ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்படாமல் தடுப்பது எப்படி..?

குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்படாமல் தடுப்பது எப்படி..?

குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சனைகள்

குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சனைகள்

உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள், ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரை 1.2 கோடி குழந்தைகளும், 10 – 19 வயது வரை இருப்பவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிது புதிதாக நோய்களும் குறைபாடுகளும் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதித்து வரும் நிலையில், பலவித நோய்களுக்கு ஆணி வேராக உடல் பருமன் இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு சிலர் மட்டுமே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். ஓபிசிட்டி என்று பரவலாக அன்றாட ம் நம் கேட்கும் ஒரு வார்த்தையாக தற்போது உடல் பருமன் மாறி விட்டது.

பெரியவர்கள் தான் ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறை, அலுவலக, வேலை வணிகம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள், உடல்நலத்தை கவனிக்க முடியவில்லை என்றால், மற்றொரு பக்கம் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.

உடல் பருமன் என்பது இதய நோய், ஊட்டச்சத்து குறைபாடு, நரம்புகளில் பிரச்சினை, மூட்டு வாதம், எலும்பு தேய்மானம் என்று உடலின் தீவிரமான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமனை தவிர்ப்பதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உடல் பருமனை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஆபத்து

கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகளை கொஞ்சி மகிழலாம். ஆனால், அது உடல்பருமனாக மாறும் போது, குழந்தைகளின் வாழ்க்கையை தீவிரமாக பாதிக்கும்.

உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக சாப்பிடும் பொழுது கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்ந்துவிடும். இது பாடி மாஸ் இண்டெக்ஸ் என்பதன் படி அளவிடப்படுகிறது. பாடி மாஸ் இண்டெக்ஸ் 30 க்கும் மேற்பட்ட காணப்பட்டால் அந்த நபர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அர்த்தம்.

உலக உடல் பருமன் அட்லஸ் 2002 இன் படி இந்தியாவில் அடுத்த எட்டு ஆண்டுகளில், அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுவார்கள் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள், ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரை 1.2 கோடி குழந்தைகளும், 10 – 19 வயது வரை இருப்பவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உடல் பருமனால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படும் கோளாறுகள் ஏற்படும் என்பதால், அதை எவ்வாறு தடுப்பது என்பதற்கான குறிப்புகள் இங்கே.

Also Read : ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்...

ஆரோக்கியமான உணவு

பெரும்பாலான குழந்தைகள் வறுத்த உணவுகள், குளிர்பானங்கள், மில்க் ஷேக், பிஸ்கட்கல் ஆகியவற்றை தான் அதிகமாக விரும்புகிறார்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட, பாக்கெட்டில் வரும் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் நொறுக்கு தீனிகள் சாப்பிடும் பழக்கமும் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்துமே, அதாவது முறையற்ற உணவு பழக்கம் தான் குழந்தைகள் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது. எனவே குழந்தைகளை ஃபிரஷ் ஆன காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடும் பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இருந்தாலே உடல் பருமன் ஏற்படாது.

உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக இருப்பது

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கு சாத்தியம் குறைவுதான். படிப்பு, அடுத்தடுத்து ஏதேனும் வகுப்பு, பயிற்சி என்று குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு விளையாடுவதற்கு நேரம் இல்லாமல் போவதால் உடல் பருமன் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் விளையாடினால் உடற்பயிற்சி செய்தால்தான், கலோரிகள் குறையும், எலும்புகள் தசைகள் ஆகியவை வலுப்படும்.

சைக்கிள் ஓட்டுவது, ஸ்விம்மிங் பயிற்சி, ஓடுவது எதேனும் விளையாட்டு பயிற்சி ஆகியவற்றை குழந்தைகளின் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். குழந்தை பருவத்தில் உடல்பருமனை தவிர்த்தால் அவர்கள் வளரும் பொழுது ஆரோக்கியமான ஃபிட்டான நபர்களாக வளர்வார்கள்.

Also Read : அப்பாவிடமிருந்துதான் இந்த விஷயங்களையெல்லாம் மகள்கள் கற்றுக்கொள்கிறார்களாம்..!

தினமும் நன்றாகத் தூங்க வேண்டும்

நன்றாக தூங்கினாலே, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகள் சரியாகிவிடும் என்று பலமுறை நீங்கள் கேட்டிருப்பீர்கள். குழந்தைகள் தூங்குவதற்கு கொஞ்சம் படுத்துவார்கள். ஆனால் குழந்தைகள் ஓடியாடி விளையாடும் வயதில் நன்றாக சாப்பிட்டு நன்றாக விளையாடினால் மட்டும் பத்தாது, நன்றாக தூங்கவும் வேண்டும். குழந்தைகள் படிப்பதற்கு அல்லது ஏதேனும் ஒரு வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு பெற்றோராக எவ்வளவு மெனக்கெடுகிறார்களோ, அதேபோல குழந்தைகள் தினமும் நன்றாக தூங்குகிறார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தையும் குடுக்கும். தூக்கமின்மை என்பது நீரிழிவு, அதிக கொலஸ்டிரால், நடத்தையில் பாதிப்பு ஆகிய பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பதை மறக்காதீர்கள்.

மொபைல், தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்

பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகள் கூட பக்கத்தில் மொபைல் வைத்துக் கொண்டு அதில் பாடல் கேட்டபடி அல்லது ஏதேனும் வீடியோக்களை பார்த்தப்படி இருக்கிறார்கள். குழந்தைகளிடம் இருந்து மொபைல், டேப்லெட், அல்லது தொலைக்காட்சி என்பதை தவிர்க்கவே முடியாத ஒரு சூழலில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதை தொலைக்காட்சி பார்ப்பதை கட்டாயமாக குறைக்க வேண்டும். ஸ்கிரீன் டைம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்தை குறைத்தாலே அவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Child Care, Kids Health, Obesity