பெற்றோர்களே உஷார்: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

babies bron during pandemic

ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு, அவரது வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் முக்கியமானவை.

  • Share this:
கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துகள், குறைபாடுகள் குறித்து புதிய ஆய்வு ஒன்றில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை கொரோனா காலத்தில் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர், பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு ஒன்று தற்போது அது குறித்த புள்ளிவிவரங்களையும், பல அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளின் ஐக்யூ (திறனாய்வு) அளவு மிகவும் குறைந்துள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது.

Also read:  தங்கம் வென்ற தங்க மங்கையை கெளரவப்படுத்த தவறிய தமிழக அரசு!

கோவிட் -19 தொற்றுநோயின் போது பிறந்த குழந்தைகளை, தொற்றுநோய்க்கு முன் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அக்குழந்தைகளின் வாய்மொழி, வாய்வழி மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்திறன் குறைத்துள்ளதாக அமெரிக்க ஆய்வு கூறியுள்ளது. குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியில் உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்னர் குழந்தைகளிடையே IQ level என அழைக்கப்படும் திறனாய்வு அளவு 100க்கு அருகில் இருந்ததாகவும், கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளிடையே IQ level 78 என்ற அளவுக்கு குறைந்துவிட்டதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also read:   2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் லிஸ்ட்!

ரோட் தீவைச் சேர்ந்த 672 குழந்தைகளிடையே இந்த சோதனை நடத்தப்பட்டது, இதில் ஜனவரி 2019க்கு முன்னர் பிறந்த 308 குழந்தைகள், ஜூலை 2020க்கு பிறந்த 188 குழந்தைகளும், ஜனவரி 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் பிறந்த 176 குழந்தைகளும் அடங்குவர். ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிவாற்றல் அல்லது வளர்ச்சி குறைபாடுகள் இல்லை. ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு, அவரது வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் முக்கியமானவை.

IQ level குறைய காரணம் என்ன?

கோவிட் -19 நம் வாழ்வில் அதன் பிடியை இறுக்கி, பள்ளிகள், நர்சரிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மூடுவதால், குழந்தைகள் மற்றும் பெற்றோரின் வாழ்க்கையும் கணிசமாக மாறிவிட்டது.

Also read:   மத உணர்வுகளை காயப்படுத்தி விளம்பரம் – பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிர்ப்பு!

வீட்டிலிருந்தே பணியாற்றும் பெற்றோர், வேறு பொருளாதார சிக்கல்கள் இல்லாத பெற்றோருக்கு, குறிப்பாக வீட்டிலிருந்து பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் பிள்ளைகள் மற்றும் வேலை என இரண்டு விதமான பொறுப்புகளும் அதிகரித்திருக்கிறது. இவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் கூடுதல் சுமை காரணமாக குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிட முடியாமல் உள்ளனர். அவர்கள் குழந்தைகளுடன் பேசுவதும் குறைந்திருப்பதாக பிரவுன் பல்கலைக்கழக குழந்தை மருத்துவம் பிரிவின் துணை பேராசிரியரும் இந்த ஆய்வினை தலைமை தாங்கியவருமான சீன் டியோனி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதிப்புகள் தற்காலிகமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் தொற்றுநோய்க்குப் பிறகு, நிலைமை இயல்பு நிலைக்கு வரும்போது, ​​விஷயங்கள் தானாகவே திரும்பி வந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
Published by:Arun
First published: