Home /News /lifestyle /

குழந்தைகள் ஊசி, மருந்து, மாத்திரைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்..?

குழந்தைகள் ஊசி, மருந்து, மாத்திரைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்..?

ஊசி

ஊசி

ஒரு விஷயத்தைப் பற்றிய பயம் ஏற்படும் என்றால் அது பாதுகாப்பானதாக இல்லை என்பதைக் குறிக்கும் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.

குழந்தை பிறந்த நாள் அன்றே அல்லது இரண்டாம் நாளில் தொடங்கி பலரும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஊசிகள் போடப்பட்டு வருகிறது. ரத்த சாம்பிள் எடுப்பது, தடுப்பூசிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாமல் போனால் மருத்துவர் ஆலோசனை பெறுவது, ஆகிய காரணங்களுக்காக ஊசியைத் தவிர்க்கமுடியாது. அதே நேரத்தில், ஊசி என்பதே குழந்தைகள் மனதில் மிகப் பெரிய அச்சமாக அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனாலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதை குழந்தைகள் வெறுப்பார்கள்.

அது மட்டுமின்றி, அத்தியாவசிய தடுப்பூசிகள் போடா வேண்டிய சூழலில், மற்றும் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் உடல்நலம் குணமாக இன்ஜெக்ஷன் போட்டுக்கொள்ள குழந்தையை சம்மதிக்க வைப்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய செயலாக இருக்கும்.

ஊசியை பற்றிய பயம் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கிறதா?

குழந்தையின் ஒரு வயது முதல் ஓரளவுக்கு விவரம் தெரியும் 10 வயது வரை அனைவருக்குமே ஊசியைப் பற்றிய பயம் இருக்கிறது. ‌‌இதைத் தவிர்த்து ஒருசிலருக்கு கூடுதலான அச்சம் ஏற்படும. மருத்துவமனை செல்ல போகிறோம் என்றாலே ஊசி என்ற பயம் பொதுவாக 4 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு தோன்றி, அதிகமாகும். அதே போல 7 வயது முதல் 9 வயது வரை ஊசி மருந்து என்றாலே குழந்தைகள் பெரிதாக அச்சப்படத் துவங்குவார்கள். அந்த பயம் படிப்படியாக 10 வயதிலிருந்து 12 வயதுக்குள் குறைந்துவிடும் அதாவது குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது ஊசியைப் பற்றிய பயம் நீங்கும்.



குழந்தைகளுக்கு ஊசி பற்றிய பயம் ஏன் ஏற்படுகிறது?

ஒரு விஷயத்தைப் பற்றிய பயம் ஏற்படும் என்றால் அது பாதுகாப்பானதாக இல்லை என்பதைக் குறிக்கும் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதனால் ஏற்பட்ட வலியை நினைவில் வைத்திருந்தால் எப்போது மருத்துவமனைக்கு சென்றாலும், அந்த அச்சம் தானாகவே ஏற்படும். பக்கத்து வீட்டில் அல்லது பள்ளியில் யாருக்காவது ஊசி போட்டதனால் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டு, அதைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஊசி மீது பயத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமின்றி ஒரு சில பெரியவர்களுக்கே ஊசி போட்டுக்கொள்வது என்றாலே கொஞ்சம் பயம் தான். பெற்றோர்கள் ஊசி வேண்டாம் எனக்கு மாத்திரை மட்டும் போதும் என்று கேட்கும் போடு குழந்தைகளும் பயப்படுவது இயல்பு.

குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

ஒரு குழந்தையை ஊசி பற்றிய பயத்தை நீக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம், உடல் நலம் சரியாக ஊசியைச் செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத வயதில் அவர்கள் இருந்தால், ஊசி பற்றிய பாசிட்டிவான மனநிலை மாற்ற வேண்டும்.

பொதுவாகவே குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் நடத்தையை பொறுத்துதான் குழந்தைகள் எவ்வளவு தூரம் பயப்படுகிறார்கள் என்பது தெரியும். குழந்தைக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள் இருக்கும் போது, குழந்தைகள் ஊசி பயத்தை பெரிதும் உணர்வதில்லை. அதுமட்டுமின்றி குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், ஊசி பற்றிய பயத்தை நீக்குவதற்கு உதவலாம். ஊசியால் ஏற்படும் எதிர்மறையான விஷயங்கள் வலி, வீக்கம், உள்ளிட்டவற்றைப் பற்றி எதையுமே குழந்தையின் பெற்றோர் பேசக்கூடாது.



மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் குழந்தைகளுக்கு எப்படி உதவ முடியும்?

பெற்றோர்கள் எவ்வளவுதான் முன்னேற்பாடு செய்து குழந்தைகளுக்கு ஊசி பற்றிய பயத்தை குறைக்க முயற்சித்தாலும், மருத்துவமனைகளும் குழந்தைகளோடு உரையாடும் மருத்துவப் பணியாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

தேவைப்பட்டால் மட்டுமே குழந்தைக்கு ஊசி செலுத்தினால் போதும் என்பதை மருத்துவர்கள் செயல்படுத்த வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் எல்லா நோய்களுக்கும் ஊசி தேவைப்படுவதில்லை. அதை கருத்தில் கொண்டு யாருக்கெல்லாம் ஊசி போட்டால்தான் நோய் குணமாகும் அல்லது தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறதோ அந்த குழந்தைகளுக்கு மட்டும் ஊசியை செலுத்தினால் போதுமானது.

ஏற்கனவே ஏற்பட்ட வலி குழந்தைகள் அவ்வளவு சுலபமாக மறக்காத சூழ்நிலையில், அல்லது வலி தாங்காத சூழலில் ஊசி போடும் இடத்தில் லேசாக மரத்துப் போகச் செய்யும் க்ரீம் அல்லது ஸ்ப்ரேவை லோக்கல் அனஸ்தீசியா போல பயன்படுத்தலாம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Child Care, Vaccin, Vaccination Injection

அடுத்த செய்தி