Home /News /lifestyle /

10-இல் 9 குழந்தைகளுக்கு இதய ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது - அதிர்ச்சியூட்டும் ஆய்வு

10-இல் 9 குழந்தைகளுக்கு இதய ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது - அதிர்ச்சியூட்டும் ஆய்வு

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதய சிகிச்சை நிபுணராக, 20 ஆண்டுகால அனுபவமிக்க மூத்த மருத்துவரான ரஜினிஷ் கபூர் இதய நோய் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக அதிகரித்துள்ளது என்பதை பற்றி என்பது வருத்தமாக உள்ளதாகவும், இதய நோய் பாதிப்பின் அபாயத்தைக் குறைப்பதில் தனக்கும் பொறுப்பு, பங்கு இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது அதிகமான வேலைப்பளுவும், அதிகமான மன அழுத்தம் இருப்பவர்கள் தான் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் உள்ளது என்றும், உடல் பருமன் நாள்பட்ட நோய் இருப்பவர்கள் மாரடைப்பால் இறப்பார்கள் என்ற காலமெல்லாம் மாறி, ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட திடீரென்று மாரடைப்பால் இறந்து போகும் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளன.

30 களில் இருப்பவர்கள் கூட இதய நோய் பாதிப்பால், திடீரென்று மாரடைப்பால் இறந்து போகும் செய்தி தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே இந்தியா நீரிழிவு தலைநகரம் என்று கூறப்படும் அளவுக்கு நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியம் சார்ந்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கார்டியோ அளவீடுகள் சார்ந்த ஆரோக்கியம் குறைவாக இருப்பதாகவும், 10ல் 9 குழந்தைக்கு இதய ஆரோக்கியம் சார்ந்த வாழ்க்கை முறை இல்லை என்பதும் வெளியாகியுள்ளது.

குர்கானில் உள்ள மெடான்டா மருத்துவமனையின், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் துணை சேர்மனான மருத்துவர் ரஜ்னீஷ் கபூர் நடத்திய இந்த ஆய்வு வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் கவலைக்கிடமாக உள்ளது என்பதையும், அதற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்று ஆரோக்கியமான தலைமுறையை வளர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.



பஞ்சாம் மற்றும் டெல்லியில் இருந்து, 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, இதய ஆரோக்கியம் சார்ந்த அளவீடுகளில் மிகவும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இளம் வயதில் இதய நோய் அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

வளரும் பருவத்திலேயே உடல் பருமன், விளையாட்டு போன்ற செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் தொலைக்காட்சி அல்லது மொபைலிலேயே நேரம் செலவிடுவது, உடலுழைப்பு என்று எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது ஆகியவை தற்போதைய குழந்தைகளிடம் அதிகமாக காணப்படுகிறது. அதாவது இந்த காரணங்கள்தான் குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுடைய அடல்ட் பருவத்தில் இதயநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் நோக்கம் பற்றி மருத்துவர் கபூர் கூறுகையில், “இது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்; ஆனால் இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, இந்தப் பிரச்சனையால் வளர்பருவத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. இந்த ஆய்வைத் தொடங்குவதற்கான நோக்கவே இது தான்” என்றார்.



ஆய்வு முடிவுகள்

இதய சிகிச்சை நிபுணராக, 20 ஆண்டுகால அனுபவமிக்க மூத்த மருத்துவரான ரஜினிஷ் கபூர் இதய நோய் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக அதிகரித்துள்ளது என்பதை பற்றி என்பது வருத்தமாக உள்ளதாகவும், இதய நோய் பாதிப்பின் அபாயத்தைக் குறைப்பதில் தனக்கும் பொறுப்பு, பங்கு இருக்கிறது என்றும் கூறினார். இதய ஆரோக்கியம் பற்றிய பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதய நோய் எவ்வளவு நபர்களை, எந்த வயதினரையும் பாதிக்கிறது என்பதைப் பற்றிய உண்மையான டேட்டாவுடன் சமூகத்தில் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளிடம் பெற்றோர் இந்த விஷயங்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!

அதுமட்டுமில்லாமல் உடல் நலம் சார்ந்த கொள்கைகளை உருவாக்குவர்களுக்கு, இதய நோய் பாதிப்பை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை இதன் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு நபரின் கார்டியோ வாஸ்குலார் ஹெல்த்தும் (CVH) பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் bmi, எவ்வளவு நேரம் ஆக்டிவாக இயங்குகிறார், தூங்கப் போகும் நேரம், தூங்கும் நேரம், உணவுப் பழக்கம், உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதிகப்பட்சம் 100 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. 40க்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்கள் ஆரோக்கியம் கவலைக்கிடம் தான் என்றும், இவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 70 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்கிறார்கள் என்றும், 40 முதல் 70 வரை வாங்கியவர்களுக்கு ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார். இந்த ஆய்வு, பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளிடத்தில் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.



ஆரோக்கியமான குழந்தை என்பது பெற்றோரின் கடமை

பெரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது அவர்கள் குழந்தைப் பருவத்தில் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது தான் பெருமளவில் தீர்மானிக்கிறது. எனவே குழந்தைப் பருவத்தில் கார்டியோவாஸ்குலர் ஹெல்த் ஸ்கோர் குறைவாக இருப்பவர்களுக்கு அவர்கள் வளர்ந்த பின் இதய நோய் பாதிக்கும் அபாயம் மிக அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளிடமும் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ஆபத்து : என்ன காரணம்..? தடுக்கும் வழிகள் என்ன..?

குழந்தைக்கு எதுவும் நேராது என்று தைரியத்தில் பலரும் தங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா? என்பதை பற்றிய கவலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் ஆகும் பொழுது தீவிரமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர வேண்டிய கட்டத்தில் இப்பொழுது இருக்கிறோம். எனவே குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி இதய நோய் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு வழங்குவதை பெற்றோரின் கடமை.

சரிவிகித உணவு என்று புரதம் நிறைந்த உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் என்று எல்லா உணவுகளையும் குடுக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக செயல்பட, உடல் உழைப்பும் அவசியம். வெளிப்புறங்களில் ஓடியாடி விளையாட வேண்டும், உடற்பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல, தினசரி தூக்கமும் அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart health, Kids Health

அடுத்த செய்தி