உங்கள் குழந்தைக்கு முதல் முறை திட உணவு தர போறீங்களா..? அதற்கான நல்ல நாள் எப்போது..?

உங்கள் குழந்தைக்கு முதல் முறை திட உணவு தர போறீங்களா..? அதற்கான நல்ல நாள் எப்போது..?

குழந்தைக்கு முதல் திட உணவை கொடுக்கும் நாள் சமஸ்கிருதத்தில் "அன்னபிரஷான்" என்று கூறப்படுகிறது

குழந்தைக்கு முதல் திட உணவை கொடுக்கும் நாள் சமஸ்கிருதத்தில் "அன்னபிரஷான்" என்று கூறப்படுகிறது

  • Share this:
புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஏற்படும் பொதுவான சந்தேகம் எப்போது முதல் திட உணவுகளை கொடுக்க துவங்குவது என்பது. ஏனென்றால் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாப்பிடும் போது கைக்குழந்தை அவர்களையே உற்று பார்க்கும் போது சிறிய ஜீவனை விட்டு சாப்பிடுகிறோம் என்ற சங்கடம் ஏற்படும்.

எப்போது?

கூட்டு குடும்ப முறை மறைந்ததும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைக்கு எப்போது முதல் திட ஆகாரங்களை கொடுக்கலாம் என்று சரியாக வழிகாட்டுவார்கள். புதிதாக குழந்தை பெற்றவர்கள் எனில் இந்த சந்தேகம் நிச்சயம் உங்களுக்கும் இருக்கும். உங்கள் குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் ஆகிவிட்டது என்றால் இனி தாராளமாக நீங்கள் அதற்கு ஏற்ற திட உணவுகளை கொடுக்க துவங்கலாம்.குழந்தையின் 20-வது வாரத்தில் இருந்து 27-வது வாரம் வரையிலான காலகட்டத்தில் அதற்கு திட உணவுகளை சாப்பிட கொடுத்தால் அலர்ஜி, வயிற்று கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் புதிதாக பிறந்த குழந்தையின் பெற்றோராக இருப்பின் மேற்சொன்னவாறு குழந்தைக்கு திட உணவுகளை வழங்குவதற்கான காலம் வந்திருந்தால், அதற்கான நல்ல நாள் இந்த மாதத்தில் எப்போது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் இருக்கும் அறையில் இந்த பொருட்களில் கவனமாக இருங்கள் - மருத்துவர்களின் ஆலோசனை

அன்னபிரஷான்..

குழந்தைக்கு முதல் திட உணவை கொடுக்கும் நாள் சமஸ்கிருதத்தில் "அன்னபிரஷான்" என்று கூறப்படுகிறது. இதற்கு "தானிய தீட்சை" என்று பொருள். இன்னும் எளிமையான சொன்னால் உங்கள் குழந்தையின் முதல் உணவு அல்லது முதல் அரிசி உண்ணும் விழா என்று பொருள். முதல் பிறந்த நாள் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன் அன்னபிரஷான் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த அன்னபிரஷான் சடங்குகள் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு இரட்டைப்படை மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு ஒற்றைப்படை மாதங்களிலும் இந்த சடங்கு செய்யப்படும். பொதுவாக அன்னபிரஷான் விழாவானது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நல்ல நேரம் குறித்து நடத்தப்படும்.வழக்கமாக இந்நாளில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய ஆடைகளை அணிவிப்பார்கள். அன்னபிரஷான் சடங்கானது ஒரு பூஜை அல்லது குழந்தையின் உடல்நலம் மற்றும் மகிழ்ச்சிக்காக பிராத்தனை செய்வதன் மூலம் தொடங்கும். இதைத் தொடர்ந்து உங்கள் குழந்தைக்கு ஏற்ற திட உணவை முதல் முதலில் சாப்பிட ஊட்டி விடலாம்.

நல்ல நாள்?

அதன்படி இந்த மாதம் அன்னபிரஷனுக்கான முகூர்த்தம் மார்ச் 15 (இன்று) மற்றும் மார்ச் 24 என 2 நாட்களில் உள்ளது. மார்ச் 15 திங்கள் அன்று உங்கள் குழந்தைக்கு முதன் முதலில் திட உணவுகளை வழங்க மத முறைப்படி சடங்குகளை நடத்துவதற்கான நல்ல நேரம் காலை 6:31 மணி முதல் பிற்பகல் 1:44 மணி வரை. வரும் மார்ச் 24 புதன்கிழமைஎன்று காலை 6:21 முதல் 10:24 வரை ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published: