Gender Crisis : வீட்டில் விளையும் பாலின வேறுபாடு - விவரிக்கும் மனநல நிபுணர்!

மாதிரி படம்

பாலின சமத்துவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • Share this:
பாலின சமத்துவம் என்பது காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விதை எங்கிருக்கிறது என்று தேடும்போது, ஆண், பெண் பாலின வேறுபாட்டுக்கு வீடுகளே விதையிடுவதாக தெரிவிக்கிறார் மனநல நிபுணர் சாக்ஷி சிங்லா. ஆண், பெண் பாலின வேறுபாடு குறித்து அவர் பேசும்போது, "பாலின சமத்துவம் என்றாலே அது பெண்களுக்கானது என பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. உண்மையில் அது தவறான மனநிலை அல்லது தவறான பார்வை என்று நான் கூறுவேன். பெண்கள் ஒரு விதத்தில் சமத்துவத்தை இழந்தால், ஆண்கள் மற்றொரு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர்" என்கிறார்.

பாலின சமத்துவத்தை பேசும்போது ஆண் மற்றும் பெண் என இருதரப்பு பாதிப்பு குறித்து விசாலமான பார்வையுடன் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், வீடுகளில் இருந்து அதனை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாலின சமத்துவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சாக்ஷி சிங்லா தெரிவித்துள்ளார்.

ஆண், பெண் குழந்தைகளுக்கு தாய் என்ற முறையில், தங்கள் வீட்டில் இப்போது இருந்து ஆண், பெண் பாலின வேறுபாட்டை வலியுறுத்தும் சொல்லாடல்களை கவனமாக தவிர்த்து வருவதாகவும், ஆனால் சமூகத்தில் இருக்கும் புற அழுத்தம் காரணமாக சில இடங்களில் மற்றவர்களைப் போலவே அந்த சொல்லாடல்கள் தவிர்க்க முடியாததாக இருப்பதாகவும் சாக்ஷி சிங்லா கூறியுள்ளார்.



பாலின வேறுபாட்டுக்கு வீடுகளில் எப்படி விதைகள் ஊன்றப்படுகின்றன என்பது குறித்து, தன்னுடைய கவுன்சிலிங் அனுபவங்களை சாக்ஷி சிங்லா பகிர்ந்து கொண்டுள்ளார்.

1. பெண் ஒருவர் என்னிடம் கவுன்சிலிங் வந்தார். அவர் கூறியது என்னவென்றால், " என் சகோதரருடன் ஒப்பிடும்போது எனக்கு தாழ்வு மனப்பான்மை மேலோங்குகிறது. நான் வீட்டிலேயே இருக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறேன், ஏனென்றால் பாலின அடிப்படையில் நான் பெண். என் சகோதரர் ஐரோப்பாவில் படிக்கிறார், பல இடங்களுக்கு சென்று வருகிறார். ஆனால், திருமணத்துக்காக வீட்டில் நான் காக்கவைக்கப்பட்டிருக்கிறேன். என் வீட்டில் இருப்பவர்கள் அதுவே எனக்கு போதும் என நினைக்கின்றனர். கடினமான வேலை செய்யத் தேவையில்லை அல்லது மேற்படிப்பிற்காக மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என நினைக்கின்றனர்" என்றார்

2. மற்றொரு பெண், "என்னுடைய சிறுவயதில் நான் எப்படி உட்கார வேண்டும், பேச வேண்டும், நடக்க வேண்டும், பிறரிடம் எப்படி பழக வேண்டும் என பல எதிர்பார்ப்புகள் என்னை நோக்கி உள்ளது. காரணம் நான் பெண் என்பதால். 8 வயதிலிருந்து மற்றவர்களிடம் குரலை உயர்த்தி பேசக்கூடாது, பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என கற்பிக்கப்பட்டது. அவர்கள் சிறு வயதில் எப்படி இருந்தார்கள், எப்படி நடந்து கொண்டார்கள், ஒரு வீட்டில் அமைதியை பெண் எப்படி ஏற்படுத்த முடியும், வீட்டு வேலைகளை எப்படி கற்றுக்கொண்டார்கள் என கற்பித்தார்கள்" என்றார்.



