ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் இவைதான்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் இவைதான்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

குழந்தை

குழந்தை

குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்ப பாதுகாப்பு தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல வைரஸ் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தையைப் பராமரிக்கும் முறைக் குறித்த தெளிவானப் புரிதல்கள் இல்லாததால் பிறந்த குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் சொல்லவே தேவையில்லை குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, வெது வெதுப்பான போர்வைகள், கம்பளி ஆடைகளை நாம் தயார் செய்துவைத்துக் கொள்வோம். இருந்தப்போதும் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவது மிகவும் பொதுவானது. இந்நேரத்தில் குளிர்காலதில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன விஷயங்களை குழந்தைகளிடம் அடிக்கடி கவனிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள்…

குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்ப பாதுகாப்பு தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல வைரஸ் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
வறண்ட சருமம் - பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு விடும் என்பது இயல்பான ஒன்று தான். அதிலும் குழந்தைகளின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால், மிக எளிதாக வறண்டு விடும். எனவே குழந்தைகளின் தோல்நிலையை அடிக்கடி கவனித்துக் கொள்வது என்பதை பெற்றோர்கள் மறந்துவிடக்கூடாது.
உதடுகள் வெடிப்பு – பிறந்த குழந்தைகளுக்கு வாயிலிருந்து எச்சில் வருவது என்பது பொதுவானது. இந்நேரத்தில் அடிக்கடி நாம் பிஞ்சுக் குழந்தைகளின் உதடுகளை அடிக்கடி துடைக்கும் போது வெடிப்புகள் உண்டாகும். இதனால் குழந்தைகள் மிகவும் சங்கடமாக சூழலை அனுபவிக்க நேரிடும்.
கன்னம் சிவத்தல் - உங்கள் குழந்தையின் கன்னங்கள் சிவப்பு நிறமாக மாறினால் குளிர்ந்த காற்று அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். இதனால் அவர்கள் எரிச்சலான உணர்வை பெறக்கூடும். எனவே பெற்றொர்கள்
புதிதாக பிறந்த குழந்தைகள் பல மணி நேரம் தூங்கத்தான் செய்யும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக குழந்தைகளின் செயல்கள் மாறினால் உடல் நிலையில் பிரச்சனையை ஆரம்பிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, லேசான காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு ஏற்படக்கூடும். எனவே ஆரம்பத்திலேயே மருத்துவர்களிம் காண்பிப்பது சிறந்தது.
குளிர்காலம் தானே என்று குழந்தைகளைக் குளிக்க வைக்காமல் இருந்துவிடக்கூடாது. உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற வேண்டும் என்றால் எப்போதும் உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிக்க வைக்க முடியவில்லை என்றாலும். வெதுவெதுப்பான நீரைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
குறிப்பாக 6 மாதங்களுக்கு கீழே உள்ள குழந்தைகளை வெயிலில் எடுத்துச் செல்ல வேண்டாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலான குழந்தைகளை சூரிய ஒளி படும் படி கொஞ்சம் காண்பித்தால் அவர்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும்.
First published:

Tags: Baby, Baby Care, Winter