ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளின் தலையில் அடிபட்டால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன..? உடனே செய்ய வேண்டியவை..!

குழந்தைகளின் தலையில் அடிபட்டால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன..? உடனே செய்ய வேண்டியவை..!

தலையில் அடிபட்டால் செய்ய வேண்டியவை

தலையில் அடிபட்டால் செய்ய வேண்டியவை

வீட்டில் சிறு குழந்தைகள் அல்லது கைக்குழந்தைகள் இருந்தால் அவர்களை எவ்வளவு கவனமாக நாம் பார்த்து கொண்டாலும் படுக்கையிலிருந்தோ அல்லது நாற்காலிகளில் இருந்தோ கண்ணிமைக்கும் நேரத்தில் தவறி விழும் சம்பவங்கள் நடப்பது பொதுவானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டில் சிறு குழந்தைகள் அல்லது கைக்குழந்தைகள் இருந்தால் அவர்களை எவ்வளவு கவனமாக நாம் பார்த்து கொண்டாலும் படுக்கையிலிருந்தோ அல்லது நாற்காலிகளில் இருந்தோ கண்ணிமைக்கும் நேரத்தில் தவறி விழும் சம்பவங்கள் நடப்பது பொதுவானது.

அப்படி இல்லை என்றால் ஓடி வரும் போது டேபிள் அல்லது வேறு கடினமான பொருட்களின் கார்னரில் தலையை இடித்து கொள்வார்கள். தலையில் அடிகள் படும் போது குழந்தைகள் வலி மற்றும் வீக்கத்தால் கதறியழும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான தலை காயங்கள் சிறியவை மற்றும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தாது. என்றாலும் மிக அரிதான சந்தர்ப்பங்களில், தலையில் ஒரு சிறிய வீக்கம் கூட கடும் பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும்.

இதனிடையே பிரபல குழந்தை மருத்துவர் டாக்டர் நிஹார் பரேக் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில், பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு 2 வயது வரை மண்டை ஓடுநெகிழ்வாக இருக்கும். எனவே தலையில் ஏதேனும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி பெரிய அளவில் கடத்தாமல் தடுக்கப்பட்டு ஆழமாக காயம் ஏற்படுவதை தடுத்து மூளைக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

எனினும் குழந்தைகளுக்கு தலையில் அடிபடும் சந்தர்ப்பங்களில் எந்தவொரு தீவிரமான சிக்கல்களையும் தடுக்க ஆரம்பகால நோயறிதல் முக்கியம் என்றும் கூறுகிறார். ஒருவேளை குழந்தையின் தலையினுள் அடி பலமாக விழுந்திருந்தால் அதனால் ஏற்படம் பாதிப்புகள் அல்லது காயங்களை பெற்றோர்கள் பின்னரும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என்று கோடிட்டு காட்டி இருக்கிறார் நிபுணர் நிஹார் பரேக்.


கவனிக்க வேண்டிய முக்கிய அபாய அறிகுறிகள் :

குழந்தைகளுக்கு தலையினுள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய அபாய அறிகுறி, தலையின் ஒரு பகுதியில் மட்டும் வீக்கம் அதிகமாகி கொண்டே செல்வது. சில மணி நேரங்களுக்குள் வீக்கம் அதிகரித்து கொண்டே சென்றால் நீங்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும்.
கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதை குறிக்கும் மற்றொரு முக்கியமான அறிகுறி தொடர்ச்சியான வாந்தி. ஆம், கீழே விழுந்து எழுந்ததில் இருந்து 24 மணி நேரத்திற்குள் குழந்தைகள் தொடர்ச்சியான வாந்தி எடுத்தால் அது காயம் பலமாக ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாகும்.
மூக்கு அல்லது காதிலிருந்து ரத்தம் அல்லது வேறு நிறத்திலான திரவம் வெளியேறினால் சிறிதும் தாமதிக்க கூடாது.
கீழே விழுந்த சில மணி நேரங்களுக்குள் தூக்க கலக்கம் போன்று முழுமையாக விழிப்பு பெறாத அரைகுறை உணர்வோடு குழந்தைகள் இருந்தால் இதுவும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
இருப்பதிலேயே மிக கடுமையான அபாய அறிகுறி வலிப்பு ஆகும். குழந்தைகள் கீழே விழுந்த சில நிமிடங்கள் கழித்தோ அல்லது உடனேயோ வலிப்பு பிரச்சனையை எதிர்கொண்டால் தாமதிக்காமல் மருத்துவமனை கூடி செல்ல வேண்டும்.
அதே போல கீழே விழுந்த பிறகு அவர்களது நடை நிலையாக இல்லாமல் மாற்றம் தெரிந்தால் பெற்றோர்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். குறுநடை போடும் குழந்தையாக இருந்தாலும் கூட, வழக்கமான நடையை வெளிப்படுத்தாமல் தள்ளாடியபடி நடந்தால் உடனடியாக கவனித்து மருத்துவரிடம் பரிசோதனைக்கு கூட்டி செல்ல வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Head Injury, Parenting Tips