சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் உண்மையில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வளரும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் குழந்தைகள் தொடர்ந்து உணவு வேண்டாம் என்று மறுக்கும் போது அல்லது சாப்பிட அடம் பிடிக்கும் போது பெற்றோர்கள் ஆழ்ந்த கவலை கொள்வது இயல்பானது. சாப்பிட வம்பு செய்யும் குழந்தைகளை புரிந்துகொள்வது மற்றும் இந்த சிக்கலை எவ்வாறு சமாளிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
உணவின் சுவையை விரும்ப மாட்டார்கள்..
பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போதே இயற்கையாகவே இனிப்பு சுவையை விரும்புகிறார்கள். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் அதிக அளவு இனிப்புகளை விரும்புகிறார்கள். எடுத்துக்காட்டாக அவர்கள் இனிப்பு சாப்பிடும் அளவிற்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். இதுவே பல நேரங்களில் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
உணவில் உள்ள கூறுகள்:
உங்கள் குழந்தை பிரெட் துண்டுகள், கேக்குகள், ரொட்டி துண்டுகள், சிக்கன் நகெட்ஸ் மற்றும் சிப்ஸ் போன்ற உணவுகளை பிளேட்டில் வைத்தவுடன் உடனடியாக சாப்பிட்டு காலி செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதற்கு காரணம் அந்த உணவுகளை மெல்ல மற்றும் விழுங்க அவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை மற்றும் அவை எந்த கூடுதல் ஊட்டச்சத்து மதிப்பும் இல்லாத பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவும் இருக்கின்றன. குழந்தைகள் இந்த வகை உணவுகளை விரும்பி சாப்பிட இரண்டாவது காரணம் அவை மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். ஒரு குழந்தை கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகளை எளிதில் விரும்புகிறது.
பசி - கவனச்சிதறல் இரண்டுக்குமான தொடர்பு:
உணவுகளை கொடுப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அவர்கள் ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது அவர்களின் உணவு சாப்பிடும் விருப்பத்தை குறைக்கலாம். மேலும் இப்பழக்கம் தொடர்வது அவர்களுக்கு பசியின்மையை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் குழந்தைகளுக்கான உணவு நேரம் மற்றும் ஸ்னாக்ஸ் கொடுக்கும் நேரத்தை திட்டமிடுவது அவசியம். அதே போல சாப்பிடும் நேரத்தில் டிவி அல்லது மொபைல் ஸ்கிரீன் பார்த்து கொண்டே சாப்பிடுவது கவன சிதறலை ஏற்படுத்தி சாப்பிடும் அளவை குறைக்க கூடும்.
சமையலில் தவறுதலாக மஞ்சள் அதிகமாக சேர்த்து விட்டீர்களா..? உடனே சரி செய்யும் டிப்ஸ்..!
ஸ்பூன் ஃபீடிங்கின் பங்கு:
பெற்றோர்கள் தங்கள் கைகளால் உணவை கொடுத்தால் குழந்தைகள் நிச்சயமாக அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. அவர்களின் பசியை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் கைகளால் உணவுகளை கொடுப்பதை விட, தங்களின் மேற்பார்வையில் அவர்களை சுயமாக உணவுகளை சாப்பிட பழக்குவதே சிறந்தது.
உங்கள் குழந்தை எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது:
சோர்வு மற்றும் செயல்பாட்டு நிலைகள் குழந்தைகளின் பசியின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும். அப்படி இருந்தால் தானே அவர்களுக்கு பசியை அதிகரிக்கும். ஆனால் உடல் செயல்பாடுகளின்றி இருந்தால் வழக்கமாக சாப்பிடுவதைப் போல சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
எப்படி கையாளுவது?
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி, வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது மற்றும் குறைவான உயரத்திற்கு வழிவகுக்கிறது. எனவே சாப்பிட வம்பு செய்யும் குழந்தைகளுக்கு பின்வரும் வழிகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்கலாம்.
School Reopening : மன அழுத்தத்தால் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
உணவு விருப்பங்கள்:
நல்ல ஆரோக்கியமான, சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது புதிய உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். எனினும் புதிய உணவை அவர்கள் சாப்பிட பழக்க சில நாட்கள் எடுக்கலாம்.
நியூட்ரிஷ்னல் சப்ளிமென்ட்:
உங்கள் குழந்தையின் உணவில் ஒரு நியூட்ரிஷ்னல் சப்ளிமென்ட் அல்லது டிரிங்கை சேர்த்து கொள்ளுங்கள். குழப்பமான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்க முழு மற்றும் சமச்சீர் ஊட்டச்சத்து தீர்வை அந்த சப்ளிமெண்ட் வழங்குவதை உறுதிப்படுத்துங்கள்.
ஃபன்:
ஆரோக்கிய உணவை அவர்கள் விரும்பும் வகையில் எப்படி ஃபன்னாக வழங்கலாம் என்பதில் ஆக்கப்பூர்வமாக இருங்கள். பாஸ்தாவில் காய்கறிகளைச் சேர்த்து, ஒரு ப்ரோக்கோலி பிளேட்டில் டிப்பிங் சாஸின் ஒரு பக்கத்தைச் சேர்க்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கான முக்கிய உணவுகள்..
தசைகள், பிற திசுக்களை உருவாக்க மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆதாரம் உடலில் சேர பழங்கள் மற்றும் காய்கறிகள், வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு, குணப்படுத்துதல் மற்றும் உடல் இரும்பு சத்தை உறிஞ்ச வைட்டமின் சி, மூளை மற்றும் நரம்புக்கு வளர்ச்சிக்கு ஆரோக்கிய கொழுப்புகள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.