கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர்.
தேர்வு எழுதுவதற்கு முன்னும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும் போதும் மாணவர்கள் பதற்றம் அடைவது இயற்கை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாணவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட்டை பற்றி கவலைப்பட தொடங்குகிறார்கள். குழந்தைகளுக்கு தேர்வு பீதி காரணமாக மன அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளது மற்றும் அதை அவர்கள் நிர்வகிக்க எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்து கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும். எக்ஸாம் ரிசல்ட் என்ற விஷயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல நேரங்களில் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சுருக்கமாக சொன்னால் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி எனலாம். தேர்வு பீதி மற்றும் ரிசல்ட் பீதி ஏற்படுத்தும் தேவையற்ற மன அழுத்தம் குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை இழக்க செய்கிறது. பெரும்பாலான குழந்தைகளின் குழந்தை பருவம் புத்தகங்களால் நசுக்கப்படுகின்றன. தற்போதைய நாட்களில் பள்ளி குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பிரச்சனைகளில் கல்வி மன அழுத்தம் ஒன்று. இதில் தேர்வு முடிவுகள் தொடர்பான மன அழுத்தம் அதிகமாக உள்ளது. மோசமான மதிப்பெண் பெற்றால் அவமானம் என்பது மாணவர்களின் மனதில் பதிகிறது.
மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்க காரணங்கள்:
நல்ல மார்க் எடுக்காவிட்டால் பெற்றோரின் கோபம், நிராகரிப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணம் காரணமாக மாணவர்களிடையே எழும் கவலைகள் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது. தவிர தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை வரையறுக்கிறது என்று மாணவர்கள் நினைத்து கொண்டிருக்கும் போது, நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் வாழ்வே போய்விடும் என்ற தவறான எண்ணமும் மாணவர்கள் மத்தியில் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
Also Read : குழந்தைகள் மீதான அத்துமீறல்களை கண்டறிவது எப்படி..? அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் இதோ!
மாணவர்களின் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது.?
* மாணவர்கள் தேர்வு நேரங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கான காரணத்தை பெற்றோர்கள் சரியாக கண்டறிய வேண்டும். இந்த மன அழுத்தம் தூக்கம், பசியின்மை மற்றும் சமூக வாழ்க்கை போன்ற அவர்களின் இயல்பான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
* தேர்வுகளின் போது மாணவர்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை ஷேர் செய்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். தெளிவாக புரியும் படி எதிர்கொள்ளும் சிக்கல்களை சொன்னால் உதவ தயாராக இருப்பதை பிள்ளைகளிடம் பெற்றோர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
* தேர்வுகளின் போது அதில மட்டுமே கவனம் செலுத்தாமல் இசை கேட்பது, நடனம் ஆடுதல், ஓவியம் வரைதல், அடிப்படை உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றில் சிறிது நேரம் நேரத்தை செலவழிக்க வைக்கலாம். இதனால் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
Also Read : உங்கள் குழந்தைகளை சத்தான உணவை சாப்பிட வைக்க என்ன செய்யலாம்..? இதை ஃபாலோ பண்ணுங்க..!
* தேர்வுகள் அல்லது முடிவுகள் தொடர்பான மன அழுத்தம் உங்கள் குழந்தைகளை மிகவும் தொந்தரவு செய்வது போல் பெற்றோர்கள் உணர்ந்தால் சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஒரு மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ளலாம்.
*
முக்கியமான விஷயம்: குழந்தை மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து, அவர்களின் மதிப்பெண்கள் முக்கியமில்லை என்பதை அவர்களுக்கு பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.