Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய 5 நல்ல பழக்க வழக்கங்கள்

குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய 5 நல்ல பழக்க வழக்கங்கள்

பேரண்டிங் டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்

Parenting Tips | குழந்தைகளுக்கு சிறு வயதில் கற்றுக் கொடுக்கின்ற சில பழக்க வழக்கங்கள் தான் அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும்.

    குழந்தைகளுக்கு சிறு வயதில் கற்று கொடுக்கின்ற சில பழக்க வழக்கங்கள் தான் அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும். அந்த வகையில் அவர்களின் அன்றாட செயல்கள் முதல் பழக்க வழக்கங்கள் வரை எல்லாமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து வந்தால் எதிர் காலத்தில் அவர்கள் சிறப்பான மனிதர்காளாக உருவாக முடியும். இந்த பதிவில் குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய 5 நல்ல பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    ப்ளீஸ் பற்றி கற்றுக் கொடுங்கள்

    மற்றவர்களிடம் கோரிக்கை வைக்கும் போது 'ப்ளீஸ்' என்கிற வார்த்தையை சொல்ல உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். எனவே குழந்தையுடன் உரையாடும் போது 'ப்ளீஸ்' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்குங்கள், இந்த வார்த்தையை எங்கு, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதே போன்று குடும்பத்தில் உள்ளவர்களும் 'ப்ளீஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், குழந்தைகள் அதைத் தாங்களே கற்று கொள்வார்கள்.

    மன்னிப்பு கேட்டல்

    குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பது பற்றியதன் முக்கியத்துவத்தை கற்று தருவது அவசியம். எதாவது தவறு செய்தால் மன்னிக்கவும் என்ற வார்த்தையை உங்கள் குழந்தையுடன் அடிக்கடி பயன்படுத்துமாறு கூறுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தை தவறு செய்யும் போதெல்லாம் மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்வார்கள்.

    அனுமதி பெறவும்

    ஒருவரின் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு முன், உங்கள் குழந்தை மற்றவர்களுடன் அனுமதி பெறுவதை உறுதிசெய்யுங்கள். இந்தப் பழக்கத்தை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க, நீங்கள் அவருடைய பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு முன் அவருடைய அனுமதியைப் பெற பழகுங்கள். உதாரணத்திற்கு நான் உனது பென்சில் எடுத்து கொள்ளலாமா? நான் உனக்கு உணவளிக்கலாமா? இது போன்று கேட்டு பழகுங்கள். இது உங்கள் குழந்தைக்கு அனுமதி கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் மீதான அதீத கவனிப்பு என்ன விளைவை கொடுக்கும்? பெற்றோருக்கான கைட்லைன்ஸ்!


    இடையில் பேசாதே

    அவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பேசும்போது இடையில் பேசக்கூடாது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை முடித்ததும் குழந்தையை பேசச் சொல்ல பயிற்சி செய்யலாம். இது மிகவும் நல்ல பழக்கமாகும்.

    நன்றி சொல்லுதல்

    முக்கியமான விஷயங்களுக்கு நன்றி சொல்ல உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். நன்றி சொல்வது எவ்வளவு முக்கியம், அதை ஏன் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். அதே போன்று உங்கள் குழந்தை நன்றி கூறுவதை உறுதிசெய்ய, உங்கள் குழந்தையின் உதவியை நீங்கள் பெறும் போதெல்லாம் அவர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்க வேண்டும். இது போன்று செய்து வந்தால் குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் பழகி விடும். மேலும் எதிர் காலத்தில் சிறந்த மனிதராக அவர்கள் உருவாவார்கள்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Child Care, Kids Care, Lifestyle, Parenting Tips

    அடுத்த செய்தி