• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிறந்த குழந்தையை எப்படி பராமரித்து வளர்க்க வேண்டும்? பெற்றோருக்கு எஃபெக்டிவ் கைட்லைன்!

பிறந்த குழந்தையை எப்படி பராமரித்து வளர்க்க வேண்டும்? பெற்றோருக்கு எஃபெக்டிவ் கைட்லைன்!

பல தாய்மார்கள் குழந்தை தங்களிடம் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதாக நினைக்கிறார்கள்.

  • Share this:
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறகும் போது எண்ணற்ற குழப்பமான விஷயங்கள் நடைபெறும். ஒவ்வொருவரும் தாங்கள் அனுபவித்த விஷயங்களை கூறி கொண்டு இருப்பார்கள். ஒரு குழந்தையை வளர்ப்பதில் முன் அனுபவம் உள்ளவர்கள் அதை சற்று எளிதானதாகக் கருதினாலும், முதல் முறையாக குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள் நிறைய போராட்டங்களையும், மன அழுத்தத்தையும் சந்திக்கிறார்கள். நீங்களும் முதல் முறையாக ஒரு தாயாகினால் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சில பொதுவான விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

பாதுகாப்பு: பல தாய்மார்கள் குழந்தை தங்களிடம் இருந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதாக நினைக்கிறார்கள். குழந்தையை குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஒப்படைக்க தயங்குகிறார்கள். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது இயற்கையானது என்றாலும், அதிகப்படியான பாதுகாப்பு நல்லதல்ல. நீங்கள் யாரிடமோ கொடுக்காமல் உங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என நினைத்தால், அவசர காலத்தில் கூட அந்த குழந்தை மற்றவர்களிடம் செல்ல பயந்து அழும். இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தையை முன் அனுபவம் உள்ள அவர்களது அம்மா, அத்தை போன்றவர்களிடம் பழக அனுமதிக்கலாம்.

Must Read | உங்களுக்கு இரத்த சர்க்கரை இருக்கா? இந்த 5 ’சூப்பர்ஃபுட்’களை ட்ரை பண்ணுங்க..!

பீதி: குழந்தை தாயின் வயிற்றுக்கு வெளியே வந்து புதிய சூழலுக்கு வரும் நேரத்தில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். இதனால் இடைவிடாத அழுகை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் சில தாய்மார்கள் அதை பார்த்து பயம் கொள்வார்கள். குழந்தை மீது உள்ள அக்கறையால் கூடுதல் சுமைகளை உங்கள் தோள்களில் சுமப்பது யாருக்கும் உதவப்போவதில்லை. சில விஷயங்கள் இயல்பானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கல்வி: குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றிய உங்கள் எண்ணங்களில் கல்வி முக்கியத்துமாக இருக்கும். குழந்தைக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்பது முக்கியம். இதனால் சிறு வயதிலேயே அவர்களுக்கு அறிவு வளர்க்கும் செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நீங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சில அறிவை புத்தகங்களிலிருந்து பெற முடியும் என்றாலும், உங்கள் உறவினர்களிடம், நண்பர்களிடம் இருந்தும் நீங்கள் யோசனைகளை பெறலாம்.

Must Read | நீங்க ஹெல்தியா இருக்கீங்களா? கண்டுபிடிக்க உங்க முகத்தை செக் பண்ணுங்க..! சுவாரஸ்ய தகவல்கள்

ஆரோக்கியம்: பல தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அதன் விளைவு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இது எடை இழப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்தால் அது உங்கள் குழந்தையை வளர்ப்பதை இன்னும் கடினமாக்கும். எனவே நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உடல் ஒத்துழைத்தால் யோகா, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: