ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள வல்லுநர்கள் கூறும் சிறந்த வழிகள்!

குளிர்காலத்தில் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள வல்லுநர்கள் கூறும் சிறந்த வழிகள்!

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

பொதுவாக குழந்தைகளின் உடலில் குறைந்த அளவு கொழுப்பு இருக்கும். அதே போன்று அவர்களின் உடலும் சிறிதாக இருக்கும். எனவே குழந்தைகளின் உடலில் அதிக வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குளிர்காலம் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்தை தர கூடிய காலமாகும். வெயில் காலத்தை காட்டிலும் பல்வேறு நோய் தொற்றுகள் குளிர் காலத்தில் பரவ வாய்ப்பு அதிகம். காய்ச்சல், சளி, சரும வறட்சி, அதிக குளிர் போன்ற பல்வேறு பாதிப்புகள் குளிர்காலத்தில் ஏற்பட கூடும். பெரியவர்கள் இவற்றை சமாளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருவார்கள். ஆனால், குழந்தைகளை குளிர் காலம் பாதிக்காமல் இருக்க பெற்றோர்கள் பல விஷயங்களை செய்தாக வேண்டி இருக்கும்.

பொதுவாக குழந்தைகளின் உடலில் குறைந்த அளவு கொழுப்பு இருக்கும். அதே போன்று அவர்களின் உடலும் சிறிதாக இருக்கும். எனவே குழந்தைகளின் உடலில் அதிக வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாது. இதனால் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகமாக குளிர செய்யும். மேலும் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமலும் போய் விடும். பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு குளிர் தெரியாமல் இருக்க ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவார்கள். சிலர் 2 முதல் 3 அடக்கு வரை ஆடைகளை அணிவித்து விடுவார்கள்.

இது போன்ற அதிக அளவிலான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவதால் அவர்களுக்கு அசவுகரியத்தை தரும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு சௌகரியத்தை தந்தால் மட்டுமே பல அடக்கு ஆடைகளை அணியலாம். இவற்றுடன் காலிற்கு சாக்ஸ், தலைக்கு கேப் மற்றும் மிட்டன்களை குழந்தையின் வசதிக்கு ஏற்ப அணியலாம். வெளி புறத்திற்கு குளிர் ஏற்படுவதை தடுப்பதை காட்டிலும் குழந்தைகளை உள்ளிருந்தே பாதுக்காக்க வேண்டும்.

அதிக குளிர் தாக்காமல் இருக்க தாய்மார்கள் தங்களின் உணவில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், சூப், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும் அவர்களை உள்ளிருந்தே வெதுவெதுப்பாக வைக்க இது பெரிதும் உதவும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் குழந்தையின் ஆளுமை திறனை வளர்க்க உதவும் 5 வழிகள்..!

குளிர் அதிகம் இருக்கும் காலங்களில் குழந்தைகளை வெயிலில் சிறிது நேரம் காட்டலாம். அதே போன்று மாலை வெயிலும் குழந்தைகளுக்கு நல்லது. இரவு நேரத்தில் குளிர் அதிகரிப்பதால் குழந்தைகளை குளிர் அதிகம் இருக்காதபடி பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜன்னல், கதவுகள் மூடிய படி இருப்பது நல்லது. மேலும் அறையின் தட்பவெப்ப நிலையை சீரான அளவில் பார்த்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளை குளிர் அதிகம் தாக்காமல் இருக்க ஆயில் மசாஜ் தரலாம். இது அவர்களின் எலும்புகளை வலுவாக்கும். அத்துடன் வெதுவெதுப்பான உணர்வை தரக் கூடும். சளி, இரும்பல் குழந்தைகளை அண்டாமல் இருக்க தாய்மார்கள் தங்களை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும். தாய்மார்களிடம் இருந்து தான் குழந்தைகளுக்கு சளி பரவ கூடும். எனவே இந்த கொரோனா காலங்களில் கூட்டம் உள்ள இடங்களில் செல்வதை தவிர்க்கலாம்.

First published:

Tags: Baby Care, Parenting Tips, Winter