ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

என்ன கொடுத்தாலும் குழந்தையின் எடை கூடுவதே இல்லை என கவலையா..? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..!

என்ன கொடுத்தாலும் குழந்தையின் எடை கூடுவதே இல்லை என கவலையா..? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..!

குழந்தை உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்

குழந்தை உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்

உங்கள் குழந்தைகள் குறைவான உணவினை சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்களுக்கு அதிக கலோரி கொண்ட உணவை தினமும் கொடுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியையும், உயிர்வாழும் தன்மையையும் நிர்ணயிப்பது அவர்களின் உடல் எடை தான். அதனால் தான் பிறந்த குழந்தையின் எடை 2.5 ஆக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கும் கீழ் இருந்தால் குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல, வளரும் குழந்தைகளின் உடல் எடையை பராமரிப்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை குறைந்த எடையுடன் இருந்தால் அவர்கள் குறைவான நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் இருப்பர். ஒரு வேளை உங்கள் குழந்தைகள் குறைந்த எடையுடன் இருந்தால் அவர்களின் எடையை அதிகரிப்பதற்கு எடுக்க வேண்டிய சில வழிகள் குறித்து பின்வருமாறு காணலாம்.,

உங்கள் குழந்தை எடை குறைவாக இருக்கிறார் என எப்படி கண்டறிவது?

குறிப்பிட்ட கால இடைவெளியில் குழந்தைகளின் எடையை சரிபார்த்து, அதன் வளர்ச்சி அட்டவணையை கண்காணித்து முன்னேற்றத்தை அளவிடுவது முக்கியம். அதில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் அவர்களுக்கு அன்றாடம் கொடுக்கும் உணவு மற்றும் அதன் அளவுகளை மாற்ற வேண்டும்.

குறைந்த எடை கொண்ட குழந்தை வளர என்ன செய்ய வேண்டும்?

அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வது மட்டுமல்லாமல், பின்வரும் சில உதவிகுறிப்புகளும் உங்கள் குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சியைப் பராமரிக்க உதவும்.

1. அதிக கலோரி கொண்ட உணவுகளை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:

உங்கள் குழந்தைகள் குறைவான உணவினை சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்களுக்கு அதிக கலோரி கொண்ட உணவை தினமும் கொடுங்கள். மில்க் ஷேக்குகள், ஸ்மூத்திஸ் மற்றும் உருளைக்கிழங்கு கொண்ட உணவுகளை அவர்களுக்கு கொடுக்கலாம்.

2. பால், கொழுப்பு மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை கொடுக்கலாம்:

கொழுப்புகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை ஊட்டச்சத்தின் ஒரு நல்ல மூலமாகும். பன்னீர், பால், முட்டை, மெலிந்த இறைச்சிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளின் டயட்டில் சேர்க்கலாம். அதேபோல நட்ஸ் மற்றும் விதைகளையும் அவர்களுக்கு கொடுங்கள்.

பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கிறது..?

3. அடிக்கடி உணவு கொடுங்கள் :

உங்கள் குழந்தைகளுக்கு 3 வேளை உணவு தருவதற்கு பதிலாக, அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் எதாவது புதிதாக சமைத்து கொடுக்கலாம்.

4. உணவுக்கு முன் திரவங்கள் அல்லது தண்ணீர் கொடுக்க வேண்டாம்:

குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை குழந்தைகளின் வயிற்றை மிக வேகமாக நிரப்பும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய பிறகே அவற்றை கொடுக்க வேண்டும்.

5. மல்டிவைட்டமின்கள் அல்லது சப்ளிமென்ட்களைச் சேர்த்துக் கொள்ளலாம்:

எடை மற்றும் வளர்ச்சி அட்டவணையில் உங்கள் குழந்தை சரியான அளவை எட்டவில்லை என்றால், அவர்களுக்கு சில வைட்டமின்கள் மற்றும் எடை அதிகரிப்பு சப்ளிமெண்ட்ஸ்களை கொடுக்கலாம். ஆனால், இதுபோன்ற சப்ளிமெண்ட்ஸுகளை கொடுப்பதற்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

6. சாப்பிடும் விஷயத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது:

எதிர்மறையான உணவுப் பழக்கங்களை உருவாக்காக்கூடாது. ஆரோக்கியமான மற்றும் வீட்டில் சமைத்த உணவை கொடுப்பது அவசியம். அதேபோல உணவு கொடுக்கும் போது உங்கள் குழந்தைகளை டிவி அல்லது மொபைலில் படம் பார்க்க வைக்காதீர்கள்.

7. அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தலாம்:

இதனை செயல்படுத்துவது சற்று கடினமாக இருந்தாலும், உடற்பயிற்சி என்பது குழந்தைகளை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது. அவர்கள் எவ்வளவு அதிகமாக உடற்பயிற்சி செய்து சோர்வடைகிறார்களோ, அப்போது அவர்களுக்கு பசி அதிகமாக இருக்கும். அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Care, Kids diet, Kids Food, Parenting Tips