பொதுவாக நகங்களை கடித்து துப்புவது அல்லது மெல்லுவது என்பது சிறிய குழந்தைகள் முதல் பல பெரியவர்கள் வரை பலரிடம் காணப்படும் மோசமான பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பழக்கம் இல்லாதவர்கள் இதை பார்க்கும் போது எரிச்சலைடைவது இயல்பு.
பெரியவர்களை விட குழந்தைகள் மத்தியில் பரவலாக காணப்படும் இந்த நகம் கடிக்கும். கட்டைவிரலை சப்பும் பழக்கம் காலப்போக்கில் தானாகவே போய்விடுவது போல போய்விடும் என்றாலும் , இந்த பழக்கம் கிருமிகள் உள்நுழைய வழிவகுக்கும் என்பதால் சில நேரங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிக்கலாகவும் அமைந்து விடும். எனவே பெரும்பாலும் இப்பழக்கம் ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற நடத்தையாக கருதப்படுகிறது. பல பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் காணப்படும் இந்த பழக்கத்தை கைவிட வைக்க போராடி வருகிறார்கள்.
உங்கள் பிள்ளை தொடர்ந்து நகங்களை கடித்து வந்தால் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான பயனுள்ள யோசனைகளை இங்கே பார்க்கலாம்...
குழந்தைகள் ஏன் தொடர்ந்து நகங்களை கடிக்கிறார்கள்?
உங்கள் குழந்தை தனது நகங்களை கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தால் அதற்கு சலிப்பு, மனஅழுத்தத்திலிருந்து விடுபட, ஆர்வம் காரணமாக அல்லது வேறு யாரையாவது பார்த்து அதே போல செய்ய முயற்சிப்பது போன்றவை காரணமாக இருக்கலாம். நகம் கடிப்பது பொதுவாக "நரம்பு பழக்கம்" (nervous habit)என்று அழைக்கப்படுகிறது. இதில் மூக்கு நோண்டுவது, முடியை முறுக்குவது, கட்டைவிரலை சப்புவது மற்றும் பற்களை நறநறவென கடிப்பது ஆகியவை அடங்கும்.
குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?
உங்கள் குழந்தை விரல் நகங்களை கடிப்பதைத் தடுக்க நீங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். அவற்றுள் பின்வருபவை சில பயனுள்ள யோசனைகள் ஆகும்.
நகங்களை வெட்டி விடுங்கள்:
சீரான இடைவெளியில் உங்கள் குழந்தையின் நகங்களை வெட்டி விட்டு கொண்டே இருப்பதால், அவர்களுக்கு தங்கள் விரலில் இருந்து கடித்து எடுக்க நகங்கள் கிடைக்காது. உங்கள் குழந்தையின் நகங்களை மெல்லும் பழக்கத்தைத் தவிர்க்க சிறந்த வழிகளில் இது ஒன்று.
உங்கள் குழந்தைகளை பாசிடிவ் சிந்தனைகளுடன் வளர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!
இந்த பழக்கத்தை பற்றி குழந்தைக்கு எடுத்து சொல்லுங்கள்:
உங்கள் பிள்ளை நகங்களை கடிப்பதை நிறுத்த அவர்களின் இந்த பழக்கத்தைப் பற்றி அவர்களுக்குத் எடுத்து சொல்லுங்கள். இந்த பழக்கம் எப்படி அவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்பதை புரிய வையுங்கள். இந்த பழக்கத்திலிருந்து வெளிவர நீங்கள் உதவ முடியும் என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
கவனத்தை திசை திருப்புங்கள்:
உங்கள் குழந்தையின் கைகள் மற்றும் விரல்களுக்கு எதாவது வேலை கொடுத்து அவர்களின் கவனத்தை மாற்றுங்கள். தொடர்ந்து அவர்களின் கைகள் பிசியாக ருக்கும் போது அவர்களுக்கு தங்கள் நகங்களைக் கடிக்க தோன்றாது.
சிக்னலில் எச்சரிக்கை செய்யலாம்:
உங்கள் குழந்தை நகம் கடிப்பதை பார்க்கும் போது அப்படி செய்ய கூடாது என்று குழந்தையை எச்சரிக்கும் சமிக்ஞையை தொடர்ந்து செய்ய வேண்டும். நகங்களை அவர்கள் கடிப்பதை பார்த்தால் நீங்கள் அவர்களின் கைகளை மெதுவாக தட்டி விடலாம் அல்லது அப்படி செய்ய கூடாது என்று தலையசைத்து எச்சரிக்கலாம்.
கசப்பான நெயில் பாலிஷ்:
நகம் கடிப்பதை தடுக்க மற்றொரு வழி நகங்களில் கசப்பான நெயில் பாலிஷ் கோட்டிங்கை பயன்படுத்துவதாகும். இது குழந்தை நகங்களைக் கடிப்பதை உடனடியாக நிறுத்தும்.
வீட்டில் தயாரிக்கப்படும் பேபி ஃபார்முலா உணவுகள் பாதுகாப்பானது அல்ல : விளக்கும் மருத்துவர்கள்..!
பரிசு:
உங்கள் குழந்தையிடம் நீ என்றெல்லாம் நகம் கடிக்காமல் இருக்கிறாயோ அன்றெல்லாம் உனக்கு பரிசுகள் தருவேன் என்று கூறி அப்பழக்கத்தை மெல்ல மெல்ல நிறுத்த முயற்சிக்கலாம்.
எப்போது கவலைப்பட வேண்டும்.?
சில நேரங்களில் நகம் கடித்தல் அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நகங்களைத் தொடர்ந்து கடிப்பது சில சமயங்களில் விரல் நகங்களில் புண் ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் நடத்தையில் திடீர் மாற்றம் மற்றும் நகம் கடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதை கவனித்தால் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் குழந்தை நகங்களை கடித்ததற்காக அவர்களை தண்டிக்காதீர்கள் மாறாக சரியான நடவடிக்கைகளுடன் அவர்களுக்கு உதவுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nail biting, Parenting Tips