ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்புக்கு இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும்.!

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்புக்கு இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும்.!

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

Parenting | மனிதர்களாகிய நமக்கு மட்டுமே ஒரு கலெக்டிவ் லேர்னிங் எனப்படும் சிறப்பம்சம் உள்ளது. நம்முடைய அனுபவங்களின் மூலமும் கதைகளின் மூலமும் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய கால பெற்றோர்களுக்கும் குடும்பத்தில் உள்ள பெரியோர்களுக்கும் குழந்தைகளை வளர்ப்பது மட்டும் கடமையாக இருப்பதில்லை. அவர்களை சரியான பாதையில் வழி நடத்துவதும் வாழ்க்கைக்குத் தேவையான தந்திரங்களை சொல்லிக் கொடுத்து வெளியுலக அனுபவத்தை ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்று. முக்கியமாக தங்களின் கடந்த கால நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து தாங்கள் செய்த தவறுகளை அவர்கள் செய்யாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவையும், பிள்ளைகளிடமும் மற்றும் குடும்பத்தாரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

இதைப் பற்றி தாஜி என்று அழைக்கக்கூடிய டாக்டர் கமலேஷ் டி “The wisdom bridge: 9 principles to our life that a course in the out of your loved ones” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் மிக ஆழமாக எழுதியுள்ளார். அதில் அவர் கூரியதாவது,

“மனிதர்களாகிய நமக்கு மட்டுமே ஒரு கலெக்டிவ் லேர்னிங் எனப்படும் சிறப்பம்சம் உள்ளது. நம்முடைய அனுபவங்களின் மூலமும் கதைகளின் மூலமும் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம். அவற்றை நம்முடைய அடுத்த தலைமுறையினரோடும் பகிர்ந்து கொள்கிறோம். இது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. முதன் முதலில் நமது முன்னோர்கள் நெருப்பை கண்டறிந்த போதும் வேட்டையாட கற்றுக் கொண்ட போதும் அவற்றை தன்னுடைய அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். அதுபோலவே குகை ஓவியங்களும் மொழிகளும் ஒரு தலை முறையினரால் கற்றுக் கொள்ளப்பட்டு அடுத்த தலைமுறையினரால் பாதுகாக்கப்பட்டது.

அதற்கு அடுத்து வந்த தலைமுறையினர் அவற்றில் இன்னும் சில புதிய அம்சங்களை புகுத்தி அவற்றை இன்னும் மேம்படுத்தினர். இது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் உதவிகரமானதாகும் வளர்ச்சிக்கு வித்திடவும் செய்தது. ஆனால் விலங்குகளை பொறுத்தவரை இந்த விஷயம் முற்றிலும் மாறாக உள்ளது. ஒரு குரங்கு மாங்காய் பறிக்க குச்சிகளை பயன்படுத்த கற்றுக் கொண்டால் அந்த முறை பற்றி மற்ற குரங்குகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த குரங்கு மரணம் அடையும் போது அந்த அறிவும் குரங்குடன் சேர்ந்து மறைந்து விடுகிறது. ஆனால் "கலெக்டிவ் லேர்னிங்" எனப்படும் இந்த முறை மனிதர்களுக்கு மட்டுமே தனித்தன்மையோடு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை இயற்கை பேரழிவுகளுக்கும் பல்வேறு போர்களுக்கும் பிறகும் மனித இனம் நீடித்து வாழ்வதற்கு இந்த தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் அறிவே முக்கியமாக உள்ளது.

அனைவருக்கும் இப்பொழுது ஒரு கேள்வி எழலாம் இது ஏன் பெற்றோர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது? ஏனெனில் ஒரு சமுதாயத்தின் அடிப்படை குடும்பங்களே ஆகும். குடும்பங்களில் இருந்து தான் ஒரு மனிதன் தன்னுடைய பாரம்பரியத்தை பற்றியும் பழக்க வழக்கங்களையும், அடிப்படை அறிவையும் கற்றுக் கொள்கிறான். மேலும் மேலே கூறிய இந்த கூட்டு கல்வி என்ற முறையும் குடும்பங்களில் உள்ள பெற்றோர்களிடமிருந்தும், தாத்தா பாட்டிகளிடம் இருந்தும் தான் அந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தையின் முதல் ஆசிரியர் அக்குழந்தையின் தாய் தான். ஆசிரியர் என்று கூறுவதை விட அந்தக் குழந்தையின் வாழ்க்கையை துவக்கி வைப்பவர் என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். குழந்தை வளர்ப்பில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.,

Also Read : எச்சரிக்கை... இருமலுக்காக கொடுக்கும் இந்த மருந்து உங்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம்.!

குழந்தைகளை பாதுகாப்பாக உணரச் செய்ய வேண்டும்:

நான் குழந்தையாக இருந்த பொழுது நாங்கள் மிகவும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்தோம். எங்களை சுற்றி உள்ளவர்களும் அன்பாக அரவணைப்பாக இருந்தார்கள். ஆனால் அதைப் பற்றி எப்பொழுதுமே நாங்கள் தனித்துவமாகவும் அல்லது ஆசீர்வதிக்கப்பட்டவர்ளாகவோ எங்களை ஸ்பெஷலாக நினைத்துக் கொண்டதில்லை. ஆனால் இன்றைய காலங்களில் நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. சிறிய விஷயங்களுக்கு கூட குழந்தைகளை தங்களை மிகப்பெரிய ஆளாக நினைத்துக் கொள்ளும் அளவிற்கு பெற்றோர்களும் சமுதாயமும் அவர்களை மாற்றி விட்டனர். ஒரு காலகட்டத்தில் அவர்களை சுற்றியுள்ள இந்த கூட்டம் அவர்களை விட்டு விலகும் போது, அவர்களால் அதனை ஏற்று கொள்ள முடிவதில்லை.

திறமையின் அடிப்படையில் குழந்தைகளை நீங்கள் வகைப்படுத்தும் போது அவர்களின் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாராட்டவும் கூடாது. குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாராட்டும் போது அது அவர்களின் மீது அழுத்தத்தை கொடுப்பதுடன் ஒருவேளை அடுத்த முறை நான் இப்படி செய்யவில்லை என்றால் எனக்கு இந்த பாராட்டு கிடைக்காதோ என்ற பயத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் மனதளவில் அவர்கள் எப்பொழுதும் ஒருவித பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். மேலும் நான் இதை இன்னும் சிறப்பாக செய்தால் மட்டுமே என்னுடைய அம்மாவும் அப்பாவும் என்னை இன்னும் நன்றாக அன்பு செய்வார்கள் என்ற எண்ணமும் குழந்தைகளுடன் ஏற்பட்டு விடுகிறது.

Also Read : எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

இப்படி செய்வதற்கு பதிலாக திறமையின் அடிப்படையில் வெற்றி தோல்வியின் அடிப்படையில் குழந்தைகளை மதிப்பீடு செய்வதை விட்டுவிட்டு எது எப்படி இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்ற மனநிலையை உண்டாக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ நாம் இன்று இரவு சினிமாவிற்கு செல்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம் பார்ட்டிகளுக்கு செல்கிறோம் என்று குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க கற்றுக் கொள்வார்கள். மேலும் அது வெற்றியடையும் போது உச்சத்திலும் தோல்வியடையும்போது தாழ்வாகவும் எண்ணுவதை தடுத்துவிடும்.

நம்முடைய ஞானத்தை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்:

இதை கற்றுக் கொடுப்பதற்கு கடவுள் நேராக வந்து தன்னுடைய ஞானத்தை கொடுக்கமாட்டார். பெற்றோர் மற்றும் பெரியவர்களாகிய நாம் தான் இதை செய்ய வேண்டும். இந்த பாடமானது தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டிய ஒன்று. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே உயிர்வாழ விதிக்கப்பட்டுள்ள நாம் அந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவத்தையும் அறிவையும் ஒரு பாலம் போல மாற்றி நமக்கு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.

Also Read : “பிரவுன் சுகர் இருக்க பயமேன்”... நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

ஒரு சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுவது அச்சமுதாயத்தில் வாழும் பெரியவர்களே. அவர்களிடமிருந்து தான் அடுத்த தலைமுறைக்கு அறிவும் ஞானமும் பழக்க வழக்கங்களும் கடத்தப்படுகின்றன. பெரியோர்களோடு சேர்ந்து செயல்படும் பொழுது குழந்தைகள் தன்னை அறியாமலே அந்த ஞானத்தை பெற்று விடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு குழந்தையிடம் அன்பாக இரு, அமைதியாக இரு, இறக்கமாக இரு என்று எத்தனை முறை அறிவுரை சொன்னாலும் அதனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இதுவே தன்னுடைய தாத்தா பாட்டியுடன் இருக்கும் பொழுது அவர்களின் அன்பும் பழக்க வழக்கங்களும் தன்னை அறியாமலேயே அந்த குழந்தைக்கு வந்துவிடும்.

தாத்தா பாட்டிகளின் பேச்சில் உள்ள பண்பும் அவர்களின் அறிவாற்றலும் அந்த குழந்தைக்கு கடத்தப்பட்டு அவர்களும் அதுபோலவே செயல்படுவார்கள். இது தான் ஞானத்தின் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் பெற்றோர் நினைத்தால் தன்னுடைய குழந்தைக்கு கற்றுக் கொடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பெற்றோருக்கு அதை சொல்லிக் கொடுக்க நேரம் கிடைப்பதில்லை ஆனால் பெரும்பாலும் அக்குடும்பத்தின் பெரியவர்களுக்கு நேரம் நிறையவே இருக்கும் அவர்கள் இதை செய்யலாம்.

Also Read : குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் ஏன் அலட்சியம் செய்ய கூடாது தெரியுமா?

தாய் மொழியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்:

ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமாக தன்னுடைய தாய் மொழியைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் பொழுது என்னுடைய அப்பா என்னை எங்கள் கிராமத்தில் உள்ள மசூதிக்கு அனுப்புவார் அங்கு சில மாதங்கள் நாங்கள் பாடங்களில் கற்றோம். அங்கே எனக்கு ஆசானாக இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது காலை நேரங்களில் நான் ஆசானாகவும் மதியத்திற்கு மேல் யோகாசனங்களை பற்றிய புத்தகங்களையும் மாலை வேலைகளில் மகாபாரத கதைகளையும் அதிகமா படிப்பேன். இந்த அனுபவங்களின் மூலம் என்னால் வாழ்க்கையை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடிந்ததுடன், உலகில் உள்ள பல்வேறு மதங்களைப் பற்றியும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையை பற்றியும் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.

குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள்:

உங்கள் குழந்தைகளுக்கு எப்பொழுதும் நீங்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் குழந்தைகளிடம் அல்லது மற்றவர்களிடம் பழகும் விதமும் பேசும் விதமும் நீங்கள் செய்யும் செயல்களும் நேரடியாக உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் செய்யும் செயலிலும் பேச்சிலும் தெளிவாகும் பண்பாகவும் இருக்கும் பொழுது உங்கள் குழந்தைகளும் அதேபோலவே வளருவார்கள்.

குழந்தைகளிடம் பொறுப்புகளை ஒப்படையுங்கள்

குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாக வளர வேண்டும் என்றால், அவர்களுக்கு பொறுப்புகளையும், கடமைகளையும் பற்றி வாழ்க்கையின் ஆரம்பம் கட்டத்திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கென்று சில கடமைகளையும், பொறுப்புகளையும் கொடுத்து, அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

Also Read : மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் குழந்தைகளை திட்டாதீர்கள்... இத மட்டும் செய்யுங்கள்..!

உதாரணத்திற்கு, என்னுடைய இளைய மகன் இந்தியாவில் மருத்துவ கல்வி படித்துக் கொண்டிருக்கும் போது, அவனிடம் அருகில் உள்ள சில நிலங்களை பற்றி தகவல் சேகரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தேன். அவன் அதை பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு சில நாட்கள் எடுத்துக் கொண்டான். ஆனால் அதன் பிறகு அவன் சேகரித்த தகவல்கள் மிக அற்புதமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து நான் அவனுக்கு கால் செய்து, அந்த நிலத்தை நான் வாங்கி விட்டேன் என்றும், இப்போது அந்த இடத்தில் நீ தான் உனக்கு தேவையான வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டேன்.

அவனுடைய குரலிலேயே அவன் அதிர்ச்சி அடைந்தது எனக்கு நன்றாக தெரிந்தது. மேலும் நான் அவனை முழுமையாக நம்புகிறேன் என்பதை அவன் இந்த ஒரு அழைப்பிலேயே கண்டுபிடித்து விட்டான். ஒரு நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டும் பொறுப்பை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்ததும், அவனிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது அது மிகப்பெரியது என்பதை உணர்ந்து கொண்டான். அந்த வேலையை செய்து முடிக்க அவனுக்கு சில வருடங்கள் ஆகிற்று என்றாலும், அவன் மிக அழகாக ஒரு வீட்டை கட்டி தற்போது அதை நன்றாகவே நிர்வகித்து வருகிறான்.

இவ்வாறு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகளை புத்தகத்தின் ஆசிரியர் கொடுத்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Parenting Tips