3. "நானும் என் சகோதரரும் படிப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால், 14 வயதானவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் என் சகோதரருக்கு ஏற்பட்டது. பல்வேறு அவமானங்கள் மற்றும் அருவருப்புகளுக்கு இடையில் அவர் வெற்றிபெற்றார். காரணம், என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு சகோதரருக்கு இருந்தது. நான் மட்டுமல்ல, என் சகோதரரும் பாலினத்தை காரணம் காட்டி பல்வேறு வழிகளில் பலிகடாவாக்கப்பட்டோம். இது எங்களுடைய இளமை பருவத்தை பாதித்தது. பொதுவாக, சமூகத்தில் ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. பாலின சமத்துவம் இன்மையால் பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று, ஆனால் உண்மையில் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார் பெண் ஒருவர்.

4. "நான் கல்லூரியில் உளவியலைத் தேர்தெடுத்தேன். இது எங்கள் வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. அறிவியல் கிடைக்கவில்லை என்றால் வணிகத்தை எடுக்க வேண்டியது தானே என பலரும் ஆதங்கப்பட்டார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், நான் ஆண்" எனக் குறிப்பிட்டார் ஒருவர்.

இது குறித்து பேசிய சாக்ஷி சிங்லா "குறுகிய மன்பான்மை மீண்டும் மீண்டும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது. பெண்கள் என்றால் பெற்றோரை நன்றாக பார்த்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால், நல்ல மகன் ஒருவரும் பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்வார். வீடுகளில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்கள் ஆண், பாலின வேறுபாட்டை எப்படி நுட்பமாக ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் இங்கே புரிந்து கொள்ளலாம்.



1. பையன் கடினமானவன், பெண் அக்கறையுள்ளவள்

2. இது பையனுடைய பொருள், பெண்ணிண் பொருள்

3. பாதிக்கப்படக்கூடியவள் பெண், பையன் திடமானவன்

பெற்றோர்களே...குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்..! அதற்கான 6 வழிகள்..

4. பையன் என்றாலே பிரச்சனை தான்

5. பெண்களைப் போல் அழாதே!

6. நீ ஏன் சமையலைறயில் இருக்கிறாய், இது உன்னுடைய இடம் இல்லையே ( பையன்களுக்கு)

7. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள், சமையலைறையில் எனக்கு உதவி செய் (பெண்களுக்கு)

8. நீ பையன், நாளைக்கு இந்த குடும்பத்தை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

9. பையன்கள் எப்போது தைரியமாக இருக்க வேண்டும். நீ தான் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். பலவீனத்தை எப்போதும் வெளியில் காட்டக்கூடாது

10. நீ ஒரு பெண் பிள்ளை, அதற்கேற்றார்போல் அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை கற்றுக்கொள்.



11. என்னம்மா! இப்படி வளர்ந்து கொண்டேபோற, உனக்கு எப்படி புருஷன் கிடைப்பான்?

12. பொண்ணுங்க மாதிரி நடந்து கொள், இப்படி உட்கார வேண்டும். சாந்தமாக பேசு, சத்தமாக பேசாதே

இதுபோன்று ஏராளமான சொல்லாடல்களும், வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் இந்த சொற்களை நீக்கினாலே ஆண், பெண் சமத்துவம் சமூகத்தில் மேலோங்கத் தொடங்கும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.



வீடுகளில் என்ன செய்ய வேண்டும்?

ஆண், பெண் பேதமையை உருவாக்கும் சொல்லாடகளை கவனமாக தவிர்க்க வேண்டும் என கூறும் சாக்ஷி சிங்லா, எந்த ஒரு இடத்திலும் பேதமையை உருவாக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். பெண்களை குறுகிய வட்டத்திற்குள் அடக்குவதையும், ஆண்களுக்கு குடும்ப பாரம் உள்ளிட்ட சுமைகளை ஏற்றுவதையும் தவிர்ப்போம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 
Published by:Sivaranjani E
First published: