Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொடுத்து பழக்குதல் ஆபத்து..! என்னென்ன பாதிப்புகள் வரும்..?

குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொடுத்து பழக்குதல் ஆபத்து..! என்னென்ன பாதிப்புகள் வரும்..?

சர்க்கரை ஆபத்து

சர்க்கரை ஆபத்து

குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொடுப்பது அவர்களை மந்தமாக்கும் மற்றும் அவர்களின் கற்றல் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் முதல் குளிர்பானம் மற்றும் பிஸ்கட்ஸ் வரை, குழந்தைகளின் உணவில் பொதுவான ஒரு பகுதியாக சர்க்கரையால் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகள் இருக்கும். ஆனால் இனிப்புகள் அவர்களின் நினைவக செயல்பாட்டை மெதுவாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொடுப்பது அவர்களை மந்தமாக்கும் மற்றும் அவர்களின் கற்றல் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, குழந்தை பருவத்தில் அதிக சர்க்கரை கொண்ட பானங்களின் அதிக நுகர்வு இளமை பருவத்தில் கற்றல் மற்றும் நினைவாற்றல் போன்ற செயல்திறனைக் குறைக்கிறது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ‘ட்ரான்ஸ்லேஷனல் சைக்காட்ரி’ (Translational Psychiatry) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மளிகை கடைகளில் குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் இனிப்புகள், பானங்கள் ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அதிக சர்க்கரை உணவுகள் உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற உடல்நல பாதிப்புகள் மற்றும் நினைவக செயல்பாடு பலவீனமடைதல் போன்ற கோளாறுகளை ஏற்படுத்துகிறது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து ஜார்ஜியா பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர் தலைமையிலான இந்த புதிய ஆராய்ச்சி எலிகள் மீது நடத்தப்பட்டுள்ளன.

அதில், குழந்தை பருவத்தில் சர்க்கரை-இனிப்பு பானங்களை தினசரி உட்கொள்வது இளமை பருவத்தில் கற்றல் மற்றும் நினைவாற்றல் போன்ற செயல்திறனைக் குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குடலில் உள்ள பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்கள் சர்க்கரையால் தூண்டப்பட்ட நினைவகக் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று குழு மேலும் சுட்டிகாட்டியுள்ளனர். இந்த சாத்தியத்தை ஆதரிக்கும் வகையில், சர்க்கரையை ஒருபோதும் உட்கொள்ளாத எலிகளின் குடலில் பராபாக்டீராய்டுகள் (Parabacteroides) எனப்படும் பாக்டீரியாக்களை சோதனை ரீதியாக வளப்படுத்தியபோது இதேபோன்ற நினைவக குறைபாடுகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.மேலும் கூடுதல் பகுப்பாய்வுகள் மூலம், அதிக சர்க்கரை நுகர்வு குடல் நுண்ணுயிரிகளில் பராபாக்டீராய்டுகளின் அளவை உயர்த்த வழிவகுத்தது. இந்த பாக்டீரியாக்கள் மனித உடல்நலம் மற்றும் நோய்களில் பங்கு வகிக்கும் இரைப்பைக் குழாயில் உள்ள 100 டிரில்லியனுக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் ஆகும். இது தொடர்பாக யுஜிஏ குடும்ப மற்றும் நுகர்வோர் அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் எமிலி நோபல் கூறியதாவது, "ஆரம்பகால வாழ்க்கையில் விலங்குகளின் குடலில் சர்க்கரை பராபாக்டீராய்டுகளின் அளவை அதிகரித்தது. மேலும் பராபாக்டீராய்டுகளின் அளவு உயர்ந்ததால், விலங்குகள் அதன் பணிகளை மோசமாக செய்தன" என்று கூறினார்.

பெற்றோர்களே... குழந்தை வளர்ப்பில் இந்த 4 விஷயங்களைப் பற்றி தெரியுமா..?

மேலும் "சர்க்கரை போலவே நினைவகத்தை பாதிக்க பாக்டீரியா மட்டுமே போதுமானது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஆனால் இது மற்ற வகை நினைவக செயல்பாடுகளையும் பலவீனப்படுத்தியது என்பது குடலில் பாக்டீரியா வளப்படுத்தப்பட்ட சர்க்கரை சாப்பிடாத எலிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். ஆரம்பகால வாழ்க்கையின் சர்க்கரை நுகர்வு அவர்களின் ஹிப்போகாம்பஸ், கற்றல் மற்றும் நினைவகத்தை தேர்ந்தெடுப்பதை பாதிக்கிறது என்று நோபல் மேலும் கூறினார்.தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய சர்க்கரை அளவு:

அமெரிக்க வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளின் கூட்டு வெளியீடான அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களின்படி, ஆடட் சுகர்களை ஒரு நாளைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான கலோரிகளுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகள் 9-18 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்கள் அந்த பரிந்துரையை மீறுவதாகக் காட்டியுள்ளன.

அதிலும், சர்க்கரை இனிப்பான பானங்களிலிருந்து வரும் கலோரிகளின் அளவு தான் அதிகம் என்று கூறப்படுகின்றன. பலவிதமான அறிவாற்றல் செயல்பாடுகளில் ஹிப்போகாம்பஸ் வகிக்கும் பங்கையும், இளமைப் பருவத்தில் அவை நன்கு வளர வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, குடல் மைக்ரோபயோட்டா வழியாக அதிக சர்க்கரை நுகர்வு மற்றும் அதன் பாதிப்பு குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் புரிந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Children, Kids, Sugar, Sugar intake

அடுத்த செய்தி