குழந்தைகளின் கற்றல் திறன்களை பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வயது குழந்தைகளின் கற்றல் திறனானது நாம் நினைப்பதை விடவும் மிகவும் வேறுபடும். குழந்தைகள் பொதுவாக எளிதில் கற்றுக்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.
எனினும் சில குழந்தைகளுக்கு கற்றல் திறன் குறைபாடு இருக்க கூடும். இந்த வகை குழந்தைகளுக்கு வேறு சில கற்றல் முறைகளை பயன்படுத்தி கற்பிப்பார்கள். அதே போன்று குழந்தைகளுக்கு பேசும் மொழியை சொல்லி தரும் போதும் நாம் மிகவும் மெனக்கெட வேண்டி இருக்கும்.
மேலும் சிறு வயதில் குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க கூடிய விஷயங்கள் அவர்களின் மூளையில் பசுமரத்தாணி போன்று பதிந்து விடும். குழந்தைகளுக்கு கற்று தர கூடிய மொழி குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சில ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆரம்பப் பள்ளியின் முதல் வகுப்பில் ஆங்கிலம் கற்கத் தொடங்கிய குழந்தைகளின் திறன் சிறப்பாக உள்ளதாக அறிந்துள்ளனர். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் நடத்தப்பட்ட பெரிய ஆய்வில் பங்கேற்ற சுமார் 3,000 மாணவர்களின் தரவுகளை கொண்டு இதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதற்கு முந்தைய ஆய்விலும் இதே தரவுகள் பயன்படுத்தப்பட்டது, அதன் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் 2017-இல் வெளியிட்டனர்.
குழந்தைப் பருவத்தின் கசப்பான அனுபவங்களால் எதிர்காலத்தில் மனநலப் பிரச்சனைகள் ஏற்படுமா? ஆய்வு சொல்லும் தகவல்
இரண்டு ஆய்வுகளில் தரவுகளையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் முதல் குழுவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலப் பாடங்களை படிக்க தொடங்கிய மாணவர்கள் இருந்தனர். மற்றொன்றில் மூன்றாம் வகுப்பில் ஆங்கிலம் படிக்க தொடங்கிய மாணவர்கள் இருந்தனர். ஐந்து மற்றும் ஏழாம் வகுப்புகளில் அவர்களின் ஆங்கில வாசிப்பு மற்றும் கேட்கும் திறன்களின் அடிப்படையில் இரு குழுக்களின் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
2016 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அதே குழந்தைகளின் ஆங்கில செயல்திறனை அளவிடுவதற்காக சேகரிக்கப்பட்ட மற்றொரு தரவு தொகுப்பு இவற்றுடன் இணைத்து ஒப்பிடப்படுள்ளது. தொடக்கப் பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைத் தொடங்கிய குழந்தைகள் மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்தைத் தொடங்காத குழந்தைகளைக் காட்டிலும், அவர்களின் ஏழாம் வகுப்பில் கற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களில் பின்தங்கி உள்ளனர் என்று பழைய பகுப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய பகுப்பாய்வில் ஆங்கிலத்தில் தாமதமாகத் தொடங்கியவர்களை விட சிறு வயதிலேயே தொடங்கியவர்கள் சிறப்பாகச் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வானது, பள்ளியின் எல்லைகளைக் கடந்து ஆங்கில மொழிக் கல்வியின் நீண்ட கால வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இது போன்ற பல ஆய்வுகளை எதிர் காலத்தில் செய்ய உள்ளதாகவும் இந்த குழுவினர் கூறியுள்ளனர். குறிப்பாக கல்வி சார்ந்த பல ஆய்வுகள் இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.