ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Children's day 2022 : இந்நாளில் இந்த 4 விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்ல மறக்காதீங்க..!

Children's day 2022 : இந்நாளில் இந்த 4 விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்ல மறக்காதீங்க..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் தாங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை எப்போதும் உணர்ந்திருக்க வேண்டும்.நாம் தான் அவர்களின் முதல் வகுப்பறை நம்மிடமிருந்தே அவர்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள தொடங்குகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம். வளரும் குழந்தைகளின் வாழ்க்கை என்பது சமுதாயத்தில் முக்கியப்பங்கு ஆற்றுகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் உள்ளன. அவற்றை அவர்களின் மனம் கோனாதவாறு அவர்களுக்குள் கடத்துவது அவசியம். இந்தக்காலத்தில் குழந்தைகள் மிக விரைவாக நாம் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளகின்றனர்.எனவே அவர்களிடம் பேசும்பொழுது அரவணைப்புடன் நடந்துக்கொள்வது அவசியமாகிறது.

  ஒரு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பு அந்த பிள்ளைகளின் வாழ்வை சிறப்பாக்கும் விலைமதிப்பற்ற காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் உண்மையாகவே மகன்கள் எப்போதும் தங்கள் அப்பாக்களைப் போலவே வளர விரும்புகிறார்கள். மகள்கள் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலும் அம்மாவையே பிரதிபலிக்கின்றனர்.வளரும் விதம், நடத்தை, தோரணை உள்ளிட்ட பலவற்றில் அவர்கள் தங்கள் பெற்றோர்களையே பிரதிபலிக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியவை சில

  மனிதர்களை மதிப்பது  : ஒரு தந்தை தனது மகனுக்கு கற்பிக்க வேண்டிய முக்கியமான முதல் விஷயம் அடுத்தவரை எப்படி மதிப்பது என்பது தான். அதிலும் எதிர்பாலினத்தை எந்த சூழலிலும் மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை கற்று கொடுப்பது அதி முக்கியமானது. எதிர்காலத்தில் மகனின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்க வேண்டும், சமூகத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்றால் ஒரு தந்தை முதலில் தன் மகனுக்கு அவரது தாய், சகோதரி மற்றும் தோழியரை மதிக்கக் கற்று கொடுக்க வேண்டும். அதே போல் மகளுக்கு ஆணின் உலகத்தையும் பொறுப்புகளையும் உணர்த்த வேண்டும்.

  வாழ்க்கைக்கு பொறுப்பு : எல்லோரும் பின்பற்ற வேண்டிய முக்கிய வாழ்க்கை அறிவுரை அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு. வாழ்வில் கடினமான சோதனை காலங்களை எதிர்கொள்ளும் போது அந்த சூழலுக்கு அவரவரே பொறுப்பேற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும் என்ற முக்கிய பாடத்தை ஒரு பெற்றோர் குழந்தைகளுக்கு கட்டாயம் கற்று தர வேண்டும். ஏனென்றால் இது ஒருவர் சொந்தமாகக் கற்றுக் கொள்ளும் பாடமல்ல என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  தற்காத்துக் கொள்வது : வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக செல்லாது என்பதை அறிவோம். சிக்கல் நிறைந்த வாழ்க்கையை கடக்கும் போது ஒருவர் சுயமாக தனக்கு தானே எழுந்து நிற்பது எப்படி , வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதை கற்றிருப்பது அவசியமாகிறது. ஒரு குழந்தை தன் தந்தையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று. சுயநலம் மிக்கவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் நிறைந்த உலகம் இது என்பதால் அவர்களிடமிருந்து தன்னை தானே எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை ஒரு பெற்றோர் குழந்தைகளுக்கு நிச்சயம் கற்பித்தாக வேண்டும்.

  சுய பராமரிப்பு : கடினமான நேரங்களில் கூட வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும். எனவே கஷ்ட காலங்களில் தங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பதை பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். சுய பராமரிப்பு என்பது அனைவரும் பயிற்சி பெற வேண்டிய ஒரு விஷயம். குடும்ப பாரங்களை வெகுவாக சுமக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுய பராமரிப்பு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.இதை கண்டிப்பக அறிவுருத்த வேண்டும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Children's Day, Kids Care, Parenting