முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகள் முன்பு சண்டைப் போடும் பெற்றோர்களே இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க..

குழந்தைகள் முன்பு சண்டைப் போடும் பெற்றோர்களே இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க..

குழந்தைகள் முன்பு சண்டைப் போடும் பெற்றோர்கள்

குழந்தைகள் முன்பு சண்டைப் போடும் பெற்றோர்கள்

பெற்றோருடைய கடமை என்பது மிகவும் பெரியது. அதே போல குழந்தை வளர்ப்பும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டைகள் மற்றும் விவாதங்கள் வருவதில், குழந்தைகள் சார்ந்த விஷயங்கள் பெரிதாக மாறும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்லார் வீட்டிலும் சண்டைகளும் சச்சரவுகளும் மிகவும் பொதுவாக நடப்பது தான். வாக்குவாதங்களை தவிர்க்க முடியாது. ஆனால், பெற்றோராக இருக்கும் போது, உங்கள் இருவருக்கும் எவ்வளவு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், குழந்தைகள் முன் சண்டை போடும் போது சிலவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே குழந்தைகள் பின்பற்றும்.

பெற்றோர்களின் சண்டை, அது எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், குழந்தைகளை பல விதமான பாதிக்கலாம். குறிப்பாக, குழந்தைகள் உளவியல் ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகள் அடிப்படை நடத்தையில் மாற்றம் ஏற்படுவது முதல், தூக்கத்தில் பாதிப்பு, உறவுகளில் நம்பிக்கையின்மை, என்று அவர்கள் வளர்ந்த பின்னும் இதன் தாக்கம் வெளிப்படும்.

குழந்தைகள் முன் சண்டை போடுவதைத் தவிர்க்க முடியாத சூழலில், பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் அமைதி தேவை :

கோபமாக உரையாடுவது என்பது வேறு, கத்தி கூச்சலிடுவது என்பது வேறு. எப்போதும் குழந்தைகள் முன் கத்தவோ, கூச்சல் போடவோ கூடாது. உங்கள் கணவன்/மனைவியுடன் நீங்கள் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை என்றாலும், அமைதியாக இருக்க வேண்டும். இது உங்களை பயமுறுத்துவதோடு மட்டுமில்லாமல், உங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். பிறகு, ஏதாவது தேவை என்றால், பிடிக்கவில்லை என்றால் கத்தி கலாட்டா செய்தால் போதும் என்று ஆழமாகப் பதிந்து விடும்.

குழந்தைகளிடையே காணப்படும் ADHD அறிகுறிகள் : பெற்றோர் ஏன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்..?

சண்டைகளை ஊதி பெரிதாக்க வேண்டாம் :

பெற்றோருடைய கடமை என்பது மிகவும் பெரியது. அதே போல குழந்தை வளர்ப்பும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டைகள் மற்றும் விவாதங்கள் வருவதில், குழந்தைகள் சார்ந்த விஷயங்கள் பெரிதாக மாறும். எந்தப் பள்ளியில் படிக்க வைப்பது என்பது முதல் என்ன உணவு சாப்பிடுவது என்பது வரை, எல்லா விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால், குழந்தைகள் முன், அவர்களைப் பற்றி சண்டைப்போடக் கூடாது.

நியாயமாக நடந்து கொள்ளுங்கள் :

எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிடித்தது, பிடிக்காதது என்பது ஒவ்வொரு நபருக்கு மாறும். ஆனால், பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, கத்துவது, அச்சுறுத்தும்படி பேசுவது, எல்லாமே குழந்தைகள் முன் தவிர்க்க வேண்டும். அதே போல, ஒரு வேகத்தில் பொருட்களை போட்டு உடைப்பதோ, அடிக்க முற்படுவதோ கூடவே கூடாது. இதைப் போன்ற மோசமான சூழல், உங்கள் குழந்தைகளை யாரேனும் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி நடக்க வைக்கும். அப்பா அல்லது அம்மாவுக்கு குழந்தை ஆதரவாக இருக்கும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

9 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன..?

குழந்தைகளை யாருக்கு சப்போர்ட் செய்கிறாய் என்று சண்டையில் இழுக்க வேண்டாம் :

குழந்தைகள் முன் போடப்படும் தீவிரமான சண்டைகளில், குழந்தைகள் தாங்களே ஒரு பக்கம் செல்வது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நீங்கள் அப்பாவுக்கு சப்போர்ட்டா அல்லது அம்மாவுக்கு சப்போர்ட்டா என்று கேட்கவே கூடாது. எந்த சண்டையிலும், குழந்தைகளை இழுக்க வேண்டாம். ஏதேனும் தவறாகி விட்டால், அது குழந்தைகள் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

சண்டை போட்டால், தீர்வு காணுங்கள் :

சண்டைகளை தவிர்க்க முடியாது என்பது எவ்வளவு இயல்பானதோ, அதே அளவுக்கு தீர்வுகளைக் காண்பதும் முக்கியமானது. சண்டை மட்டும் போட்டுவிட்டு, அதை பாதிலேயே விட்டுவிடுவது, உங்களை விட குழந்தைகளை பாதிக்கும். அதே நேரத்தில், அதற்கு தீர்வு கண்டால், அதை குழந்தையும் தெரிந்து கொண்டால், எதற்கும் தீர்வு காண வேண்டும் என்பதையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்.

First published:

Tags: Parenting Tips, Relationship Fights