• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முதல் மாதவிடாய் நாளிற்கு மகளை தயார் செய்ய அம்மாவாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதல் மாதவிடாய் நாளிற்கு மகளை தயார் செய்ய அம்மாவாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதல் மாதவிடாய்

முதல் மாதவிடாய்

உங்கள் பெண் குழந்தைக்கு முதல் வரும் மாதவிடாய் எப்போது என கணிப்பது மிகவும் கடினம், பெண்கள் எந்த அறிகுறிகளையும் வெளியில் காட்ட மாட்டார்கள்.

  • Share this:
பருவமடைவது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான மைல்கல். அதே நேரத்தில், இது அனைத்து பெண்களுக்கும் மிகவும் கடினமான நேரம். இந்த காலகட்டத்தில் ஹார்மோன் மற்றும் உடல் மாற்றங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், சவால்களை எதிர்கொள்ள பெண் குழந்தைகளை தயார்படுத்துவது முக்கியம்.

எனவே உங்கள் பருவடையும் வயதில் பெண் குழந்தை இருந்தால், அதைப் பற்றி அவளுக்கு முன்பே கற்பிக்கவும். பள்ளியில் மாதவிடாய் பற்றி அவள் கற்று கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன, ஆனால் குழப்பத்தை நீக்கி மாதவிடாய்க்கு அவளை தயார்படுத்துவது உங்கள் பொறுப்பு.

பெண்களுக்கான பருவமடையும் வயது :

பருவமடையும் வயது சுற்றுச்சூழல், ரசாயனங்கள், மரபணுக்கள், எடை போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொருவர் பருவமடையும் வயதும் வேறுபடுகிறது. பெரும்பாலான பெண்கள் 12 முதல் 14 வயதில் பருவமடைகிறார்கள். இருப்பினும், இது சற்று முன்கூட்டியே அல்லது பின்னர் நடந்தாலும் இயல்பானது. பொதுவான மாதவிடாய் மார்பகங்கள் உருவாகத் தொடங்கிய சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்குகிறது.



முதல் மாதவிடாய் காலம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

முதல் மாதவிடாய் காலங்கள் பொதுவாக மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். முதல் இரண்டு நாட்களில் மாதவிடாய் இரத்தப்போக்கு மிக அதிக அளவில் இருக்கும். ஒரு பெண்ணின் உடல் வழக்கமான சுழற்சியை பெற சில மாதங்கள் ஆகும். சில மாதங்களுக்கு பின்னர் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் ஆரம்பத்தில், ஒருவர் அதிக இரத்தப்போக்கு பிரச்சனையை அனுபவிக்கலாம்.

முதல் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பொதுவான அறிகுறிகள்

உங்கள் பெண் குழந்தைக்கு முதல் வரும் மாதவிடாய் எப்போது என கணிப்பது மிகவும் கடினம், பெண்கள் எந்த அறிகுறிகளையும் வெளியில் காட்ட மாட்டார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காணலாம்:

அவற்றில் சில...

முகப்பரு
வயிற்று வீக்கம்
மார்பகங்களில் வலி
முதுகு வலி
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
சோர்வு
கூடுதல் உணர்ச்சி
இனிப்புகள் மீது விருப்பம்
வெள்ளை திரவ வெளியேற்றம்



உங்கள் குழந்தையை எவ்வாறு தயார் படுத்துவது?

மாதவிடாய் நேரத்தில் நம் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றி அம்மாக்கள், முதல் தங்களது பெண் குழந்தைகளுக்கு கூற வேண்டும். ஒவ்வொரு மாதமும் நமது உடலில் இருந்து கெட்ட ரத்தங்கள் வெளியேறுகிறது என்றும், இது இயல்பானது பயப்பட ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். இது தொடர்பான பல கேள்விகள் அவர்களுக்கு தோன்றலாம், அவற்றிற்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டும்.

அவர்களது குழப்பத்தை தீர்ப்பதே மனரீதியாகத் தயார்படுத்துவதற்கான ஒரே வழியாகும். அது தவிர, ஒரு பீரியட் கிட் தயார் செய்து அவர்களது பள்ளி பையில் வைத்து அனுப்புங்கள். அதில் உள்ளாடைகள், வைப்ஸ் வைத்து கொள்ள அறிவுறுத்துங்கள்.



எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

* உங்கள் குழந்தையின் உடல்நலம் தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தால், மகளிர் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

* உங்கள் மகள் 15 வயதிற்குள் பருவமடையவில்லை என்றால் அதுகுறித்து தெளிவு பெற்று கொள்ளலாம்.



* இரத்தப்போக்கு சரியாக இல்லை என்றாலோ, மிக அதிக ரத்த போக்கு இருந்தாலோ மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

* ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.

* அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கடுமையான வலியை அனுபவித்தால் சிகிச்சை பெறுவது அவசியம்.

* மாதவிடாய் காலங்கள் 7 நாட்களுக்கு மேல் நீடித்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: