Home /News /lifestyle /

குடும்ப வறுமை குழந்தைகளின் அறிவுத் திறனை பாதிக்குமா..? ஆய்வு தகவல்

குடும்ப வறுமை குழந்தைகளின் அறிவுத் திறனை பாதிக்குமா..? ஆய்வு தகவல்

குழந்தை உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்

குழந்தை உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்

Children Brain Activity | குறைந்த வருவாய் உடைய தாய்மார்களின் குழந்தைகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஓராண்டுக்கு அந்த தாய்மார்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மாதாந்திர பண உதவியை வழங்கிய நிலையில், அந்த குழந்தைகளின் சிந்தனை மற்றும் கற்றல் ஆகியவை மேம்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
”பிறக்கும்போதே வெள்ளித் தட்டில் பிறந்த குழந்தை இது’’ என ஒரு சிலரை நம்மூரில் புகழ்வது வழக்கம். இதேபோல, “குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டு பட வேண்டும்” என்ற பழமொழியும் உண்டு. பணத்துக்கும், செல்வத்திற்கும் உள்ள மதிப்பை நினைவூட்டுவதாக இந்த வாசகங்கள் உள்ளன.

பிறக்கும்போதே வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்துவிட்டால், அவர்களுக்கு ஊட்டச்சத்து, சிறப்பான கல்வி, சௌகரியமான வாழ்க்கை என அனைத்தும் கிடைத்துவிடும் என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் கூட இதை உறுதி செய்வதைப் போலத்தான் அமைந்துள்ளன.

குறைந்த வருவாய் உடைய தாய்மார்களின் குழந்தைகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஓராண்டுக்கு அந்த தாய்மார்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மாதாந்திர பண உதவியை வழங்கிய நிலையில், அந்த குழந்தைகளின் சிந்தனை மற்றும் கற்றல் ஆகியவை மேம்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.



நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற இதழில் இந்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக வறுமையை குறைப்பதன் மூலமாக ஒரு குழந்தையின் அறிவாற்றல் நடவடிக்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை இது விவரிக்கிறது.

Also Read : குழந்தைகளுக்கு ஒமைக்ரான் வேரியன்ட் அதிக பாதிப்பை உண்டாக்குமா..? மருத்துவர்களின் பதில்

இதுகுறித்து கிம்பர்லி நோபல் என்ற மூத்த ஆராய்ச்சியாளர் கூறுகையில், “குழந்தைகள் வறுமையில் வளர்ந்தால், பள்ளிக் கல்வியில் பாதிப்பு, குறைவான வருமானம் மற்றும் உடல்நலக் குறைபாடு போன்றவை ஏற்படும் என்று பல ஆண்டுகளாக நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.



எனினும், இந்த வேறுபாடு என்பது நிதி ஆதாரங்களுக்கான பற்றாக்குறை காரணமாக வந்ததா அல்லது வறுமையுடன் தொடர்புடைய பொதுவான காரணங்கள் காரணமாக வந்ததா என்பதை இதுவரையிலும் கண்டறிய முடியவில்லை. ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு, வறுமையை குறைப்பதன் மூலமாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டில் நோபல் மற்றும் அவரது குழுவினர் அமெரிக்காவின் 4 முக்கிய நகரங்களில் உள்ள குறைந்த வருவாய் உடைய 1,000 தாய்மார்களையும் மற்றும் அவர்களது பச்சிளம் குழந்தைகளையும் ஆய்வுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

Also Read : குழந்தைகள் அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

இதில் ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் டாலர்கள் வருவாய் கொண்ட தாய்மார்களும், இதிலிருந்து 20% வரை கூடுதலாக வருவாய் கொண்ட தாய்மார்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளுக்கு ஒரு வயதான போது ஆய்வாளர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று, மூளை வளர்ச்சித் திறனை கண்டறியும் மருத்துவ கருவி உதவியுடன் ஆய்வு செய்தனர்.



ஆய்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்த 1,000 குழந்தைகளில் அவர்களால் 435 குழந்தைகளிடம் பரிசோதனை மேற்கொள்ள முடிந்தது. இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று காலம் ஏற்பட்டதால், ஆய்வாளர்கள் மற்ற குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும், பரிசோதனை செய்யப்பட்ட 435 குழந்தைகளில் பலருக்கு சிந்தனை மற்றும் கற்றல் தொடர்பான மூளை செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

Also Read : குழந்தைகளிடம் இந்த சொற்களை பயன்படுத்தவே செய்யாதீங்க! பெற்றோருக்கான கைட்லைன்

மூளை செயல்திறன் அதிகரித்த குழந்தைகள் அனைவருமே அதிக உதவித்தொகை பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் ஆவர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதேசமயம், குறைந்த உதவி தொகை பெற்றுக்கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு மூளைத்திறன் செயல்பாடு சற்று குறைவாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
Published by:Selvi M
First published:

Tags: Children, Kids Care

அடுத்த செய்தி