குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி கட்டாயம் - ஏன் தெரியுமா?

தடுப்பூசி

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

  • Share this:
மழைகாலம் வரும் முன் குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி போட வேண்டும் என மஹாராஷ்டிரா அரசுக்கு வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் பிடியாட்ரிக் (Pediatric)மருத்துவர்கள் குழுவுடனான சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மழைகாலம் வரவிருப்பதால் குழந்தைகளுக்கு ஃப்ளூவிற்கான தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து அவர்கள் விளக்கினர்.

இதுகுறித்து பேசிய அவர்கள் மழைகாலம் விரைவில் வரவிருப்பதால் குழந்தைகளுக்கு ஃப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏற்பட்டால் அந்த காய்ச்சலின் அறிகுறிகளும் கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். இதனால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது ஃப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் அவை கொரோனாவுடன் குழப்பிக்கொள்ள நேரிடும். தேவையில்லாமல் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்.இதனால் மருத்துவமனைகள் முன்பு தேவையில்லாத கூட்டம் சேரும். ஏற்கனவே கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் முன்பு தேவையில்லாமல் பிரச்சனைகள் நேர வாய்ப்பிருக்கிறது என்பதால் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துகின்றனர். அந்த மீட்டிங்கில் தடுப்பூசியின் விலையை குறைப்பது குறித்தும் அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டது. தற்போது தடுப்பூசி விலை ரூ. 1500 முதல் ரூ.2500 வரை விற்கிறது. அதன் விலையை குறைத்தால் மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த முடியும்.

இரண்டாவது லாக்டவுன் : குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் வீட்டிற்குளேயே சமாளிக்க டிப்ஸ்..!

இதுகுறித்து பிடியாட்ரிக் மருத்துவர் குழுவின் தலைவர் சுஹாஷ் பாபு பேசியதாவது, ஃப்ளூவினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் கொரோனா மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையில்லாத பண விரயத்தை ஏற்படுத்தும் என்றார். இந்தியா அக்காடெமி ஆஃப் பிடியாட்ரிக்ஸ் (Indian Academy of Paediatrics) தடுப்பூசியானது இரண்டு வகையான இன்ஃப்ளூயென்சா A(two subtypes of influenza A) மற்றும் இரண்டு லைனேஜஸ் இன்ஃப்ளூயென்சா B (two lineages of influenza B) ஆகியவை இரண்டு வகை உள்ளது. அவை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.இதுகுறித்து மருத்துர்களுடனான சந்திப்பில் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதில் உள்ள சிக்கலை தெளிவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் பிரச்சனையில்லை. ஆனால் யாருக்கு, எப்போது செலுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். என்றார். ஏற்கனவே கொரோனாவால் உடல் மற்றும் மன ரீதியான மக்களுக்கு இந்த ஃப்ளூ பிரச்சனை மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: