பிறந்த குழந்தையை சிறப்பாக வளர்க்க அம்மாக்களுக்கு ‘நச்’ டிப்ஸ்!

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தாங்களே வைத்திருக்க வேண்டும், அதுவே குழந்தையின் பாதுகாப்பிற்கு நல்லது என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தாங்களே வைத்திருக்க வேண்டும், அதுவே குழந்தையின் பாதுகாப்பிற்கு நல்லது என்று நினைக்கிறார்கள்.

  • Share this:
பிறந்த குழந்தைகள் உள்ள வீட்டில் ஒரு சில விஷயங்கள் சற்று குழப்பமானதாக இருக்கும். ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் கொண்ட தம்பதியர் குழந்தை வளர்ப்பில் முன் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் புதிய குழந்தையின் வரவு அவர்களுக்கு எளிதானதாக இருக்கும். ஆனால் முதல்முறை குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள் குழந்தை வளர்ப்பின் போது நிறைய போராட்டங்கள் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடுகிறது.

ஆரோக்கியம்:

குழந்தை பெற்றெடுத்த பல தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி தங்களது ஆரோக்கியத்தை மறந்தே பொய் விடுகிறார்கள். புதிய தாய்மார்கள் தங்களை சரியாக கவனித்து கொள்ளாமல் இருப்பதால் உடல் எடை இழப்பு, உயர் ரத்த சர்க்கரை அளவு, ஆற்றல் குறைவு, சோர்வு உள்ளிட்ட பல கோளாறுகளை அனுபவிக்க நேரிடும். இது ஒரு குழந்தையை வளர்ப்பதை இன்னும் கடினமாக்கும். இது தாய், சேய் என இருவருக்கும் சிறந்ததல்ல.

பாதுகாப்பாக இருப்பது:

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தாங்களே வைத்திருக்க வேண்டும், அதுவே குழந்தையின் பாதுகாப்பிற்கு நல்லது என்று நினைக்கிறார்கள். இன்னும் சில பெண்கள் தங்களது குழந்தையை அவர்களது பிற குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஒப்படைக்க தயக்கம் கொள்கிறார்கள். குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தாய்க்கும் தோணும் இயற்கையான ஒரு உணர்வு என்றாலும், எப்போதுமே தாங்களே குழந்தையை தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று செயல்படுவது அவ்வளவு நல்லதல்ல. பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் கையில் சில மணிநேரங்கள் குழந்தையை ஒப்படைக்கலாம். யாரிடம் கொடுத்தாலும் தாய்மார்கள் தங்கள் குழந்தை பாதுகாப்பான கைகளில் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுபவரிடம் குழந்தை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Must Read | மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு ஏன் சொல்லிக்கொடுக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்..!

பீதி:

பிறந்த குழந்தை பல நாட்களாக தாயின் வயிற்றுக்குள் இருந்ததால், தாயின் வயிற்றுக்கு வெளியே தனது புதிய சூழலுக்கு ஏற்றவாறு குழந்தை இருக்க முயற்சிக்கும் போது, இடைவிடாத அழுகை, ஒழுங்கற்ற குடல் அசைவுகள் உள்ளிட்ட பொதுவான சில சிரமங்களை குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சில தாய்மார்கள் குழந்தைகளின் அசௌகரியம் கண்டு தேவையின்றி பீதி அடைவார்கள். இதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கும் போது தேவையின்றி குழந்தையை நினைத்து பீதி அடைந்து கூடுதல் சுமைகளை தாய்மார்கள் மனதில் ஏற்றி கொள்வதால் எந்த பலனும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெரிந்து கொள்வது முக்கியம்:

புதிதாக பிறந்த குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றி கர்ப்பிணிகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே தெரிந்து வைத்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலிருக்கும் பெரியவர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மூலம் சில அடிப்படை குழந்தை வளர்ப்பு தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளலாம்.
Published by:Archana R
First published: