Home /News /lifestyle /

Coronavirsu : கோவிட் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு அறிகுறிகள்.!

Coronavirsu : கோவிட் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு அறிகுறிகள்.!

மனச்சோர்வு

மனச்சோர்வு

தொற்று நோயால் ஏற்படும் நெருக்கடி மற்றும் சூழல்களால் பெரியவர்களை போல உளவியல் தாக்கங்களுக்கு குழந்தைகள் ஆளாக மாட்டார்கள் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்த துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தியா உட்பட இன்னும் பல நாடுகள் தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பெருந்தொற்றிடம் சிக்கி உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவல் துவங்கியதில் இருந்து பலர் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் மூன்றாம் அலை வரக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். வைரஸ் பரவலால் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற நெருக்கடி காலங்களில், மக்கள் தங்கள் சொந்த இழப்புகள் மற்றும் அதிர்ச்சிகரமான அனுபவங்களை கையாளும் அதே நேரத்தில், குழந்தைகளும் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே மேலும் இது போன்ற இக்கட்டான நேரங்களில் அவர்களுக்கு முழுமையான ஆதரவு தேவை.

தொற்று நோயால் ஏற்படும் நெருக்கடி மற்றும் சூழல்களால் பெரியவர்களை போல உளவியல் தாக்கங்களுக்கு குழந்தைகள் ஆளாக மாட்டார்கள் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.கோவிட் குறித்த கவலை மற்றும் பதற்றத்திற்கு குழந்தைகள் ஆளாகிறார்களா.?

பெரியவர்களை போலவே குழந்தைகளும் கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய கவலைகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பேரழிவு வைரஸின் தாக்கம் குறித்த யதார்த்தத்தை காட்டியுள்ளது. வைரஸால் மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதை உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொடர்பான பயம் மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய உடல் அறிகுறிகளைத் தவிர, COVID-19 காரணமாக பல வகையான கவலைகளை குழந்தைகள் அனுபவிக்க முடியும். அவற்றில் சில பின்வருமாறு:

* பிரிவு கவலை- ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை பற்றி தொடர்ந்து கவலைப்படுவது

* இழப்பு மற்றும் அதிர்ச்சியுடன் தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் பதற்றம்

* ஆன்லைன் பள்ளி படிப்புடன் இணைக்கப்பட்ட மன அழுத்தம்

* தூக்கக் கோளாறுகள்: தூக்கமின்றி கவலைபடும் குழந்தைகளுக்கு மோசமான மன ஆரோக்கியம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த கோளாறு அவர்களின் அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறன் செயல்பாடுகளை பாதிக்கும்.கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன.!

தொற்று நோயால் குழந்தைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து அவர்களை விடுவிக்க கீழ்காணும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனித்து அதற்கேற்ப செயல்படலாம்.

ஒரு வயது நிறைந்த உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை கொடுங்கள்..!

* தீவிர மனநிலை மாற்றங்கள்

* குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பழக விருப்பமின்றி விலகி செல்லுதல்

* தூக்கம் அல்லது உணவு உண்ணும் முறைகளில் காணப்படும் திடீர் மாற்றங்கள்

* அதிக பசி அல்லது பசியின்மை

* தொடர்ந்து சோகமாகவே இருப்பது அல்லது அடிக்கடி கோபம் கொள்ளுவது

* எந்த காரணமும் இல்லாமல் மற்றவர்களை திட்டுதல்

* சுய தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள்

பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்கடினமான நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் உதவி மற்றும் ஆறுதலை குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். எனவே கோவிட் இன்னும் தொடரும் இது போன்ற நேரத்தில் உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்து வருவது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையை பாஸிட்டிவாக பார்க்கவும், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மதிப்பையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களை முதலில் பேச விட்டு அவர்களின் எண்ணங்களை ஷேர் செய்ய சொல்லி கேளுங்கள். அவர்களின் கவலையை போக்கும் முயற்சியில் அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களை வலுப்படுத்த கற்று கொடுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Kids Care

அடுத்த செய்தி