• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இதிலெல்லாம் ஆபத்து! குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத 7 வகை உணவுகள்!

இதிலெல்லாம் ஆபத்து! குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத 7 வகை உணவுகள்!

குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை கொடுப்பது மிகவும் அவசியம் என்பதால், சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

  • Share this:
குழந்தை வளர வளர, ஒவ்வொரு புதிய உணவாக அறிமுகப்படுத்துவது மிகவும் சுவாரஸ்யமாகவும், அதே நேரத்தில் சவாலாகவும் இருக்கும். ஒவ்வொரு உணவையும் குழந்தை விரும்புகிறதா, வெறுக்கிறதா? என்பதை அறிந்து கொண்டு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளச் செய்வது பெற்றோரின் கடமைகளில் ஒன்று. என்னுடைய குழந்தை எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்று பெற்றோரின் விருப்பமாக இருந்தாலு, சில உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக் கூடாத 7உணவுகள் பட்டியல் இங்கே.

தேன்:

சூப்பர்ஃபுட்ஸ் என்ற வகைப்படுத்தப்பட்ட, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த தேன், குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகளில் ஒன்று. தேனில் இருக்கும் கொலஸ்டிரியம் பாக்டீரியா, குழந்தைக்கு உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நோய்களை உண்டாக்கக் கூடும். தேனை குழந்தைகளால் செரிமானம் செய்ய முடியாது. இதனால் ஃபுட் பாய்சன், தீவிரமான மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, குறைந்த பட்சம் குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை தேன் கொடுக்கக் கூடாது.

பசும்பால்:

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். சில தாய்மார்களுக்கு போதிய அளவுக்கு தாய்ப்பால் சுரக்காமல் போனால், ஃபார்முலா மில்க் எனப்படும் குழந்தைகளுக்கான பால் பவுடர் கொடுக்கலாம். ஆனால், குறைந்த பட்சம் ஒரு வயது முதல் இரண்டு வயது வரை பசும்பால் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பசும்பாலை ஜீரணிக்க முடியாது என்பதோடு, தாய்ப்பால் மற்றும் ஃபார்முலாவில் இருக்கும் சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.

பதப்படுத்தப்படாத பாலுக்கும் இது பொருந்தும். பாஸ்டுரைசேசன் என்பது இதமான வெப்பத்தின் மூலம் திரவ உணவுகளில் உள்ள கிருமிகளை நீக்கும் முறையைக் குறிக்கும். அவ்வாறு பாஸ்டுரைசேசன் செய்யபடாத பாலைக் கொடுப்பது குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

பழச்சாறுகள்:

பழச்சாறுகள் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால், குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள் எதுவுமே பழச்சாறுகளில் இல்லை. மேலும், பழச்சாறுகளில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும். இதனால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே குழந்தைக்கு ஆறு மாதம் ஆன பிறகு, பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம்.

Must Read | பெருஞ்சீரக விதைகளில் இத்தனை நன்மைகளா? தினசரி பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கியம்!

மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகள்:

இளம் வயதிலேயே அதிக இனிப்பு உணவுகளை குழந்தைக்கு கொடுப்பது அவர்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். இனிப்பு உணவுக்கு குழந்தை பழகி விட்டால், மற்ற உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாது. இதனால் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும். மிட்டாய்கள், சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புப் பண்டங்கள், ஒரு வயது முடியும் வரை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி:

பெரும்பாலும், குழந்தை நன்றாக மென்று சாப்பிடக் கற்றுக்கொள்ளும் வரை, இறைச்சி மற்றும் கடினமாக உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிலே, குறிப்பாக, புகையூட்டி சமைக்கப்பட்ட இறைச்சியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு சமைக்கப்படும் இறைச்சியில், ரசாயனங்களும், அதிக உப்பும் சேர்க்கப்படுவது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்:

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் எந்த சத்துக்களும் இல்லை. குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை கொடுப்பது மிகவும் அவசியம் என்பதால், சுத்திகரிக்கப்பட்ட (Refined) தானியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு உணவையும் புதிதாக அறிமுகப்படுத்தும் போது, குழந்தை முழு ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்கவும்.

ஒரு நேரத்தில் ஒரு புதிய உணவை மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று நான்கு புதிய உணவைக் கொடுக்க வேண்டாம். இது குழந்தைக்கு செரிமானம் ஆகிறதா, ஒவ்வாமை உண்டாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: