• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Child Health : கொரோனாவிற்கு பிறகு குழந்தைகளின் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறியுள்ளது -அதிர்ச்சி தகவல்

Child Health : கொரோனாவிற்கு பிறகு குழந்தைகளின் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறியுள்ளது -அதிர்ச்சி தகவல்

காட்சி படம்

காட்சி படம்

Corona : கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே குழந்தைகளின் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது.

  • Share this:
கொரோனாவின் தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உடல் ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்திருப்பது நம்மால் கண்கூடாக உணர முடிகிறது. அதே போன்று உளவியல் ரீதியாகவும் நாம் இந்த கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நாம் கண்டறிவது சற்று கடினம் என்றாலும் அவ்வப்போது நமக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால், குழந்தைகளை நினைத்து பாருங்கள்.

கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே குழந்தைகளின் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. பிற குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்த்து, எப்போதும் மொபைலில் நேரம் செலவழிக்க தொடங்கி விட்டனர். அதே போன்று வீட்டில் உள்ளவர்களுடன் நேரடியான தகவல் பரிமாற்றமும் குறைந்து வருகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அலுவலக வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய தொடங்கிய பின், பல உளவியல் ரீதியான மாற்றங்களை இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர். பெற்றோர்களாக மட்டும் இல்லாமல், அலுவலக வேலை செய்வோர்களாகவும், குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுப்பவர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் இவர்களின் அன்றாட வாழ்வியல் முற்றிலுமாக மாறி உள்ளது. இந்த வாழ்வியல் மாற்றம் குழந்தைகளை நேரடியாக பாதிக்கிறது என ஆய்வாளர் பிராங்கெல் கூறுகின்றார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தன்னையே சரியாக கவனித்து கொள்ள இயலாத பெற்றோர்கள், தன் குழந்தைகளை கவனித்து கொள்வதில் மிக பெரிய சிரமம் உள்ளதாக இந்த ஆய்வில் அவர் தெரிவித்துள்ளார். மன அழுத்தம், பதற்றம், குடும்ப உறவில் சிக்கல் போன்ற உளவியல் பிரச்சனைகள் தாய், தந்தை இருவருக்கும் அதிகம் உருவாகியுள்ளது. இதனால் இவர்கள் விரைவிலே சோர்வடைந்து விடுகிறார்கள்.

எனவே குழந்தையை கவனித்து கொள்வதில் பெரிய சிரமம் உண்டாகிறது. இதனால் குழந்தைகளின் உணவு பழக்கமும் பாதிக்கப்படுகிறது. நாள் முழுக்க சோர்வாக உள்ள பெற்றோர்கள் பிடிவாதமாக உள்ள குழந்தைக்கு உணவு ஊட்டுவதில் மேலும் சோர்வாகின்றனர். எனவே குழந்தைக்கான ஊட்டச்சத்துக்கள் சரிவர சென்று சேர்வதில்லை. கொரோனா அலை குறைந்திருந்தாலும் இந்த பிரச்சனை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என ஆய்வாளர் பிராங்கெல் குறிப்பிடுகிறார்.

also read : 3% குழந்தைகளை பாதிக்கும் Obstructive Sleep Apnea.. எதனால் ஏற்படுகிறது? எப்படி சிகிச்சை அளிக்கலாம் ?

இதே நிலை தொடர்ந்தால் குழந்தைகளின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படும். அத்துடன் அவர்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறி ஆகிவிடும். குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளால் பல உளவியல் மாற்றங்கள் அவர்களிடம் உண்டாகின்ற போது, இது போன்ற உடல் ரீதியான மாற்றங்கள் மேலும் தவறான சூழலை அவர்களுக்கு உருவாக்கும்.

இந்த ஆய்வை 2020ம் ஆண்டு 2 முதல் 7 வயது வரையுள்ள 119 பெற்றோர்களை கொண்டு பிராங்கெல் மற்றும் அவரின் குழுவினர் ஆய்வு நடத்தினர். குழந்தைகளின் உணவு பழக்கத்தை நாம் சரிவர கவனிக்கவில்லை என்றால் இது ஒரு பெரிய பேரழிவை ஆரோக்கியம் சார்ந்து ஏற்படுத்தும் என இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்தனர். இதை படித்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் அவசியம் தங்கள் குழந்தையின் உணவு பழக்கத்தை கவனித்து கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: