கோவிட் தொற்று குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்துள்ளது? பெற்றோர்கள் செய்ய வேண்டிவை!

குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்கள் அல்லது வித்தியாசங்களை பார்க்கும் பட்சத்தில், பெற்றோர்கள் அல்லது பிற உறவினர்கள் தங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள் மற்றும் கவலைகளை தெரிவிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • Share this:
நீடித்து வரும் கோவிட் தொற்று குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பள்ளி பக்கமே எட்டிப் பார்க்காத குழந்தைகள் ஒருபக்கம், பள்ளியை விட அதிகமாக படிப்பு படிப்பு என்று ஆன்லைன் கிளாஸ் மற்றும் ஹோம் ஒர்க் என்றே வீட்டில் பொழுதை கழிக்கும் குழந்தைகள் ஒருபக்கம் என்று நாட்டிலிருக்கும் குழந்தைகள் பல்வேறு குழந்தைகளின் வாழ்க்கை வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது.

சூழல் இப்படி இருப்பதால் குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்கள் அல்லது வித்தியாசங்களை பார்க்கும் பட்சத்தில், பெற்றோர்கள் அல்லது பிற உறவினர்கள் தங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள் மற்றும் கவலைகளை தெரிவிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மனநலத் துறை பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் சாகர், நாடு நெருக்கடியிலிருந்து முற்றிலும் விடுபடாத நிலையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான சூழலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை கோவிட் எவ்வாறு பாதித்துள்ளது?

உடல் மற்றும் உளவியல் ரீதியாக குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். எனவே எந்தவொரு கவலையும், அதிர்ச்சியும் அவர்களுக்கு ஆழமான பாதிப்புகளையும், நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்த கூடும். இந்த கோவிட் தொற்று கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என அவர்களின் இயல்பான செயல்பாடுகள் பெரும்பாலானவற்றை மாற்றியுள்ளது. பிள்ளைகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது அவர்களது பள்ளி தோழர்களுடனான தொடர்பை பெருமளவு துண்டித்துள்ளது. சில குழந்தைகளின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் கொரோனா காரணமாக பலியாகி இருக்கிறார்கள். இப்படி பல காரணங்கள் பல குழந்தைகளின் மனநலனில் பாதிப்புகளை ஏற்படுத்தி வளர்ச்சியை தடை செய்துள்ளன.துயரத்தில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்கும் போது எதிர்கொள்ளும் சவால் :

மன அழுத்தம் ஏற்படும் சூழல்களில் குழந்தைகள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். சில குழந்தைகள் எந்நேரமும் பெற்றோர் அல்லது உறவினர் கூடவே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் பெற்றோர் உட்பட அனைவரிடமிருந்தும் விலகி இருக்க நினைக்கிறார்கள், இன்னும் சில குழந்தைகள் ஆக்ரோஷமாக காணப்படுவர், சிலர் மன சோர்வுடன் இருக்கிறர்கள். எனவே குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்வது கடினம். சுற்றியுள்ள சூழல் குழந்தைகளின் உணர்ச்சி அல்லது மனநிலையை பாதிக்கும் காரணியாக இருக்கிறது என்பது மட்டுமே நமக்கு தெரிந்த விஷயம்.

சில சமயங்களில் குழந்தைகள் ஒரு கடினமான சூழ்நிலையை உள்வாங்கி கொள்வார்கள் ஆனால் கவலையை வெளிப்படுத்த மாட்டர்கள். உதாரணமாக அவர்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை சொல்லலாம். இது மாதிரியான நிகழ்வுகளின் போது ஏற்படும் அச்சம், கவலை, பதற்றம் உள்ளிட்ட உணர்வுகளை சிலநேரங்களில் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குளேயே வைத்து கொள்கிறார்கள். எனவே குழந்தைகளின் நடத்தையை பெரியவர்கள் கண்காணிப்பதும், அவ்வப்போது தங்கள் கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளின் கண்ணோட்டங்களையும் குழந்தைகளை சொல்ல சொல்லி கேட்பதும் அவசியமாகிறது.

ஜைகோவ்-டி தடுப்பூசி மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாக்குமா..? குழந்தைகளுக்கு பலன் தருமா? மருத்துவரின் விளக்கம்

குழந்தைகள் தங்கள் நினைப்பவற்றை அல்லது அனுபவிப்பவற்றை தெளிவாக வெளிப்படுத்த அவர்களுக்கு சாதகமான சூழல் வழங்கப்பட வேண்டும். தொற்று காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கத்தை நேரடி கேள்விகளால் பெரியவர்கள் புரிந்து கொள்வது சற்று கடினம். அவர்களிடம் பேசும் போது மென்மையாக பேசி விஷயத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். தொற்று, மரணம் போன்ற சிக்கலான விஷயங்களை பற்றி அவர்களுடன் பேசும்போது போது நேரடியாக ஒளிவு மறைவின்றி பேசுவது முக்கியம்.தொற்று சிறு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதன் விளைவை எவ்வாறு குறைக்க முடியும்?

எல்லா குழந்தைகளுக்கும் அதன் முதல் 5 ஆண்டுகள் அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம். இந்த வயது குழந்தைகளுக்கு பல நேர்மறை தூண்டுதலை பெரியவர்கள் வழங்க வேண்டும். அவர்களை சுற்றி நேர்மறையான சூழல் இல்லாதது, சமூக தொடர்புகள் இல்லாதது உள்ளிட்ட காரணிகள் அவர்களின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். குழந்தைகளுக்கு தொற்று உண்டாகும் அபாயத்தை நாம் ஏற்படுத்த கூடாது என்றாலும், அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்ற கூடிய வகையில் வேடிக்கையான சூழலை அவர்களுக்கு உருவாக்கி தரலாம். குழந்தைகளிடையே தொற்று சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான முறைகளை பெரியவர்கள் வகுக்க வேண்டும் என்று டாக்டர் ராஜேஷ் சாகர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வியில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கான ஆலோசனை என்ன?

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது கல்வி வாழ்க்கையில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தோற்று காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை திட்டங்களை சீர்குலைத்துள்ளது. இந்த சூழலில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. கல்வி தொடர்பான குழப்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உனக்கு மட்டும் இது போல இல்லை உலகத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் இதே போன்ற சூழலில் தான் இருக்கின்றனர் என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.பெற்றோருக்கான ஆலோசனை என்ன?

தொற்று காரணமாக பல பெற்றோர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு வீடே பணியிடமாக மாறி இருப்பது சுமையாக இருக்கும் நேரத்தில், தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கவனிப்பதற்கான கூடுதல் பொறுப்பையும் சமாளிப்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. அனைத்து வயது குழந்தைகளுக்கும் பொதுவாக பெற்றோர்கள் தங்களுடன் நேரம் ஒதுக்க வேண்டும், தங்களை கவனிக்க வேண்டும், தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.

நெருக்கடியான இந்த நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களதுதினசரி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி, நேர்மறையான மனநிலையில் இருக்க வேண்டும். அபோது தான் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை உற்சாக மனநிலையில் வைத்திருக்க முடியும். குழந்தைகளின் உளவியல் பெற்றோர்களின் மன நிலையுடன் தொடர்பு கொண்டிருப்பதால், மன அழுத்தத்தை சமாளிக்க முடியாதவர்கள் நண்பர்கள் அல்லது மனநல நிபுணரை அணுகலாம்.

 
Published by:Sivaranjani E
First published: