்ப்பகாலம் தொடங்கியது முதல் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது வரை, நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் மிகவும் நீளமானது தான். கர்ப்பகாலத்தில் உங்கள் மாசிக்கு ஏற்றவாறு விரும்பும் உணவுகளை சாப்பிடக் கூடிய சலுகை இருந்தாலும், குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பல உணவுகளை நீங்கள் குறைந்த அளவிலேயே சாப்பிடவேண்டும் அல்லது முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியம்?

பிறந்த குழந்தையின் ஒரே உணவு தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரையும் கூட. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தைக்கு மட்டுமன்றி அம்மாவிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு அழகான பிணைப்பை உருவாக்கிக் கொள்ளவும் இது உதவி செய்கின்றது.

குழந்தை பெற்ற பெண்ணுக்கு முதல் மூன்று மாத காலம் வரை பத்திய சமையல் என்று தனியாக உணவு சமைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு ஆரோக்கியமான உணவு பொருட்களை வைத்து மட்டுமே சமைக்கப்படும்.

Must Read | மாரடைப்பு ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கா? அலர்ட் கொடுக்கும் புள்ளி விவரம்!

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுப்பதற்கு நீங்கள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் வரை, அம்மாவாக நீங்கள் சாப்பிடும் உணவுகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களா அதுதான் உங்கள் குழந்தைக்கும் கிடைக்கும். எனவே, நீங்கள் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்ள வேண்டும்.

சுகப்பிரவசம் எனப்படும் நார்மல் டெலிவரியில் நீங்கள் குழந்தையைப் பெற்றிருந்தால், உங்களுக்கு கிட்டத்தட்ட உணவு கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறலாம் ஆனாலும் உங்கள் விருப்பமான உணவுகளை, குறைவான அளவில் உண்பது உங்கள் குழந்தைக்கு நல்லது.

Must Read | தொப்பையைக் குறைக்க இந்த உடற்பயிற்சி போதுமா? மருத்துவர் சொல்வது என்ன?

நீங்கள் குறைவாக சாப்பிட வேண்டிய மற்றும் முழுமையாக தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே

காஃபீன் அதிகம் இருக்கும் உணவுகளை நீங்கள் மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் வேண்டும். அதாவது உங்களுக்கு காபி அருந்தும் பழக்கம் இருந்தால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காபி போலவே சாக்லேட்டையும் மிகக் குறைந்த அளவிலேயே நீங்கள் சாப்பிட வேண்டும். சாக்லேட்டில் தியோபிரோமைன் என்ற ஒரு எலிமென்ட் உள்ளது. உங்கள் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி குழந்தையின் செரிமானத்தை பாதிக்கும்.

பாக்கெட்டுகளில் வரும் உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் வரும் அதிகமாக உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த உணவையும் தாய்ப்பால் கொடுக்கும் பெண் சாப்பிடக்கூடாது. உதாரணமாக பாக்கெட்டுகளில் வரும் பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, குளிர்பானங்கள், ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

பொதுவாக உணவுகள் பேக் செய்யப்படும் போது, கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படும். சுவையும் நிறமும் கூட்டுவதற்கான அட்டிடிவ்ஸ் சேர்க்கும் வழக்கமும் உள்ளது.

Must Read | டைப் 2 நீரிழிவு நோயாளிகள்: உணவு விஷயத்தில் அலர்ட் தேவை!

குழந்தை பெறுவதற்கு முன் இவ்வகையான உணவுகளை நீங்கள் சாப்பிட்ட பழக்கம் இருந்தாலும், நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் பொழுது இவ்வகையான உணவுகள் உடல்நலனை பாதிக்கக்கூடும்.

இவ்வகையான உணவுகள் குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகப்படியான மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே போஸ்ட்பார்ட்டம் ஸ்ட்ரெஸ் எனப்படும் குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதிக உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உண்டால் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகி, குழந்தையின் உடல் நலனும் சேர்த்து பாதிக்கப்படும்.

எனவே, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை, நீங்கள் புதிதாய் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: