Home /News /lifestyle /

கேரட் முதல் பரங்கிக்காய் வரை.. குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய காய்கறிகளை தெரிந்து கொள்ளுங்கள்..

கேரட் முதல் பரங்கிக்காய் வரை.. குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய காய்கறிகளை தெரிந்து கொள்ளுங்கள்..

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதன் முதலில் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் ஆர்வமும், குழப்பங்களும் ஒருசேர ஏற்படும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதன் முதலில் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் ஆர்வமும், குழப்பங்களும் ஒருசேர ஏற்படும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதன் முதலில் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் ஆர்வமும், குழப்பங்களும் ஒருசேர ஏற்படும்.

குழந்தைகளுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடெண்ட்ஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்டவை காய்கறிகளில் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத விஷயங்கள் ஆகும். குறிப்பாக, காய்கறிகளை நன்றாக குழையும்படி வேகவைத்து மசித்து, கூழ் அல்லது பேஸ்ட் போல போல செய்து கொடுத்தீர்கள் என்றால், அது குழந்தையின் உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

தாய்ப்பால் அல்லது பசும்பால் குடித்து வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு முதன் முதலில் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் ஆர்வமும், குழப்பங்களும் ஒருசேர ஏற்படும். நம் குழந்தைக்கு என்ன கொடுத்தால் சத்தாக இருக்கும், எதையெல்லாம் குழந்தை விரும்பி சாப்பிடும் என்பது புரியாமல் நீங்கள் குழப்பம் அடையக் கூடும். சிலர் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று, வீட்டில் அல்லது அருகாமையில் உள்ள பெரியவர்களை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

பொதுவாக 8 முதல் 9 மாத குழந்தைகளுக்கு காய்கறிகளை மசித்துக் கொடுப்பது தான் சத்தான உணவாகும். நல்ல கலர்ஃபுல் காய்கறிகளை கொண்டு கூட்டு போல நன்றாக வேகவைத்துக் கொடுத்தால், அது குழந்தைகளுக்கு சுவையாக இருக்கும் என்பதுடன், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக, காய்கறிகளில் கொழுப்புச் சத்து குறைவு. இதனால், குழந்தைகளுக்கு உடல் பருமன் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.



பரங்கிக்காய் மசியல்:

காப்பர், பொட்டாசியம், பாஸ்புரஸ், புரதம் மற்றும் விட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் பரங்கிக்காயில் மிகுதியாக உள்ளன. மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அவர்களின் கண் பார்வைத் திறனை மேம்படுத்தும். குழந்தைகளின் இதய நலனுக்கு நல்லது. வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்காத லேசான உணவு இதுவாகும்.

also read : உங்கள் குழந்தைகளுக்கு தினசரி கிடைக்க வேண்டிய 8 வகையான ஊட்டச்சத்துக்கள்..!

கேரட் மசியல் :

விட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்ஸ் சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளன. இது கண்களின் நலனுக்கு நல்லது. சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளை இது எதிர்த்து போராடக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். குழந்தைகளின் மூளைத் திறன் வளர்ச்சி மற்றும் இதய நலனுக்கு நல்லது. புரதம், பொட்டாசியம், மாவுச்சத்து மற்றும் கலோரி ஆகியவையும் இதில் உள்ளது.



உருளைக்கிழங்கு மசியல்:

விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியது உருளைக்கிழங்கு ஆகும். குழந்தைகளின் செரிமானக் கோளாறுகளை சரி செய்யும். உருளைக்கிழங்கை வேக வைத்து அதை பாலுடன் சேர்த்து ஊட்டலாம்.

ப்ரோக்கோலி மசியல் :

குழந்தைகளின் குடல் நலன் மற்றும் கண்களுக்கு இது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். இது மட்டுமல்லாமல் அனீமியா பாதிப்பு வராமல் தடுக்கிறது. இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Child, Parenting Tips

அடுத்த செய்தி