உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டுமின்றி இந்தியாவின் சில பகுதிகளிலும் தொற்று பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.
தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்பிற்கு ஒமைக்ரான் வேரியன்ட் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட் குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்நிலையில் Omicron வேரியன்ட் குழந்தைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மேல் சுவாச நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது கடுமையானதாக இருந்தால் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகளை கூட ஏற்படுத்தும் என்ற சமீபத்திய ஆய்வு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கு இருக்க கூடிய சிறிய மற்றும் ஒப்பீட்டளவில் மடியகூடிய காற்றுப்பாதைகள் காரணமாக, அவர்கள் தொண்டைக் கட்டு அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற மேல் சுவாசப்பாதை நோய் தொற்றால் மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த மேல் காற்றுப்பாதை தொற்று குறிப்பாக croup என்று அழைக்கப்படுகிறது மற்றும் குழந்தைகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த கூடியது. SARS-COV-2 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 18,849 குழந்தைகள் மற்றும் அவர்களின் மருத்துவ அறிக்கைகளை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மற்றும் வடமேற்கு பல்கலைக்கழக (Universities of Colorado and Northwestern) ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தனர்.
ஜமா பீடியாட்ரிக்ஸில் (JAMA Pediatrics) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் ஒமைக்ரான் எழுச்சியின் போது குழந்தைகளிடையே மேல் சுவாச குழாய் தொற்று ( upper airways infection) அதிகரித்ததைக் காட்டியது. அமெரிக்காவில் SARS-CoV-2 மற்றும் மேல் சுவாசக்குழாய் நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடும் நோயை எதிர் கொண்டுள்ளனர்.
குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் மர்மமான தொற்று : அதிவேகமாக பரவுவதாக தகவல்
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் வேரியன்ட் குழந்தைகளுக்கு மேல் காற்று பாதையில் தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இது தொற்றால் ஏற்பட கூடிய பின்விளைவுகளில் ஒன்றான இதயம் சார்ந்த இறப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.
ஒமைக்ரான் எழுச்சியின் போது குறிப்பாக குழந்தைகளிடையே மேல் சுவாசக்குழாய் தொற்று அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட சுமார் 384 குழந்தைகளுக்கு மேல் காற்றுப்பாதை தொற்று பாதிப்பு இருந்தது. இதில் மரணம் வரை கொண்டு செல்லும் மிக தீவிர நிலைமை சுமார் 81 குழந்தைகளுக்கு ஏற்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
Croup என்றால் என்ன.?
ஒமைக்ரான் பாதித்த இளம் குழந்தைகளுக்கு Croup ஏற்படும் அபாயம் அதிகம். இது குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளை பாதிக்கும். மருத்துவ ரீதியாக லாரிங்கோட்ராசிடிஸ் (laryngotracheitis.)என அங்கீகரிக்கப்பட்ட சுவாச கோளாறு ஆகும். Croup-ன் அறிகுறிகள் சுவாசிக்கும் போது கடுமையான சத்தம், கடும் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், லேசான காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல்கள், சுவாசிக்கும்போது மார்பு அதிகமாக மேலும் கீழும் நகருவது உள்ளிட்டவை ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Omicron, Omicron Symptoms