குழந்தைக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்குறீங்களா ? அப்ப இதை படியுங்கள்..

குழந்தை

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதால் குழந்தைக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

  • Share this:
    பிறந்த குழந்தைக்கு அதிகபட்சமாக 1 வருடம் வரையில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் சில குடும்ப சூழ்நிலைக் காரணமாக வேலைக்குச் செல்ல நேரும் பெண்கள் அல்லது தாய்ப்பால் சுரக்காத பெண்கள் புட்டிப் பால் கொடுக்கத் துவங்குகின்றனர்.

    ஆனால் அந்தக் புட்டிப்பால் என்பது அதிகபட்சமாக பிளாஸ்டிக் பாட்டில்களாகவே இருக்கின்றன. இதை நிரூபிக்கும் விதமாக பத்தில் ஒன்பது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே பால் கொடுப்பதாக ஆய்வு கூறுகிறது.இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த , சுத்தம் செய்ய எளிமையாக இருப்பது பயன்பாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதனால் சில பாதிப்புகளும் இருக்கின்றன.


     அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பினால் என்னும் நஞ்சு கலக்கப்படுவதாகவும் அது கொஞ்சம் கொஞ்சமாக சூடாக ஊற்றும் பாலிலோ அல்லது தண்ணீரிலோ கசிந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.இதனால் குழந்தைக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். குழந்தையின் சிறுநீர் வழியாகவும் இந்த நஞ்சானது வெளியேற வாய்ப்புள்ளதாகவும் இதனால் சிறுநீரக பாதிப்பு கூட உண்டாகலாம் என எச்சரிக்கின்றனர்.




    அதிகபட்சமாக புற்றுநோய் கூட உருவாகும் சாத்தியம் இருக்கிறது என நிரூபனம் செய்து 2012 ஆண்டு குழந்தைகளில் பாட்டில்களில் பிஸ்பினால் பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்தான் பயன்படுத்தப்போகிறீர்கள் எனில் பின்குறிப்பு லேபிளில் பிஸ்பினால் பயன்படுத்தப்பட்டுள்ளதா என கவனித்து வாங்குங்கள்.




    அதேபோல் இந்த பிஸ்பினால் என்னும் நஞ்சு மட்டுமல்லாது பிளாஸ்டிக் உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சில ரசாயணங்களும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே பிளாஸ்டி பால் புட்டிகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

    எனவே இந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக ஸ்டீல் பாட்டிகள் வாங்கலாம். தற்போது சந்தையில் ஸ்டீல் பாட்டில்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதை வாங்கி பயன்படுத்தலாம். குழந்தை வளர வளர பாட்டில் பாலை கட்டுப்படுத்தி டம்ளரில் பால் கொடுக்கப் பழக்கப்படுத்துவதும் நல்லது. ( நன்றி : பேபிடெஸ்டினேஷன். காம்)



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: