• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் குழந்தை பாதுகாப்பற்றவராக உணர்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

உங்கள் குழந்தை பாதுகாப்பற்றவராக உணர்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டுவது அவசியம் ஆகும்.

  • Share this:
இந்த உலகில் யாரும் பாதுகாப்பு அற்றவர்களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ பிறப்பதில்லை. அவர்கள் பிறந்த, வளர்ந்த இடங்களின் சூழ்நிலைகள் தான் இதனை தீர்மானிக்கின்றன. நிராகரிப்பு, விமர்சனங்கள், அநாகரிகமான வார்த்தைகள் ஒரு நபருக்கு கிடைக்கும் போது, அது ஒருவரை குறைவாக உணரவோ, அல்லது சிந்திக்கவோ வைக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறிய குழந்தைகளும் இது போன்ற சூழல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் சுயமரியாதையை இழந்து பாதுகாப்பற்றவர்களாக மாறும் நிகழ்வுகளுக்கு கூட ஆளாகலாம். குழந்தைகளை இது போன்ற மோசமான சூழ்நிலைகளுக்கு தள்ளக்கூடாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எப்போதும் அவர்களுடன் இருக்க வேண்டும். அவர்களை நல்ல குணமிக்கவராகவும், அதிக அன்பு கொண்டவர்களாகவும் உணர வைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் முதல் கதாநாயகன். உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்க வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது குறித்து இங்கு காண்போம்.

பாதுகாப்பின்மை காரணம்:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டுவது அவசியம் ஆகும். பெற்றோர்கள் இருவராலும் முடியாவிட்டாலும், தாய் அல்லது தந்தை யாராவது ஒருவராவது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று நீங்கள் கண்டறிய வேண்டியது அவசியம். அவர்களுடன் பேசுவதன் மூலமே இதை தெரிந்துக் கொள்ள முடியும். பாதுகாப்பின்மைக்கான காரணத்தை கண்டறிந்து அதனை போக்க வேண்டும். அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மேலும் நம்பிக்கையுடனும், உற்சாகமாகவும் அவர்களை பல்வேறு வழிகளில் கொண்டு செல்ல வேண்டும்.



நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்:

உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை மாற்றுவதன் மூலம் அவர்களை எளிதாக நேர்மையான வழியில் கொண்டு செல்ல முடியும். உங்கள் பிள்ளைகள் எத்தனை தவறுகளைச் செய்தாலும், சரியான வழியில் வழிநடத்தி அந்த ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் அவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சொல்ல வேண்டும். சில நேரங்களில் சுய பரிதாபத்திலும், குற்ற உணர்ச்சியிலும் ஈடுபடலாம். இதனை அனுமதிக்காதீர்கள். இது இவர்களை பாதுகாப்பின்மையாக உணர வைக்கும். நாம் யார், மற்றவர்களை ஏன் நேசிக்க வேண்டும், உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று சொல்லி கொடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் போக்கு:

இன்றைய கால கட்டத்தில் நம் அனைவரையும் இயக்குவது ‘சமூக வலைத்தளங்கள்’ தான் என்றால் மிகை ஆகாது. சிறியவர், பெரியவர் என அனைவரும் இதில் அடிமையாகி கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் உலகம் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில், சமூக ஊடகங்கள் குழந்தையின் பாதுகாப்பின்மைக்கு முதன்மை காரணமாக இருக்கிறது. இணையத்தில் உள்ள விமர்சன கருத்துக்கள்,எதிர்மறையான செய்திகள் போன்றவற்றால் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படலாம். சமூக ஊடகங்கள் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Must Read | ஆண்களையும் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

அன்பு மட்டுமே தீர்வு:

ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேராக கடுமையான வார்த்தைகளால் பேசமாட்டார்கள். இவற்றிக்கு மாறாக அன்பினை செலுத்துவதன் மூலமே அவர்கள் செய்யும் தவறுகளை திருத்த முடியும். ஒரு பாதுகாப்பற்ற குழந்தையை நீங்கள் தொடர்ந்து நச்சரித்து கொண்டே இருப்பது, அவர்களின் மனதில் அதிக சுமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் செய்யும் எந்தவொரு முயற்சியையும் பாராட்டி அவர்களை முன்னோக்கி கொண்டு வருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும். மேலும் உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை கண்டுபிடித்து அவர்களுக்கு முக்கியவதும் கொடுங்கள். இதனால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள்.

பாசமுள்ள பெற்றோர்கள்:

உங்கள் குழந்தையின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வீட்டில் அவர்கள் என்னவாக உணர்கிறார்களோ அதுதான் சமூகத்திலும் வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு வீட்டில் பாதுகாப்பான, அன்பான இடத்தை உருவாக்குவது தான் பெற்றோரின் முதல் கடமை. நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை உங்கள் குழந்தைகளின் மீது திணிப்பது தவறு. எப்போதும் நீங்கள் அவர்கள் மீது பாசமாக இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: