Home /News /lifestyle /

எப்போதும் பிஸியாகவே இருக்கும் அம்மாக்களுக்கு குளிர்கால ஸ்கின்கேர் டிப்ஸ்..

எப்போதும் பிஸியாகவே இருக்கும் அம்மாக்களுக்கு குளிர்கால ஸ்கின்கேர் டிப்ஸ்..

Happy loving family. Mother and daughter are doing hair and having fun. Mother and her child girl playing, kissing and hugging.

Happy loving family. Mother and daughter are doing hair and having fun. Mother and her child girl playing, kissing and hugging.

பலரும் வீட்டிலிருந்து வேலை செய்வது, குழந்தைகளை கவனித்துக்கொள்வது என பிசியாகவே உள்ளனர். இருப்பினும் அம்மாக்கள் தங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதும் அவசியம்.

தற்போது நாம் அனைவரும் குளிா்காலத்தில் இருக்கிறோம். குளுமையான வானிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தூங்குவதற்கு இந்த குளிா்காலம் மிகவும் இதமாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் நமது சருமத்தை நன்றாக பராமாிக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். கிறிஸ்துமஸ், புதுவருட பிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் உற்சாகத்திற்காக குளிர்காலத்தை கொண்டாட நாம் அனைவரும் விரும்புகிறோம், இந்த குளிர்காலத்தை சரியாக டீல் செய்யாவிட்டால் நம் சருமத்தை ஒருவழியாக்கிவிடும்.

பெரும்பாலும் நாம் தாய்மார்கள் பல விஷயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் பெரும்பாலும் சரும பராமரிப்புக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. தொற்றுநோயானது முழு வீச்சில் பரவிக்கொண்டிருப்பதால் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்வது, குழந்தைகளை கவனித்துக்கொள்வது என பிசியாகவே உள்ளனர். ஆரோக்கியமான பளிச்சென்ற சருமத்தைப் பெற பிஸியான அம்மாக்களுக்கான குளிர்கால ஸ்கின் கேர் டிப்ஸ்களை நாம் இங்கு காண்போம்.மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரியுங்கள் :

பெரும்பாலும், ரசாயன பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக நமது தோல் சேதமடைகிறது. தாய்மார்களின் பிஸியான வாழ்க்கை அட்டவணையில், உடனடி நிவாரணம் பெற எளிதில் கிடைக்கக்கூடிய சில தயாரிப்புகளை அவர்கள் அடிக்கடி தேர்வு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சருமம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க இயற்கை முறையிலான தயாரிப்புகளுக்கு மாறுவது முக்கியம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கிளிசரின், கற்றாழை பயன்படுத்தவும். உங்கள் கண்களுக்கு வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு துண்டுகளைப் (cucumber or potato slice) பயன்படுத்துங்கள். கிரீன் டீ பேக்குகளை (green tea bags) பயன்படுத்தி தூக்கி எரியாமல் அதை மீண்டும் பயன்படுத்தவும், அதை உங்கள் முகத்திலும், கழுத்திலும் தேய்க்கவும். இது உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்றிகளால் ஊடுருவி, மென்மையாக வைத்திருக்கும். கருவளையங்களை சரி செய்யவும் கிரீன் டீ பேக்குகள் பயன்படுத்தலாம்.

குளிர்காலத்தில் வறட்சியடையும் பாதங்கள் : பராமரிக்க சிம்பிள் டிப்ஸ் இதோ..!

எக்ஸ்போலியேஷன் அவசியம் :

உடல் அழகு பராமரிப்பில் எக்ஸ்போலியேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை வழக்கமான முறையில் செய்து வரவேண்டும். ஒப்பனை செய்வதற்கு முன்பு உங்கள் மெல்லிய உதடுகளில் உள்ள இறந்த அணுக்களை ஸ்க்ரப் செய்யவேண்டும். பிறகு மாயிஸ்ச்சரைசர் தடவ வேண்டும். பெரும்பாலும் குளிர்ந்த காலநிலை காரணமாக, இந்த முக்கியமான கட்டத்தை பாலரும் தவிர்க்கிறார்கள். ஆனால் மாயிஸ்ச்சரைசர் ஆக்குவது போல எக்ஸ்போலியேஷன் முக்கியமானது. வாரத்திற்கு இரண்டு முறை என, உங்கள் முகம், கழுத்து, கைகள், கால்கள், உதடுகளின் வெளிப்புறத்தில் பயன்படுத்துவதன் மூலம் இறந்த திசுக்களை அகற்ற இது உதவுகிறது. இயற்கையான, லேசான எக்ஸ்ஃபோலைட்டிங் பேக்ஸ்களை நீங்கள் தேர்வு செய்யலாம், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரை, தயிர், அரிசி மாவு அல்லது பயித்தம் பருப்பு மாவு, தேன், எலுமிச்சை மற்றும் சர்க்கரை போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள் :

மென்மையான, மிருதுவான சருமத்தைப் பெற, உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தி நீரேற்றமாக (hydrated) வைத்திருங்கள். அடர்த்தியான மாய்ஸ்சரைசரை அடிக்கடி பயன்படுத்துங்கள். நீங்கள் மாய்ஸ்சரைசரை குளியல் மற்றும் படுக்கைக்குச் செல்லும் முன் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், மாய்ஸ்சரைசரின் அளவை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். உங்கள் தோல் வகையைப் பொறுத்து ஜெல் அடிப்படையிலான அல்லது கிரீம் சார்ந்த மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்யலாம். ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெயைக்கூட பயன்படுத்தலாம்.

லுக்வார்ம் (Lukewarm) வாட்டரை பயன்படுத்துங்கள்:

சூடான ஷவர் குளியலுக்கு பதிலாக லுக்வார்ம் வாட்டரைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது. குளிர் காலத்தினால் உங்கள் தோல் ஏற்கனவே உலர்ந்திருக்கும். மேலும், லுக்வார்ம் வாட்டரைக் குடித்து உங்கள் உடலை உள்ளிருந்தும் நீரேற்றமாகவும் வைத்திருங்கள். உங்கள் ரூமை சுற்றியுள்ள காற்றில் ஈரப்பதத்தை உறுதிப்படுத்த முடிந்தால் ஈரப்பதமூட்டியைப் (humidifier) பயன்படுத்தவும்.எஸ்ஸென்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்  :

உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஒரு அற்புதமான வழி, தாவரத்தின் நன்மையால் வளப்படுத்தப்பட்ட எஸ்ஸென்சியல் எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது தான். அத்தியாவசிய எண்ணெயின் அழகிய, மெய் மறக்கும் நறுமணத்தில் உங்களை நனைத்து, உங்கள் சருமம் போதுமான ஊட்டச்சத்தை பெற முயலுங்கள். ஜோஜோபா எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய்கள் சருமத்திற்கு சிறந்தவை (Jojoba oil, lavender oil, rosemary oils are great for the skin). மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை தூண்ட உதவுகிறது, இதன் மூலம் உங்கள் முகம் ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கும்.

குளிர் காலத்தில் இருந்து நமது முகத்தை மட்டும் அல்ல அதோடு நமது கைகள் மற்றும் பாதங்களையும் பராமாிக்க வேண்டும். கைகளையும், பாதங்களையும் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவற்றின் தோல்கள் வறண்டு அாிப்பு ஏற்படும். பின் சருமம் பொழிவிழந்து உயிரற்றதாக மாறிவிடும். ஆகவே இந்த குளிா்காலத்தில் நமது கைகளையும் பாதங்களையும் பராமாிப்பதற்குரிய மேற்சொன்ன எளிய குறிப்புகளை பயன்படுத்துங்கள்
Published by:Sivaranjani E
First published:

Tags: Skincare, Winter

அடுத்த செய்தி