Home /News /lifestyle /

உங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியாக வியர்ப்பதற்கு இதய நோய் காரணமாக இருக்கலாம் : கவனம் தேவை!

உங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியாக வியர்ப்பதற்கு இதய நோய் காரணமாக இருக்கலாம் : கவனம் தேவை!

குழந்தை ஆரோக்கியம்

குழந்தை ஆரோக்கியம்

குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கு கர்ப்ப கால தவறுகள் காரணம் அல்ல. அதே சமயம், குழந்தைகளுக்கு இந்த நோய் பாதித்துள்ளதா என்பதை அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
குழந்தைகளுக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். அவர்கள் இதில் விதிவிலக்கு அல்ல. ஆனால், பெரியவர்களைப் போல இது வாழ்வியல் தொடர்புடையதாக வருவதில்லை. எனினும், குழந்தைகளிடம் இதய நோய் கண்டறியப்பட்டால் அதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

குறிப்பாக, குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கு கர்ப்ப கால தவறுகள் காரணம் அல்ல. அதே சமயம், குழந்தைகளுக்கு இந்த நோய் பாதித்துள்ளதா என்பதை அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்வது அவசியம்.

பிறவிலேயே இதயத்தில் துளை இருக்கின்ற குழந்தைகளுக்கு வெகு விரைவாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இவ்வளவு சின்ன வயதில் அறுவை சிகிச்சை தேவையா என்று பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், வளரும் குழந்தைக்கு இதயத்தின் துளையானது தானாகவே சரியாகிவிடும் என்று எண்ணுகின்றனர். இந்த தாமதம் காரணமாக குழந்தைகளுக்கு மேலும் பல தொந்தரவுகள் ஏற்படக் கூடும்.



குழந்தைகளுக்கு இதய பரிசோதனை அவசியமா?

எல்லா குழந்தைகளுக்கும் இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் அவசியமல்ல. குழந்தைகள் நல மருத்துவரிடம் வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. அப்படி சிகிச்சை பெறுகையில் மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவர் இதயநோய் மருத்துவருக்கு பரிந்துரை செய்வார்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

இதைத்தொடர்ந்து எலெக்ட்ரோகார்டியோகிராம் சோதனை செய்து, பாதிப்பு இருப்பின் மருத்துவர் சிகிச்சை அளிப்பார். கர்ப்ப காலத்தின்போதும், குழந்தை பிறந்த உடனேயும் இந்த பாதிப்புகளை கண்டறியலாம். சில மணி நேர சிகிச்சையில் குணப்படுத்த முடியும்.

எச்சரிக்கை தரும் அறிகுறிகள் :

குழந்தை சரியாக பால் குடிக்காது. பால் குடிக்கையில் சோர்ந்து விடும். எடை அதிகரிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. மிக அதிகப்படியாக வியர்வை சுரக்கும். சில குழந்தைகளுக்கு அழும்போது நகம், உதடு, நாக்கு போன்றவற்றின் நிறம் மாறும்.



எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் :

பொதுவாக ஆயிரம் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்களில் 8 முதல் 10 பேருக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இருக்கிறது. ஒருசில குழந்தைகளுக்கு மட்டுமே kawasaki நோய் மற்றும் Rheumatic இதய நோய் போன்றவை ஏற்படுகின்றன.

உங்கள் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளதா..? பயனுள்ள சில வீட்டுக்குறிப்புகள்..!

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி :

வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் தினசரி ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரையிலும் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும்.



இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள் :

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு உடைய பால் பொருட்கள், இலகுவான இறைச்சி, நட்ஸ், பருப்புகள் போன்றவை குழந்தையின் இதய நலனை மேம்படுத்தும் உணவுகள் ஆகும். கேக், டோநட்ஸ், இனிப்பு சேர்த்த குளிர்பானங்கள், நிறை கொழுப்பு அடங்கிய உணவுகள், சோடியம் கலந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease, Heart health, Kids Health

அடுத்த செய்தி